உரிமையோடு சுடரேற்றி உறுதிஎடுக்கும் மாவீரர் நாள்
1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது.அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழிற்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மயிரிழை வேகமெடுத்துள்ளது. சோகநதிகளாய் தமிழர் கண்ணீரும் சேர்ந்து பெருக்கெடுத்துப் பாய்கிறது. ஆறறோரத்து அகதிமுகாம்கள், வயல்மேட்டின் புற்றுப்பிட்டிகள், வீதியோரங்களென விரிந்திருக்கும் இடப்பெயர்வின் துயர வாழ்வுக்குள்ளும் ஏதோ ஒரு திடமான நம்பிக்கை...
"எங்களுருக்கு மீண்டும் செல்வோம்" "அந்த மகிழ்வான வாழ்வுகையில் கிட்டும்" "நாங்கள் கொடுத்திருக்கும் விலை கொஞ்சநஞ்சமல்ல." "போட்ட முதலை செலவாய் எண்ணிவிட முடியாது அறுவடை எடுத்துத்தான் ஆகவேண்டுமென்ற கட்டாயம் எங்களுக்கு..." என்ற உண்ணத்து நம்பிக்கைகளும் உணர்வுகளும் எம்மை வலுவாகவே பற்றி நிற்கின்றன.
இந்தநிலையில் உணர்வுகளில் உறுதி ஏற்றிக்கொள்வதற்காய் எம்முன்னே விரிகிறது இன்றைய நாள் கார்த்திகை 27, மாவீரர்களுக்காய் எடுக்கப்படுகின்ற பெருவிழா அல்ல, அவர்கள் நினைவிடயங்களின் முன்னே உறுதி ஏற்றிக்கொள்கின்ற உன்னத நாள் எங்கள் நம்பிக்கைகளின் மகத்துவங்களாய் மண்ணில் உறங்கும் மானிட தெய்வங்களுடன் மனம்விட்டுப் பேசும் உயிர்ப்புநாள், இந்த நாளுக்காக இன்று தமிழர் மனங்கள் மனமுருகி நின்கின்றன.
சிங்களப் பேரினவாத இனமொன்றினால் அதன் அரச இயந்திரத்தாலும் சிறுபான்மைத் தமிழினம் அழிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் தவிர்க்க முடியாத தெரிவாய் ஆயுதத்தைக் கொண்டு அழிப்பவனை அழிக்கும் எமது விடுதலைப்போராட்டம் தொடங்கியது. படைவளம், படைப்பலம் கொண்ட ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராய் ஒரு சில உணர்வுள்ள தமிழ் இளையோரால் தொடங்கப்பட்டதே இந்த விடுதலைப்போராட்டம், ஆட்பல ஆயுதப்பல ஒப்பீடுகளுக்கு அப்பால் எந்தவகைத் தியாகத்தையும் செய்யத்துணிந்தெழுந்த போராளிகளின் மனபலம் தனிப்பெரும் சக்தியாகவே தமிழரைக் காத்து நின்றது. அந்தக் காப்பு சகத்திகளின் சாட்சியாக 22000 இற்கு அதிக மாவீரர்களை இந்த மண்ணிலே விதைத்து இன்று உறுதிபெற்று நிற்கின்றோம்.
ஒவ்வொரு மாவீரரின் உயிர்த்தியாகமும் ஒரே இலட்சியத்தைக் கொண்டதெனினும் அவர்களின் தியாகவடிவங்கள் தனித்துவமானவை."எனது மரணத்தின் பின்னால் இந்த மண் மகிழ்வான வாழ்வைப்பெறும் என்ற நம்பிக்கையில் போகிறேன்" என சொல்லிப்போன கரும் புலி மாவீரர்களினதும் "எனது வித்துடலைத் தாண்டித்தான் எதிரி எம் மண்ணை ஆக்கிரமிக்கமுடியும்" என இறுதிவரை உறுதியுடன் போரிட்டு வீழ்ந்த மாவீரர்களினதும், தாய் மண்ணின் இரகசியத்தைக் காப்பதற்காய் கடலிலும் தரையிலுமாக தம்மைத்தாமே மாய்த்துக்கொண்ட மாவீரர்களும் என மாவீரர்களின் தியாகப்பதிவுகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை.
அந்த அத்தனை மாவீரர்களினதும் வீரச்சாவு நிகழ்ந்த நாட்களும் வேறுபாட்டவை. எனினும் ஓரே இலட்சியத்திற்காய் விதையாகிப்போன மாவீரர்களை நினைவுகொள்ள கார்த்திகை 27ஐ தெரிவுசெய்த சம்பவமும் எமது விடுதலைப்போராட்டத்தில் தனிப்பதிவாய் அமைந்தது.ஒரு சில போராளிகளாய் உருவாகி பரந்திருக்கின்ற எதிரிகளின் கண்களில் மண்ணைத் திருக்கின்ற எதிரிகளின் கண்களில் மண்ணைத் தூவுp போராட்டப் பாதையை செப்பனிட்ட காலமது. அந்தக் காலப்பகுதியில் தான் விடுதலைப்போரின் முதல் வித்தொன்று 1982.11.27 அன்று லெப்.சங்கராக வீழ்ந்தது.
லெப்.சங்கரின் பின்னால் பலவடிவங்களில் மாவீரர்களின் தியாகப் பயணங்கள் பதிவாகி வருகின்றன. இலட்சியத்தில் மாற்றம்பெறுகின்ற எமது விடுதலைப்போரின் ஒவ்வொரு மாற்றங்களிலும் வித்தியாசமான தியாக வடிவங்கள் பிரசவித்திருக்கின்றன. 1987 ஆம் ஆண்டு யாழ்குடா வடமராட்சியை முற்றுமுழுதாய் ஆக்கிரமித்துவிடவேண்டுமென்ற துடிப்புடன் படைநடவடிக்கையை மூர்க்கமாக முன்னெடுத்த சிங்களப் படைகளுக்கு கரும்புலி கப்டன் மில்லர் நெல்லியடி மத்திய மகாவித்தியாலய படைமுகாமில் கொடுத்த கரும்புலித் தாக்குதல் அன்றைய கால சூழ்நிலையே மாற்றிப்போடும் அளவிற்கு வீரப்பதிவு ஒன்றை எமது போராட்டத்திற்கு தந்திருந்தது.
அந்த ஒரு மாவீரனின் உயிர்க்கொடை சிங்கள தேசத்தின் அத்தனை வீரிய இராணுவ மமதையையும் ஒரே நொடியில் அதலாபாதாளத்தில் வீழ்த்தியது. அந்த மாற்றத்தால் அப்போதைய ஜெ.ஆர்.அரசு இந்தியாவுடன் ஒப்பந்தம் ஒன்றிற்கு செல்லவேண்டி கட்டாயம் வந்தது என்பது வரலாறு.
அதன்பின் இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஒன்று உருவாக அமைதிப்படை என்ற பேரில் இந்திய இராணுவம் எமது தாயக மண்ணில் வந்திறங்கியது. தமிழர்களின் நிரந்தரத் தீர்விற்கு வழிகோலாத அந்த ஒப்பந்தம்குறித்தும், இங்குவந்திறங்கிய அமைதிப்படையின் சுயவடிவம் குறித்தும் தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்தியாகவேண்டிய தருணமது. அமைதிப்பேச்சுக்கள் உடன்பாடு நிர்ப்பந்தங்களென அமைந்த அந்த சூழலில் பொதிந்துகிடக்கும் பின்னிலை அபாயங்கள் தமிழ்மக்களுக்கு சாதகமற்றதாகவே இருந்தது.
இந்நிலையில் இந்திய அரசின் உண்மைத்தோற்றத்தையும் தமிழீழ பகுதி எங்கும் ஆயுதங்களுகடன் குவிந்து கிடக்கும் இராணுவப் பிரசன்னத்தையும் வெளிச்சம் போட்டுக்காட்டும்தருணத்திற்காய் எமது ஆயுதம் தாங்கிய விடுதலைப்போராட்டம் அன்று அகிம்சைப் போராட்டம் ஒன்றை நடத்தவேண்டியதாயிற்று. நல்லூர் கந்தன் முன்றலில் லெப்.கேணல் திலீபன் தமிழ்மக்களின் பிரச்சினைத் தீர்விற்கான ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாநோன்பை தொடக்கினான்.
இலட்சக்கணக்கில் மக்கள் கண்ணீருடன் திரண்டிருந்த 12 நாட்கள் தொடர்ந்த அந்த அகிம்சைப் போருக்கு இந்தியா இறுதிவரை செவிசாய்க்கவில்லை. அந்த மக்கள் முன்னிலையிலேயே அந்த அகிம்சை நெருப்பு அணைந்துபோனது. ஆனால் தமிழர் மனங்களில் இலட்சிய நெருப்பு வேகமெடுத்தது. அந்தத் தியாக மரணம் எமது விடுதலைப்போராட்ட வீரர்கள், வல்லரசு ஒன்றுடன் பொருதும் மனஉறுதியை பெற்றுத்தந்தது. அச்சம்பவத்திற்குப் பின்னே இடம்பெற்ற இந்திய இராணுவத்துடனான மோதல் எமது விடுதலைப்போராட்டத்தின் முதல் பெண் மாவீரரை இந்த மண்ணில் விதையாக்கியது.
பெண் அடிமைத்தனத்தில் கட்டுண்டு கிடந்த எமது சமூக அமைப்பிலிருந்து போராடும் திறன்கொண்ட வல்லமைபடைத்த பெண்களை உருவாக்கிய வரலாற்றுக்கு சான்றாய் 10.10.1987 அன்று இந்திய இராணுவத்துடனான மோதலின்போது 02 ஆம் லெப்.மாலதி என்ற முதல்பெண் மாவீரர் தன் உயிரை ஈந்து வரலாற்றில் பதிவானாள். இவ்வாறாக எமது மாவீரர்களின் வீர தியாகப் பதிவுகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை, அந்தவகையில் தமீழ விடுதலைப்புலிகள் என்ற போராளிக்கட்டமைப்பிற்கு அப்பால் மக்கள் படைக்கட்டுமானத்தால் எழுச்சிகொணட, எல்லைப்படை , சிறப்பு எல்லைப்படை, போர் உதவிப்படை, துணைப்படை போன்றவற்றின் ஊடாகவும் எமதுவிடுதலைப்போராட்டத்தின் மாவீரர் பதிவுகள் நீள்கின்றன.
அவை தவிர சிறப்புப்படை, காவல்துறை படைக@டாகவும் தமதுஉயிர்களைத் தியாகம் செய்து மாவீரர்களாய் உறங்கும் மகத்துவங்களையும் இந்த மண்பெற்றிருக்கிறது. இந்த அத்தனை மாவீரர்களுக்கும் தனிச் சிறப்பான பக்கங்கள் உண்டு. ஒவ்வொரு மாவீரர் குறித்த பதிவுகளையும் நாம் வரலாறாய் பார்கின்ற இச்சந்தர்ப்பத்தில் தாயகம் கடந்து எங்கெங்கோவெல்லாம் சென்று சாதனை படைத்துவிட்டு சரித்திரமாய் உறங்கும் முகம் காட்டா கரும்புலி மாவீரர்களின் தியாகங்கள்உச்சத்தைத் தொட்டு நிற்கின்றன.
சாதனைகளை மட்டுமே எமக்காய் சாற்றிவிட்டு சாதனைகளை மட்டுமே எமக்காய் சாற்றிவிட்டு சந்தனப்பேழையும் காணாது முகம்மறைத்து, முகவரி மறைத்து வெடியாகிப்போன அந்த மாவீரர்களின் தியாகம் பற்றியும் அவர்களின் உணர்வுகள் பற்றியும் யாரும் மதிப்பீடு செய்துவிட முடியாது.இவ்வாறாக இந்த மண்ணிற்காய் விதையாகிப்போன பல்லாயிரம் மாவீரர்களின் நினைவிடத்தின் முன்னின்று நாம் எதைப் பேசப்போகின்றோம்.
எதை நினைத்து சுடர் ஏற்றப்போகின்றோமென்ற கேள்விகளுக்கு விடைகாணவேண்டியவர்களாக நாமே உள்ளோம்இத்தனை விதைப்புகளுக்குமான அறுவடை எமக்கானது மட்டுமே. அந்த அறுவடையை நாம்தான் பெற்றாகவேண்டுமென்ற உறுதிப்பாடை ஒவ்வொரு தமிழனும் தமிழச்சியும் எடுத்தாகவேண்டும். இதுவே அந்த மாவீரர்களின் இலட்சியக்கனவை நிறைவேற்ற உதவும்.
ஏனைய நாடுகளில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும், தமிழீழ மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும் பெரும் வேறுபாடுகளுண்டு.
ஏனைய நாடுகளில் எல்லாம் விடுதலைக்குப் பின் அமைந்த அரசுகளால் விழாக்கள் எடுக்கப்படுகின்றனவே தவிர போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலங்களில் விழாக்கள் எடுக்கப்படுவதில்லை.
ஆனால் விடுதலைப் போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் எதிரியின் அச்சுறுத்தல்கள், தாக்குதல்களுக்கிடையிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கிடையிலும் போராட்டத்தையும் நடத்திக் கொண்டு தமிழீழ மக்கள் மண்ணின் விடிவிற்காகத் தம் இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களை எழிற்சியோடு நினைவு கூர்ந்து வருகின்றனர். மாவீரர்களின் பெற்றோர்கள் குடும்பத்தினரை போற்றிச் சிறப்பிக்கப்படுகின்றனர்.
வீரச்சாவடையும் தமிழீழ மாவீரர்களது வித்துடல்கள் மாவீரர் துயிலுமில்லங்களில் கல்லறைகளில் விதைக்கப்பட்டும், நடுகற்கள் நாட்டப்பட்டும் வழிபாடியற்றப்படுகின்றது.
மாவீரர் நாளில் மாவீரரின் பெற்றோர், குடும்பத்தினர் மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டு அன்று தமிழீழ மக்களால் போற்றிமதிப்பளிக்கப்படுகின்றனர்.
உலகிலே எங்குமே மாவீரர் நாள் நிகழ்வுகள் போல மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள், அவர்களின் பெற்றோரும், குடும்பத்தினரும் போற்றப்பட்டு மதிப்பளிக்கப்படும் நிகழ்வுகள் நடைபெற்றதாகவோ, நடைபெறுவதாகவோ வரலாறுகள் இல்லை.
மாவீரர் எழுச்சி நாட்களின் நிகழ்வுகளும், நடைமுறை ஒழுங்குகளும்
1989ஆம் ஆண்டில் நவம்பர் 27ஆம் நாளை மாவீரர் நாளாகவும் 1990ஆம் ஆண்டில் இருந்து 1994ஆம் ஆண்டுவரை நவம்பர் 21ஆம் நாளிலிருந்து 27ஆம் நாள் வரை மாவீரர் எழுச்சியாகவும்(வாரமாகவும்) தமிழீழ மக்கள் எழுச்சி நிகழ்வாக நடைபெற்று வந்த தமிழீழ மாவீரர் எழுச்சி நாள் நிகழ்வுகள் 1995ஆம் ஆண்டிலிருந்து நவம்பர் 25ஆம் நாள் முதல் 27ஆம் நாள்வரை மூன்று நாட்களில் எழுச்சி நாட்களாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
Dec 1, 2008
Nov 30, 2008
உள்ளிருந்து ஒரு குரல் 4
வீதிக்கு இடப்புறம் வேலை முடிவடையாமல் குறையில் நின்ற போர் முன்னரங்கில் தங்கநிலாவோடு அன்புமணியும் அணியினரும் நின்றனர். அன்று நெடுஞ்சாலையிலிருந்து இடப்புறம் உள்நோக்கிய திசையை நோக்கி போர் முன்னரங்கு வழியாகத் தங்கநிலா போய்க் கொண்டிருந்தார். காலையில் நடக்கத் தொடங்கியவர் இடம் பார்த்துவிட்டு, தன் கட்டளை மையத்துக்கு வந்துசேர மதியம் கடந்துவிட்டது.தங்கநிலாவுக்கு நேர்முன்னே அணியொன்றுடன் பிளாட்டூன் முதல்வி தயாரஞ்சினி நின்றிருந்தார். இடப்புற பின் வளைவுப் பகுதியில், (வெள்ளாங்குளம் பண்ணையடியில்) அன்புமணி நின்றார். மதிய உணவு வந்துவிட்டது. காலையிலும் சாப்பிடாத தங்கநிலாவுக்கு நல்ல பசி, உணவுப் பொதி ஒன்றை எடுத்தார்.
தயாரஞ்சினியின் அணிக்கான உணவை எடுக்க கோவழகியோடு சிலர் கட்டளை மையத்துக்கு வந்து சேர்ந்தனர். தங்கநிலாவோடு உரையாடியபடியே தமக்கான உணவைப் பிரித்து எடுத்துக்கொண்டு, போர் முன்னரங்கை நோக்கிப் புறப்பட்டனர். போகும் வழியிலும் வரும் வழியிலும் தேடுதல் செய்யும் கூர்விழிகள் அவர்களுடையவை. கத்தி முனையில் நடக்கும் வாழ்வு களமுனைப் போராளிகளுடையது. வென்றால் வாழ்வு. நூலிழை சறுகினாலும் சாவு.விழிகள் விழிப்புடனிருக்க, கோவழகியின் சிந்தனை எங்கோ போனது. நூலிழை சறுகினால் சாகும் வாழ்வு போராளிகளுக்கு மட்டுமானதாக அல்லாமல், இன்று எம் மக்களுக்கானதுமாகவல்லவா மாறிவிட்டது. வென்றால் மட்டுமே வாழ்வு. வாழ்வதற்காக வெல்வோம். வெல்வதற்காகப் போராடுவோம்.போராடும் உறுதி மக்களுக்கிருப்பதை கோவழகி நன்கறிவார். உறுதியில்லாமலா பகைவனின் காலடியில் வாழக்கூடாது என்று ஊரோடெழும்பிப் போனார்கள்? உறுதியில்லாமலா ஒழுகும் வானின் கீழே கூரைத்தகடுகளையும் ஓலைகளையும் அடுக்கிவிட்டு, அதன் கீழ் பிஞ்சுக் குழந்தைகளையும் வைத்துக்கொண்டு, ஊர் திரும்பும் கனவோடு காத்துள்ளார்கள்?
இன்னும் எத்தனை கிராமங்கள் இடம்பெயரவேண்டி நேர்ந்தாலும் உறுதி தளரா மக்கள் எம் மக்கள். கோவழகியின் நெஞ்சில் பெருமிதம் பொங்கியது. போர் முன்னரங்கைப் போய்ச் சேர்வதற்கிடையில் உந்துகணை செலுத்தி உட்பட ஏனைய சுடுகலன்களோடு நகர்ந்துகொண்டிருந்த ஆண் போராளிகளின் நீண்ட அணியொன்று கண்ணில் பட, கோவழகி நின்றுவிட்டார். 2ஆம் லெப்.மாலதி படையணியின் எல்லைக்குள் சொல்லாமல் கொள்ளாமல் யாரது?
உந்துகணை செலுத்தியோடு ஆண் போராளிகள் எவரேனும் வந்தார்களா என்று கோவழகி கேட்டவுடனே தங்கநிலாவுக்கு விளங்கி விட்டது. கோவழகி போய்க் கொண்டிருந்த இடத்தின் இயல்பை அறிந்திருந்த தங்கநிலா, முன்னே போய் மறைந்தவர்கள் யார் என்பதை விளக்கி, முன்னரங்குக்குப் போய் தயாரஞ்சினியோடு அணியொன்றைக் கூட்டிக்கொண்டு, மறைப்புகளைப் பயன்படுத்தித் தன்னுடைய கட்டளை மையத்துக்கு வரும்படி பணித்தார். கோவழகி தொடர்புகொள்ளச் சற்று முன்னர் மூன்று ரவைகள் சுடப்பட்ட ஒலிகேட்டு, அது யாரால் எழுப்பப்பட்டது என்று எல்லோரையும் தொடர்பெடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கூட்டிக் கழித்த தங்கநிலா, சண்டை தொடங்குவதற்கு இடையில் சாப்பிடுவோம் என நினைத்து உணவுப் பொதியைப் பிரித்தார். ஒரு பிடி உணவை வாயில் வைப்பதற்கிடையில், கட்டளை மையத்தை நோக்கி பீ.கே.எல்.எம்.ஜி சுடுகலன் ஒன்று தொடர் சூடுகளை வழங்கியது. சூடு வந்த திசையை நோக்கித் தங்கநிலா திரும்பினார். தொகை தொகையாக சிங்களப் படையினர் தென்பட்டனர். தங்கநிலாவோடு நின்ற எல்லோரும் சுடத் தொடங்கினர்.
கனிவிழி தங்கநிலாவிலிருந்து ஐந்து மீற்றர்கள் இடைவெளியில் நின்று சுட்டுக் கொண்டிருந்தார். ஒரு சண்டையில் தன்னைக் காத்து எதிரியைக் கொல்லுதல், தன் சுடுகலனைக் காத்தல், தன் கட்டளை அதிகாரியைக் காத்தல் எனப் பல பணி ஒரு போராளிக்கு இருக்கும். சண்டையை வழிநடத்திக் கொண்டிருந்த தங்கநிலாவைப் பாதுகாக்கும் நோக்கில் சுட்டுக்கொண்டிருந்த கனிவிழி, சிங்களப் படையாளின் பீ.கே.எல்.எம்.ஜி சூட்டிலே விழுப்புண்ணேற்றார்.
கனிவிழியைத் தூக்கிச் செல்லுமாறு மற்றவர்களைப் பணித்துவிட்டு தங்கநிலா நின்றார். ஏறத்தாழ எழுபது மீற்றர்கள் தொலைவுக்குள் எதிரியின் பீ.கே.எல்.எம்.ஜி சுடுநர் தங்கநிலாவை நெருங்கியிருந்தார். உந்துகணைகள் சீறிவந்தன. ஒரு திசையிலிருந்து குண்டுகளும் வீசப்பட்டன. எங்கும் புகையும் புழுதியும் கிளம்பின. தங்கநிலாவுக்கும் ஒன்றும் தெரியவில்லை. தங்கநிலாவையும் ஒருவருக்கும் தெரியவில்லை.வானொலிக் கருவியையும் இணைப்பு இழையையும் இழுத்துக் கொண்டு தங்கநிலா வெளியில் வந்து நின்றார். கட்டளை மையத்தை நோக்கிய உந்துகணைத் தாக்குதல் சற்றும் குறையவில்லை.
கட்டளை மையம் என்ன பிரான்சின் கரையோரங்களில் அடொல்ஃப் ஹிட்லரின் படையினர் அமைத்த நிலக்கீழ் + நிலமேல் அடுக்குகள் கொண்ட கற்களாலான கோட்டையைப் போன்றதா, இந்த அடி அடிப்பதற்கு? ஒரு மரத்தின் அணைவில் அமைக்கப்பட்டிருந்த சிறு தாவரத்தின் கீழே ஒரு மரவாங்கு அவ்வளவே.அதைத்தான் சிங்களப் படையினர் இந்த அடி அடித்துக்கொண்டிருக்க, தங்கநிலா அதிலிருந்து சில அடிகள் விலகி ஒரு வெளியில் நின்று போர் முன்னரங்கப் போராளிகளுடனான தன் தொடர்பைப் பேணிக் கொண்டிருந்தார். அருகில் எவருமின்றித் தனியே நின்ற தங்கநிலாவை உடனே அவ்விடத்தைவிட்டு வெளியேறும்படி மேலான கட்டளை அதிகாரிகளான கீர்த்தியும் சுகியும் பணித்துக்கொண்டிருந்தனர். வானொலிக் கருவியின் இணைப்பு இழைகள், உயரலை வாங்கி எல்லாவற்றையும் கழற்றியெடுக்கவும் முடியாமல், விட்டுவிட்டு வரவும் முடியாமலிருந்த தனது சிக்கலான நிலையை விளக்கிய இவரால் தொடர்ந்து கதைக்கமுடியாமற்போய்விட்டது.
உந்துகணைகளின் வெடிப்புகளால் கிளம்பிக் கொண்டேயிருந்த புழுதியும் புகையும் ஏற்கெனவே இருமலோடிருந்தவரை கதைக்கவே முடியாதளவு கடுமையாக இருமச் செய்ய, சுகிக்கும் கீர்த்திக்கும் இவரின் தொடர்பு சிறிது நேரம் அற்றுப்போனது. குறிப்பிட்ட தொலைவில் நின்ற அதிகாரி அமர்வாணம் தன்னோடு மணிமொழியின் பீ.கே.எல்.எம்.ஜி அணியினரையும் கூட்டிக் கொண்டு ஓட்டத்தில் வந்து சேர்ந்தார்.போர் முன்னரங்கில் நின்ற தயாரஞ்சினியின் அணியினரைப் பாதுகாப்பாகப் பின்னே எடுப்பதற்குத் தனது சிக்கலான நிலையிலும் முயன்றுகொண்டிருந்த தங்கநிலாவை, "அணியை வேறு வழியால் எடுக்கலாம். முதலில் நீ வெளியில் வா" என்று கேணல் யாழினி கடிந்துகொண்டார்.
அவ்விடத்தைவிட்டு வெளியேறும் முடிவெடுத்த தங்கநிலாவால் இப்போது நகரவேமுடியவில்லை. சற்று வலம், இடம் திரும்பினாலும் உடலை ரவை துளையிட்டுச் செல்லுமளவுக்கு சிங்களப் படையினர் நெருங்கி, செறிவான சூடுகளை வழங்கிக்கொண்டிருந்தனர். அவ்வேளை அமர்வாணத்தோடு பாய்ச்சலில் வந்து சேர்ந்த மணிமொழி கணநேர அவதானிப்பில் நிலைமையை விளங்கிக் கொண்டு தங்கநிலாவின் முன்னே பாய்ந்து நிலையெடுத்தார். இரு கால்களையும் அகட்டி நின்று, வயிற்றோடு பீ.கே.எல்.எம்.ஜி சுடுகலனை அழுத்தியபடி நேரான சூடுகளை எதிரியின் பீ.கே.எல்.எம்.ஜி சுடுநரை நோக்கி வழங்கினார்.
நேருக்கு நேர் சண்டை. ஒருவரை ஒருவர் நேரே பார்த்து இரு தரப்பின் பீ.கே.எல்.எம்.ஜி சுடுநர்களும் சுட்டுக்கொண்டிருக்க, மணிமொழியின் கை மேலோங்கியது. வாய்ப்பைப் பயன்படுத்தி தொலைத்தொடர்புத் தொகுதியையும் கழற்றியெடுத்து, தங்கநிலாவைப் பாதுகாப்பாக வெளியேற்ற முயன்றார் அமர்வாணம்.சண்டையில் காயமடைந்த .50 கலிபர் சுடுகலனின் அணி முதல்வி தாரணி, நங்கையரசி, அமர்வாணத்தோடு வந்தவர்கள் எல்லோரும் ஒரு அணியாகி, சிங்களப் படையினரோடு சண்டையிட்டபடி போர் முன்னரங்கை நோக்கிப் போயினர். தயாரஞ்சினியோடு முன்னே நின்றவர்கள் பாதுகாப்பாக வெளியேறியதை உறுதிப்படுத்தாமல் களத்தை விட்டகல தங்கநிலா விரும்பவில்லை.
தங்கநிலாவின் நகர்வுகளையும் முடிவுகளையும் கவனித்தபடி வானொலித் தொடர்போடு யாழினி, கீர்த்தி, சுகி ஆகியோர் நிற்க, தயாரஞ்சினியின் அணி சண்டையிட்டபடி வெளியேறி விட்டதை நேரே பார்த்து உறுதிப்படுத்திய தங்கநிலாவும் ஏனையோரும் சண்டையிட்டு, எதிரிப்படையின் முற்றுகையை உடைத்து வெளிவந்தனர்.
- எழுதியவர் மலைமகள்-
Nov 27, 2008
போர்முகம் 1
காயப்பட்ட ஆமிக்காறங்களை இப்பிடிக் குவியலாய் போட்டுக்கொண்டு போகமாட்டாங்கள். அப்பிடி எண்டால் இதில கொண்டுபோறது செத்த ஆமிக்காறங்களாய் தான் இருக்கவேணும். அப்படியே படுத்துக்கிடந்தபடி எட்டிப்பார்த்தன். அந்த ஸ்ரெச்சரில் கொண்டு போற ஆமிக்காறங்கள் சண்டையில் செத்துப்போன ஆக்கள். எனக்கு என்னோட அதில் நிண்ட பிள்ளையளுக்கும் அந்த ஸ்ரெச்சரைப் பாக்கப் பாக்கப் பெரிய சந்தோசமாய் இருந்தது" என்ற எழில்நிலாவின் முகம் மலர்ந்தது."பொழுது விடிஞ்சு சூரியன் வந்திட்டுது. ஆமிக்காறங்களின்ர விளையாட்டுக்கள் எல்லாத்தையும் பார்த்துக்கொண்டு அப்படியே படுத்துக்கிடந்தம். நாங்கள் சுட்டு ஆமிக்கறங்கள் சாகாட்டிக்கும் எங்களின்ர ஆக்களின்ர அடியளில செத்துப்போன ஆமிக்காறங்களின்ர பொடியள் மற்றது காயப்பட்டு அனுங்கிக்கொண்டிருக்கிற ஆமிக்காறங்களைப் பாக்கப் பாக்கப் பயங்கரச் சந்தோசமாய் இருந்தது.
ஒவ்வொருக்காலும் செத்துப்போன ஆமிக்காறங்களின்ர ஸ்ரெச்சர் வரவேணும் எண்டு மனசுக்குள்ள வேண்டினம். சண்டை தொடங்கினதில இருந்து முடியும் வரைக்கும் எங்களின்ர பொசிசனுக்கு முன்னுக்கு இருக்கிற அவங்களின்ர சப்பிளேப் பாதையால ஒரு பதினைஞ்சு இருபது தரத்துக்குக் கிட்ட கொண்டுபோய் வைச்சிட்டு வந்திருப்பாங்கள். இதுகளவிட காயப்பட்ட ஆமிக்காறங்களின்ர ஸ்ரெச்சர் நாப்பத்தைஞ்சு ஐம்பது தரத்துக்குக் கிட்டபோய் வந்திட்டுது" என்று எழில்நிலா சம்பவங்களை விபரிக்கப் போராளிகளின் வீரம் மனதில் ஓங்கி ஒலித்தது. எழில்நிலாவின் கண்ணுக்கு முன்னால் நிகழ்ந்த சம்பவங்களைக் கேட்டுக்கொண்டிருக்கவேண்டும் போலவே இருந்தது. பத்து மீற்றரில் நிற்கும் சிங்களப் படைகளின் முன்னால் நின்று அவள் இத்தனை சம்பவங்களையும் துல்லியமாய் அவதானித்துக் கட்டளைப் பணியகத்திற்கு அறிவுறுத்தல்களை வழங்கியபடி இருந்தது என்பது மிகவும் சாதாரணமான விடயமல்ல.
இதற்குள்ளால் அந்தப்போராளிகளின் துணிவும் களமாடும் ஓர்மமும் வெளிப்பட்டு நின்றது.அவள் தொடர்ந்தாள் "நாங்கள் ஜெரி அண்ணைக்கும் நித்திலன் அண்ணைக்கும் குடுத்த இடங்களுக்கு எங்களின்ர ஆக்களின்ர செல்லுகள் வந்து விழுந்துகொண்டிருந்தது. சில இடங்களில் நாங்கள் எங்களப் பார்க்காமல் கூட செல் அனுப்பச் சொல்லிச் சொன்னம். நாங்கள் குடுக்கிற இடங்களுக்குக் கொஞ்சம் கூடப்பிசகாமல் செல்லுகள் விழுந்து வெடிச்சுது. ஏற்கனவே சண்டையில் காயப்பட்டும் செத்தும் வந்துகொண்டிருந்த ஆமிக்காறங்களுக்கு இப்ப இதிலயும் எங்களின்ர செல்லுகளோட கிடந்து அடிபடவேண்டியதாய் இருந்திது" என்றவள் வாய்விட்டுச் சிரித்தாள்.
சண்டையின் நிறைவுக்கட்டத்தில் நிகழ்ந்த சம்பவங்களைச் சொல்லும்போது எழில்நிலாவிற்கு அவளது தோழிற்கும் சிரிப்பு வந்துவிடட்து. இவளது அனுபவங்களுடன் மட்டும் பயணித்துக்கொண்டிருந்த அந்தக்காப்பரண் இப்போது மீண்டும் பகிடிகளால் கலகலக்கத் தொடங்கியது. சாப்பாட்டுக்கான நேரம் நெருங்கிவிடட்து. தொலைவான இடமொன்றில் இருந்து பெண் போராளிகள் இருவர் பகல் உணவையும் அவற்றுக்குரிய கறியையும் கைகளில் தாங்கியவாறு நடந்துவந்துகொண்டிருந்தனர்.காப்பரணின் ஒரு பக்க மூலையில் இருந்த சிறிய அவதானிப்புத் துவாரத்திற்குள்ளால் அந்தப்பெண் போராளிகளை அவதானித்துவிட்டோம். சற்று மனசில் இரக்கமில்லாதவன்போலக் கதிரவன் சுட்டெரித்துக்கொண்டிருந்தான்.
காப்பரணுக்குள்ளும் வெயிலின் தாக்கம் வியர்வையாய் கொட்டியது. சற்றுத் தொலைவில் இரண்டு போராளிகள் நடந்துவந்தனர். வழமைபோலவே அவர்களின் தோளில் துப்பாக்கிகள். தோளில் துப்பாக்கியுடன் மட்டும் தான் இவர்கள் வருகிறார்களா?. சில நிமிடங்கள் கழிந்தன. காப்பரணுக்குள்ளிருந்த மெல்லியதான சற்று உயர்ந்த போராளி ஒருத்தி "மத்தியான ஒழுங்கு வருது" என்றாள். நகர்வு அகழிகளிற்குள் வளைந்தும் நெளிந்தம் குனிந்தும் விழுந்து எழுந்தும் நீண்டதூரங்கள் நடந்தால் உடல் களைத்திருந்தது. அந்தக்களைப்புக் காலைச் சாப்பாட்டைக் கைநழுவவிட்டுவிட்ட எங்களை வயிறு கண்டித்தது. வயிற்றின் கண்டிப்பு சாதாரணமானதாய் இருக்கவில்லை. சிறுகுடல் பெருங்குடலை அப்படியே விழுங்குவதும் பின்னர் சிறுகுடலின் போராட்டத்தால் மீள்வதுமாக நிலைமை தொடர்ந்தது. இந்த நிலமையை காப்பரணில் நிற்கும் பெண்போராளிகளிடம் எப்படிச் சொல்வது. இது ஒருபக்கம் இருக்க, மறுபுறம் எழில்நிலாவின் சுவாரசியமானதும் மனதைத் துடிக்கவைக்கும் முற்றுகைக்குள் நின்ற அனுபவமும் பசியைத் தொலைக்க வைத்திருந்தது.
அவளது அனுபவப்பகிர்வில் ஏற்பட்ட சிறிய தளம்பல் அந்த மெல்லிய உயர்ந்த பெண் போராளியின் ‘மத்தியான ஒழுங்கு வருது' என்ற பகிடியான பேச்சும் எங்களுக்குள் உறைந்திருந்த பசிப்போராட்டத்தைச் சட்டென்று கிளறியது. பசிவந்தால் பறக்கின்ற பத்தில் ஐந்தாறு பறந்துவிட்டது. சொற்பமாக இன்றும் ஒரு நான்கைந்து மாத்திரம் பறக்கவேண்யதாய் இருந்தது. அவற்றைப் பறக்காமல் தடுக்கின்ற பங்கில் எழில்நிலாவின் சுவாரசியமான அனுபங்களின் பகிர்வு முக்கியமானதாய் இருந்தது. அவளவு உயிர்துடிப்பான அனுபவத்தில் மூழ்கியதில் பசியின் சிந்தனையை மறந்திருந்தோம்.தொலைவில் துப்பாக்கியையுத் தோளில் சுமந்தபடி வந்த பெண்போராளிகள் நாங்கள் இருக்கும் காப்பரணை நெருங்கிவிட்டார்கள்.
வறுத்தெடுக்கும் வெயிலில் அந்தப்போராளிகளின் கைகளில் இருந்த பொருட்கள் முதலில் தெரியவில்லை. எங்களை நெருங்கிவந்துவிட்டனர். இப்போது தான் தெரிநிதது அவர்களின் கைகளில் பொதிசெய்யப்பட்ட சொப்பின் பைகளில் மதிய உணவுடன் வருகின்றார்கள் என்பது தெரிந்தது. அவ்வளவு தான் பசி இன்னும் பன்மடங்காகியது. உடனடியாகவே சாப்பிட வேண்டும் போலிருந்தது. சாப்பாட்டுடன் வந்த போராளிகள் எங்களை முதலில்; காணவில்லை. குதூகலமாகக் காப்பரணுக்குள் நுழைந்தவர்கள் எங்களைக்கண்டதும் அப்படியே நின்றுவிட்டார்கள்.
எங்களை எதிர்பார்க்காத அவர்கள் எங்களைக்கண்டதும் சற்றுத்திகைத்துவிட்டார்கள். வெட்க்கத்தில் நின்ற அந்தப்பெண் போராளிகளை புன்சிரிப்புடன் பார்த்தோம். முகத்தில் எந்த அசைவும் இல்லை. "நாங்கள் ஆமி இல்லை" என்றோம்.அவர்களின் முகங்கள் முழுமையாய் சிரித்தன. உணவுப்பொதிகளுடன் வந்த அந்த இரண்டு போராளிகளில் சிறியவர்களான போராளி "ஆமிக்காறங்கள் எண்டால் இப்ப என்ன நடந்திருக்கும் எண்டுறது தெரியும்தானே. பிள்ளையள் சுட்டுப் பொசுக்கியிருக்குங்கள் தெரியும்தானே" என்றாள் மிடுக்குடன்


"என்ன கொஞ்ச நாளுக்கு முன்னுக்குத் தானே இருபத்தைஞ்சு முப்பது ஆமிக்காறங்களின்ர பொடியள எடுத்துப்போட்டு இப்ப திரும்பவும் இப்படிக்கதைக்கிறியள்" என்றோம். "அண்டைக்குச் சின்ன மூச்சுத்தான் விட்டனாங்கள். இனித்தான் மிச்சம் குடுக்கவேண்டும். அண்டைய ஒத்திகையிலையே ஆமிக்காறங்களுக்கு இந்த அடி எண்டால் இனி எப்படி இருக்கும் எண்டு பாருங்கோவன்" என்றாள் சாப்பாட்டுப் பொதிகளுடன் வந்த அந்தப் பெண் போராளி. அவளது உறுதியான பேச்சு எங்களை வியக்கவைத்தது. கடுமையான களத்தில் உறுதியாய் நிற்கும் அந்தப்போராளிகளின் உணர்வுமிக்க பேச்சு மிரமிக்கவைத்தது.உணர்வுமிக்க போராளிகளின் மத்தியில் இருப்பதில் பெருமையடைந்தோம். நாங்கள் இருக்கும் காப்பரணும் சிங்களப்படைகளின் தாக்குதலில் தப்பியிருக்கவில்லை. அதுவும் சிதைவடைந்திருற்தது.
சிதைவுகளைச் சீர்செய்யும் நடவடிக்கைகளும் விரைவாக இடம்பெற்றன. அந்தப்போராளிகளிடம் "என்னசாப்பாடு விசேசமோ?"என்றோம். "ஆமிக்காறங்கள் எங்களுக்குச் செல்லுகள் அனுப்புறது மாதிரி எங்களுக்குச் சாப்பாட்டில் ஒரு சிக்கலும் இல்லை" என்றாள். எங்களுக்கு பசி வயிற்றைக்கிள்ளியபடி இருந்தது. அந்தச் சிறியபோராளி எங்களைப் பார்த்து "இண்டைக்கு எங்களின்ர பொசிசனில சாப்பிட்டுப்பாருங்கோவன்" என்றாள் சாப்பாடு தயாரானது. நன்றாக அவிந்த சோறு அதனுடன் பொரித்துவைத்த நல்ல மீன்கறியும் இணைந்திருந்தது. பொரித்து வைத்த குழம்பு என்பதால் அதன் சுவை நாக்கைப்பிடுங்கியது. இவற்றுடன் நன்றாக மசித்துக்காய்ச்சிய கீரைக்கறி. இவை இரண்டும் இணைந்துவிட இன்றைய மதியச்சாப்பாடு. சுவையாய் இருந்தது. மெல்லமாய் சுவைத்தோம். இரண்டு வாய் சாப்பிடவில்லை நன்றாகப் பொரித்த நெத்தலிக்கருவாடு அந்தப் போராளியிடம் "இது என்ன எல்லாம் எங்களிட்டக் கேக்கக்கூடாது நாங்கள்" இப்பிடி எத்தின செற்றப்புகள் எல்லாம் செய்து வைச்சிருப்பம் தெரியும் தானே" என்றாள் சிரிப்புடன்.
வயிற்றை வறுகும் பசியுடன் போராடிக்கொண்டிருந்த எங்களிற்கு இப்படி ஒரு சாப்பாடு கிடைத்ததை நினைக்க முடியாதிந்தது. சாப்பிட்டுக் கொண்டிருந்த எங்களிற்கு இப்படி ஒரு சாப்பாடு கிடைத்ததை நினைக்க முடியாதிந்தது. சாப்பிட்டுக்கொண்டிருக்க இடையில் மெல்லிய வெள்ளை நிறமான போராளி ஒருத்தி "அண்ணை உப்புத்தண்ணி இருக்குது கீரைக்குக் கொஞ்சம் காணாதுபோல கிடக்குது விட்டுச்சாப்பிடுங்கோ?" என்றவள் உப்புத்தண்ணியை விடுவதற்குத் தயாராய் இருந்தாள். அந்தப்போராளி சொல்வதில் உண்மை இருந்தது. தான் ஆனாலும் பசியின் கோரத்தால் அதனைப் பொருட்படுத்தவில்லை. மேலதிகமான உப்பும் சேர்த்தவுடன் மதிய உணவின் சுவை பிரமாதமாய் இருந்தது.
வயிறு நிறைந்து குளிர்ந்தது. "சமையல் செற்றப்புகள் எல்லாம் வைச்சிருக்கிறியள்போல கிடக்குது" என்றோம்."நாங்கள் லைனில நிற்கிறம் எண்டுற பேர்தான். ஆனால் இஞ்ச எல்ல வசதிகளும் எங்களிட்ட இருக்குது. ஆனால் வீட்டில இருந்து அம்மா கடிதம் எழுதேக்குள்ள பிள்ள கவனம் கவனம் எண்டு நூறு கவனம் போட்டுத்தான் கடிதம் எழுதுவா அண்ண பாவம் அந்த மனிசிக்கு எங்க விளங்கப்போகுது இஞ்ச நாங்கள் ஆடுற கூத்துகள்" என்றாள் எழில்நிலா அவளின்அருகில் நின்ற இன்னொரு போராளி "இஞ்ச அடிக்கடி ஏதும் சின்னதாய் செற்றுப் பண்ணுறநாங்கள். இண்டைக்கு எங்களிட்டக் கைவசம் ஒண்டும் இல்லாமல் போச்சுது. நீங்கள் வருவீங்கள் எண்டு தெரிஞ்சிருந்தால் பெசல் சாப்பாடு செய்திருப்பம்" என்று சிரித்துக்கொண்டே சொல்லமுடித்தாள்.
‘எட அறிவிச்சுப்போட்டு வந்திருந்தால் அந்த மாதிரிச் சாப்பாடு சாப்பிட்டிருக்கலாம்' என்று மனசு தனது வழமையான பாய்ச்சலில் நின்றது. களமுனையில் நிற்கிறோம் என்ற உண்மையைப் போராளிகளின் இத்தகைய செயற்பாடுகளும் அவர்களது பகிடியான பேச்சுக்களும் மறந்துவிடச் செய்தது. இருந்தும் நாங்கள் நிற்கும் இடத்தின் தன்மையைச் சிங்களப்படைகள் அவ்வப்போது நினைவுபடுத்தினார்கள். சற்றுவெட்டையான பிரதேசத்தில் வறுக்கும் வெயிலில் சுறுசுறுப்பாய் செயற்பட்டார்கள். அந்தப்போராளிகள் சாப்பாடு நipறவடைய மீண்டும் எழில்நிலா தனது அனுபவங்களின் இறுதிக்கட்டங்களைப் பகிரத்தொடங்கினாள்.
இதற்கிடையில் உருமறைப்புத்தொப்பியை தலையில் அணிந்தபடி கையில் துப்பாக்கியுடன் போராளி ஒருத்தி அந்தக் காப்பரணை வந்தடைந்தாள்.அவளைப் பார்த்ததும் "கம்பஸ்" என்றார்கள். மனதில் உறுதி நிறைந்த அந்தப் போராளிகளைப் பார்க்கலாம். வியர்வையில் நனைந்த அவள் எங்களைப் பார்த்தாள்.
Nov 25, 2008
வரலாற்றில் தனிச்சிறப்புப் பெறும் தமிழீழ மாவீரர் நாள்

1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழிற்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஏனைய நாடுகளில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும், தமிழீழ மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும் பெரும் வேறுபாடுகளுண்டு.
ஏனைய நாடுகளில் எல்லாம் விடுதலைக்குப் பின் அமைந்த அரசுகளால் விழாக்கள் எடுக்கப்படுகின்றனவே தவிர போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலங்களில் விழாக்கள் எடுக்கப்படுவதில்லை.
ஆனால் விடுதலைப் போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் எதிரியின் அச்சுறுத்தல்கள், தாக்குதல்களுக்கிடையிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கிடையிலும் போராட்டத்தையும் நடத்திக் கொண்டு தமிழீழ மக்கள் மண்ணின் விடிவிற்காகத் தம் இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களை எழிற்சியோடு நினைவு கூர்ந்து வருகின்றனர். மாவீரர்களின் பெற்றோர்கள் குடும்பத்தினரை போற்றிச் சிறப்பிக்கப்படுகின்றனர்.

வீரச்சாவடையும் தமிழீழ மாவீரர்களது வித்துடல்கள் மாவீரர் துயிலுமில்லங்களில் கல்லறைகளில் விதைக்கப்பட்டும், நடுகற்கள் நாட்டப்பட்டும் வழிபாடியற்றப்படுகின்றது.
மாவீரர் நாளில் மாவீரரின் பெற்றோர், குடும்பத்தினர் மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டு அன்று தமிழீழ மக்களால் போற்றிமதிப்பளிக்கப்படுகின்றனர்.
உலகிலே எங்குமே மாவீரர் நாள் நிகழ்வுகள் போல மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள், அவர்களின் பெற்றோரும், குடும்பத்தினரும் போற்றப்பட்டு மதிப்பளிக்கப்படும் நிகழ்வுகள் நடைபெற்றதாகவோ, நடைபெறுவதாகவோ வரலாறுகள் இல்லை.

மாவீரர் எழுச்சி நாட்களின் நிகழ்வுகளும், நடைமுறை ஒழுங்குகளும்
1989ஆம் ஆண்டில் நவம்பர் 27ஆம் நாளை மாவீரர் நாளாகவும் 1990ஆம் ஆண்டில் இருந்து 1994ஆம் ஆண்டுவரை நவம்பர் 21ஆம் நாளிலிருந்து 27ஆம் நாள் வரை மாவீரர் எழுச்சியாகவும்(வாரமாகவும்) தமிழீழ மக்கள் எழுச்சி நிகழ்வாக நடைபெற்று வந்த தமிழீழ மாவீரர் எழுச்சி நாள் நிகழ்வுகள் 1995ஆம் ஆண்டிலிருந்து நவம்பர் 25ஆம் நாள் முதல் 27ஆம் நாள்வரை மூன்று நாட்களில் எழுச்சி நாட்களாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
கரும்புலிகள் இலட்சியத்தில் இரும்பு மனிதர்கள்
கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு 1993 ஆடி 5இல் தமிழீழத் தேசியத் தலைவர் விடுத்த அறிக்கையில், 'கப்டன் மில்லருடன் கரும்புலிகளின் சகாப்தம் ஆரம்பம் ஆகியது. என்றுமே உலகம் கண்டிராத, எண்ணிப் பார்க்கவும் முடியாத தியாகப் படையணி ஒன்று தமிழீழத்தில் உதயமாகியது. கரும்புலிகள் வித்தியாசமானவர்கள். அப10ர்வமான பிறவிகள்.இரும்பு போன்ற உறுதியும் பஞ்சு போன்ற நெஞ்சமும் கொண்டவர்கள். தங்களது அழிவில் மக்களது ஆக்கத்தைக் காணும் ஆழமான மனித நேயம் படைத்தவர்கள். கரும்புலி என்ற சொற்பதத்தில் கருமையை மனோ திடத்திற்கும், உறுதிப்பாட்டிற்குமே நாம் குறிப்பிடுகின்றோம். இன்னொரு அர்த்த பரிமாணத்தில் இருளையும் அது குறியீடு செய்யும். பார்வைக்குப் புலப்படாத பூடகமான இரகசியத் தன்மையையும் செயற்பாட்டையும் அது குறித்து நிற்கும். எனவே கரும்புலி என்ற சொல் பல அர்த்தங்களைக் குறிக்கும்.
ஆழமான படிவமாக அமையப் பெற்றிருக்கிறது. இந்த இரகசியத் தன்மை கரும்புலிகளின் செயற்பாட்டு வெற்றிக்கு மூலதாரமானது. இது கருப்புலிகளின் சகாப்தம். இந்தப் புதிய யுகத்தில் எமது போராட்டம் புதிய பரிமாணங்களில் விரியும். சாவுக்கு விலங்கிட்ட மறவர்கள் புதிய சரித்திரம் படைப்பார்கள். எமது சந்ததியின் விடிவுக்கு விளக்கேற்றி வைப்பார்கள்", என்று தெரிவித்தார்.




No comments:
Post a Comment