| அதனால் பின் தமிழகம் மீண்டும் ஈழத்தை நோக்கி உயிர் பெற்றிருக்கிறது. தமிழகத்தின் ஈழப் போராட்ட ஆதரவுத் தலைவர்கள் மாத்திரமல்லாமல் எல்லோரும் குரல் கொடுக்க அத்வானியும் மத்திய அரசியலில் இருந்து குரல் கொடுத்திருக்கிறார். ஆனால் கனடாவில் எங்கள் உடன் பிறப்புக்கள் ஜெய கே என்று இந்தியத் தேசியக் கீதத்தில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார்கள். ஜன-கன-மக அதிநயக ஜெய கே என்ற இந்தியச் தேசிய கீதத்தில் இந்த ஜெய கே மையக்கருத்து. தேசிய கீதத்தில் குறைந்தது ஆறு தடவைகள் மீள மீள வரும் ஒரேயொரு வார்த்தையும் அது தான். அதை எடுத்து ஒரு நிகழ்ச்சியை பெரிதாக ஏற்பாடு செய்கிறார்கள்.( றறற.தயihழஉழnஉநசவ.உழஅ ) தேனிசைச் செல்லப்பா மனமுருகி எம் தலைவன் இருக்கிறார். கரும்புலிகளுடன் அவர் களம் வருவார் எனக் கதறி மனமுருகிப் பாட இவ்வளவு நாளும் அவருடைய பாடல்களை ஒலிபரப்பியே வாழ்ந்த. தேசியத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட சி.ரி.ஆர்-சி.எம்.ஆர்-ரி.வீ.ஐ என்கிற தமிழீழ விடுதலையின் உயிர் மூச்சு ஊடகங்கள் இந்தியிலும் தமிழிலும் ஜெய கே விழா எடுக்கின்றன. அமிதாப்பச்சன் கொழும்புச் செல்லப் போகிறார் என்றதும் அதற்கெதிராகக் குரல் கொடுத்த கனடா மண்ணில் இருந்து தான் இந்த அலங்கோலமும் நடக்கிறது. இவர்களைப் பற்றி எங்களது தமிழகத் தொப்புள் கொடியுறவுகள் என்ன நினைப்பார்கள்? தனது பயணத்தை நிறுத்திய அமிதாப் பச்சன் என்ன நினைப்பார்? சீமானும் அமீரும் கொதித்தெழுந்து போராடிய போது குரல் கொடுத்த கனடா மக்கள் அமிதாப்பின் கொழும்பு செல்லும் திட்டத்தை கைவிடச் செய்து விட்டனர். இப்போது சீமானும். அமீரும் வெட்கித் தலைகுணிகிற அளவிற்கு இந்தச் செயல் அமைந்துள்ளது. தமிழர்களின் அழிவுகள் இழப்புக்கள் என்பன வேறு விடயம். அதற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்பது போல இந்த வானொலியின் கூத்து ஆரம்பமாகிறது. கடந்த ஆண்டும் மே 18ல் எங்கள் இனமே அழிந்து 3 லட்சம் பேர் சிறை வைக்கப்பட்டு ஓரிரு மாதத்திற்குள் வசந்தவிழா என்று இதே வானொலி பெரிய அளவில் செய்ய முயன்றபோது மக்கள் ஆவேசக் குரல் கொடுத்து தடுத்து நிறுத்தினார்கள். ஏல்லாவற்றிற்கும் இந்தியா தான் காரணம் என்பது ஈழத்தமிழர்கள் எல்லோருக்குமே தெரியும். இந்தியாவின் உதவியால் தான் தாங்கள் வென்றதாக இந்தத் திங்கட்கிழமையும் கொத்தபயா ராஜபக்ச கொக்கரித்திருக்கிறார். இப்படி எங்களை இந்தியா வஞ்சகம் செய்கிறது என்பதை சொல்ல வேண்டியவர்களே சூழ்ச்சி செய்தால் அதை எவ்வாறு ஏற்பது? வஞ்சகம் சூழ்ச்சி வாது கொண்டு எங்களை இப்படி அழிக்க இந்தியா செய்த உதவிகளின் ஒரு வருட நினைவு நாள் எதிர்வரும் 18ம் திகதி. மேளனிக்கப்பட்ட எங்கள் குரல்வளையை அறுப்பது போல இந்த வானொலி இப்போது இப்படித் தொடங்குகிறது. தாங்கள் இந்தியர்கள் என்பதற்கு முதல் “நாங்கள் தமிழர்கள்” என்று தாய் தமிழக மக்கள் இன்று எங்களிற்காக குரல் கொடுத்து வருகிறார்கள். இதற்காகவே வை.கோ. நெடுமாறன். சீமான். அமீர். வைத்தியர் ராமதாஸ். கி.பி. வீரமணி. வைத்தியர் கிருஸ்ணமூர்த்தி. டி.ராஜேந்தர். தோழர் தியாகு. விஜயகாந்த் போன்ற தலைவர்களின் வழி காட்டலிலே போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கனடாவின் தமிழ்த் தேசிய வானொலியோ ஹிந்தி மொழிக்காரர்களுடன் இணைந்து களியாட்டங்களை ஏற்பாடு செய்து எங்களின் இனத்திற்கு ஏற்பட்ட வடுவை மறைக்கப் பார்க்கிறது. இது மே 18ம் திகதிக்குப் பின்னர் நிர்வாகத்தின் பாதையில் எங்கோ தவறு ஏற்பட்டுள்ளதா என்று சிந்திக்க வைக்கிறது. ஏனென்றால் இந்த ஊடகம் தமிழர்களின் குரலாக விடுதலையின் பெயரால் உருவாக்கப்பட்டது. அப்படியிருந்தும் யாருமே எண்ணிக்கூடப் பார்க்க முடியாத துயரத்தில் தமிழர்கள் ஆழ்ந்திருந்த பொழுதில் (கடந்த ஆண்டு யூலை மாதம்) வசந்த விழா நடத்த முடிவெடுத்த போது பெரியதொரு அதிர்ச்சியை அது தமிழர்களிடைய ஏற்படுத்தியது. அதே போல இந்த வானொலி தமிழீழத் தேசியத் தலைவருக்கு அஞ்சலி தெரிவித்து மூன்று நாள் துக்கம் கடைப்பிடிப்பதாக கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்து ஒரு நாள் மாத்திரம் துக்க ஒலிபரப்பை மேற்கொண்டு விட்டு (?) அன்று நள்ளிரவே “நாங்க புதுசாக் கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க” என்ற பாட்டை ஒலிபரப்பி தங்கள் துக்க அனுஸ்டிப்பை முடித்துக் கொண்டனர். இதுவே இவர்களின் துரோக்கத்தின் உச்சம். அதேபோல பாராளுமன்றத் தேர்தலில் சம்பந்தரைப் பேட்டிகாண தாங்களாகவே அழைத்து அவரை துரோகி எனப் பட்டஞ்ச10ட்டி புலம்பெயர்ந்த தமிழர்களிடையே பிளைவை ஏற்படுத்தியது. (தமிழர்களின் வாக்குப் பிரிய வேண்டுமென்ற ராஜபக்சவின் திட்டமும் இது தான்). ராஜபக்சே எவ்வாறு செய்ய விரும்பினாரோ அவ்வாறு இவர்கள் செய்தார்கள். சம்பந்தரைப் பேட்டி கண்ட அரை மணித்தியாலத்திற்குள்ளே பல செய்தி இணையத்தளங்களிற்கும் வானொலிகளிற்கும் இதை முக்கியமாக ஒலிபரப்பவும் என்ற குறிப்போடு அது பதிவு செய்யப்பட்டு செய்திக்குறிப்பாக அனுப்பப்பட்டிருந்ததானது இது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சதி என்பதைக் காட்டியது. இப்போது முள்ளிவாய்க்கால் கோரத்தின் ஓராண்டை எவ்வாறு யுத்தக் குற்றநாளாகவும் அதன் தொடர்ச்சியாக வரும் நாட்களில் உலக அரங்கை விழித்தெழச் செய்யப் போராட வேண்டுமென புலம்பெயர்ந்த தமிழர்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிற போது. அதே காலகட்டத்தில் ஜெய கே என்ற நிகழ்ச்சியை இந்திக்காரர்களுடன் இணைந்து கொண்டாடி எங்களின் இனத்திற்கு ஏற்பட்ட இழப்பை மறைக்க இந்த வானொலி புறப்பட்டுள்ளது.. இவ்வாறு இந்த வானொலியின் பல பல செயற்பாடுகள் ஏல்லாமே தவறான கோணத்திலேயே செல்கின்றன. இந்த வானொலியின் ஒவ்வொரு செயற்பாடும் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானதாக இருந்தாலும் இன்னமும் தாங்கள் தமிழ்த் தேசியத்தை நேசிப்பதாகவே கூறிக் கொண்டு தேசிய செயற்பாட்டாளர்களைக் குழப்பி வருகிறார்கள். உண்மையிலேயே இவர்களது ஞானோதயம் ஒரு பெரிய அதிசயம். இவர்களின் இந்த நிகழ்ச்சி திட்டங்கள் இந்தியாவும். சிறீலங்காவும் தமிழர்களிற்கு எதிராக எப்படிச் செய்கின்றனவோ. அதை அப்படியே அச்சொட்டிச் இருக்கின்றன. அதற்கும் மேலாக சி.எம்.ஆர்-சி.ரி.ஆர்-ரி.வீ நிறுவனத்தின் செயற்பாடுகள் இந்தியாவையும் சிறிலங்காவையும் மறைமுகமாக தமிழர்களிடைய காலூண்ற வைக்கும் செயற்பாடே தவிர வேறேது? விடுதலைக்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பே விசவிதைகளை எம்மத்தியில் ஊன்றுவதற்குப் பயன்படுகிறது. இவர்கள் இவ்வாறு கனடாவில் செய்து அதை தமிழர்கள் பரந்து வாழும் ஐரோப்பிய நாடுகளிற்கும் பரப்பினால் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டங்களும். கண்டனக் கூட்டங்களும் இவர்களிற்கெதிராக மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழகத் தொப்புட்கொடியுறவுகளின் உணர்ச்சிகளை குறைப்பதற்காக. அவர்களது போராட்ட சக்தியை மழுங்கடிப்பதற்கான செயற்பாடே இந்தக் களியாட்டப் பாட்டுவிழா. பார்வதியம்மாளைத் திருப்பியணுப்பிதோடு மீண்டும் பற்றியெரிய ஆரம்பித்த தமிழகப் பெருந்தீயை அணைப்பதற்காக இந்த வானொலிக்கு யார் காசு கொடுத்தது? நாங்கள் விழித்தெழுந்து இந்த நிறுவனத்திற்கு எதிராகப் போர்கொடி தூக்காவிட்டால் இந்தியாவின் சார்பாக மேனனும் சிறீலங்காவின் சார்பாக கொத்தபாய ராஜபக்சவும் செய்ய வேண்டியதை இவர்களே செய்து புலம்பெயர்ந்த தமிழர்களையும் காட்டிக் கொடுத்து விடுவார்கள். |
Thursday, June 17, 2010
பார்வதியம்மாள் பாடாய் படுகிறார்! இந்தியாவைப் போற்றி கனடாவில் ஒரு களியாட்டக் கூத்து!! செந்தமிழன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment