Tuesday, June 25, 2013

லெப்.கேணல் மகேந்தியின் 7ம் ஆண்டு நினைவு நாள் -2013

மன்னார் மாவட்டத்தில் காவியமான லெப்.கேணல் மகேந்தி, லெப்.கலைமாறன், லெப். இளங்கோ, லெப்.குட்டிமணி மற்றும் மட்டக்களப்பில் காவியமான கப்டன் ரமணிதரன் ஆகிய மாவீரர்களின் 7ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
மன்னார் மாவட்டம் வெள்ளாங்குளம் பகுதியில் 10.06.2006 அன்று சிறிலங்கா படைகளின் ஆழ ஊடுருவும் படைப்பிரிவு நடாத்திய கிளைமோர் தாக்குதலில்

மன்னார் மாவட்ட படைத்துறைத் தளபதி
லெப்.கேணல் மகேந்தி
இராசு மகேந்திரன்
கெருடாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் கலைமாறன்

சுப்பிரமணியம் நந்தகுமார்
வெள்ளாங்குளம், மன்னார்

லெப்டினன்ட் இளங்கோ

இராசரத்தினம் விவேகானந்தன்
கைதடி, நாவற்குழி, யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் குட்டிமணி

மணியம் மகேஸ்வரன்
யோகபுரம், மல்லாவி
ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.
இதேநாள் மட்டக்களப்பு மாவட்டம் திகிலிவெட்டைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் குறிசூட்டுத்தாக்குதலில்

குடும்பிமலை பகுதி அரசியற்துறைப் பொறுப்பாளர்
கப்டன் ரமணிதரன்
வடிவேல் கங்கநாதன்
திகிலிவெட்டை, மட்டக்களப்பு
என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

No comments:

Post a Comment