Saturday, December 5, 2009

மாவீரர் நாள் உரை 1999




பிரிகேடியர் தீபன் - 25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த புயல்

கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன்.இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணி தான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன்.

தென்மராட்சிப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளராக விளங்கிய மேஜர் கேடில்ஸின்(மகாலிங்கம் திலீபன் - கண்டாவளை) இளைய மச்சினனாகிய தீபனை இயக்கத்தில் சேர்த்தது கேடில்ஸ் என்று கூறப்படுகிறது.

தீபனை இயக்கத்தில் சேர்த்த மேஜர் கேடில்ஸ் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான்,விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு,லெப்.சித்தார்த்தன்(கேணல் சங்கரின் சகோதரன்) ஆகியோர் வீரச்சாவடைய காரணமாகவிருந்த‌ 14-02-1987 அன்று கைதடியிலே இடம்பெற்ற‌ வெடி விபத்தில் தானும் காற்றோடு காற்றாகிப் போனார்.

1984 ன் முற்பகுதியில் தன்னை இயக்கத்தில் இணைத்துக்கொண்ட‌ பகீரதகுமார், ஆயுதப் பயிற்சி பெற்று தீபனாக மாறினார், இவருடைய தொடர்பாடல் குறிப்புப் பெயர் "தாங்கோ பாப்பா" ஆகும்.

இவர் புலிகளின் முன்னாள் துணைத்தலைவர் மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலராக நியமிக்கப்பட்டு பின்னர் பிரதான மெய்ப்பாது காப்பாளரானார்.

1987 ம் ஆண்டு யூலை 29 ம் திகதி இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின் இந்திய அமைதிப்படைக்கு எதிரான‌ அக்காலப்பகுதி சண்டையில், தீபன் கிளிநொச்சி இராணுவ பொறுப்பாளராகவும், பால்ராஜ் முல்லைத்தீவின் இராணுவ பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

அக்காலத்தில் இந்தியப்படையினருக்கெதிரான அதிக தாக்குதல்கள் நடைபெற்ற மாவட்டங்கள் முல்லைத்தீவும் கிளிநொச்சியுமே ஆகும்.
இக்காலப்பகுதியில் தீபனின் இளைய சகோதரனாகிய வேலாயுதபிள்ளை சிவகுமாரும் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தனது சகோதரனைப்போலவே வேகமாக வளர்ந்த கில்மன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1993ல் திருகோணமலைக்குப் பொறுப்பாளராக அனுப்பப்பட்ட கில்மன் 1994ல் நடைபெற்ற தவறுதலான வெடிவிபத்தில் லெப்.கேணல் கில்மனாக தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார்.

1988ம் ஆண்டின் பிற்பகுதியில் மன்னார் நீங்கலான வன்னிப்பகுதியின் இராணுவப் பொறுப்பாளராக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். துணை இராணுவப் பொறுப்பாளராக தீபன் இருந்தார். இந்த இரண்டு வீரர்களும் தமது போராளிகளை முன்னின்று வழி நடத்தி பல வெற்றிச் சமர்களுக்கு வித்திட்டார்கள்.

இந்திய அமைதிப்படை 1990ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஈழத்தை விட்டு அகன்றது. மீண்டும் ஜூன் மாதமளவில் இலங்கைப் படைகளுடனான 2ம் ஈழப்போர் ஆரம்பமானது. பால்ராஜின் தலைமையின் கீழ் புலிகள் பல வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டார்கள், அவற்றில் பிரதானமானவை மாங்குளம் மற்றும் கொக்காவில் முகாம் தகர்ப்பாகும்.

பால்ராஜும் தீபனும் 1991ல் மேற்கொள்ளப்பட்ட‌ ஆனையிறவு முகாம் மீதான ஆகாய கடல் வெளிச்சமரில் பங்கு பற்றி குறிப்பிடத்தக்களவான வெற்றியைப் பெற்ற போதும் முகாம் தகர்ப்பு என்ற இலக்கு எட்டப்படவில்லை.

1992ல் உருவாக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். தீபன் வன்னிப்பகுதியின் தளபதியானார். இவர்களின் இணை மண்கின்டிமலை மீதான இதயபூமி நடவடிக்கையில் பங்கு பற்றி புலிகளுக்கு மகத்தான வெற்றியை தேடித்தந்தது.

தீபனின் திறமையும் வீரமும் வெளிப்பட்ட இரு சமர்கள் யாழ்தேவி மற்றும் தவளைப்பாச்சல் ஆகும். ஆனையிறவிலிருந்து வடக்காக‌ யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட யாழ்தேவியை இடை நடுவில் தடம்புறள வைத்த பெருமை தீபனையே சாரும். 1993 செப்டெம்பரில் இடம்பெற்ற இந்த இராணுவ நடவடிக்கையின் முதல் நாள் சண்டையிலேயே பால்ராஜ் காயம் காரணமாக களத்திலிருந்து அகற்றப்பட்டார். அதன் பின்னர் தீபனே முறியடிப்புச்சமருக்குத்தலைமை தாங்கினார்.

தீபனின் தந்திரத்தின்படி மண் கும்பிகளுக்குள் மணித்தியாலக்கணக்காக காத்திருந்த புலிகள் முன்னேறிய‌ இராணுவம் மிக அருகில் வந்ததும் திடீர்த் தாக்குதலைத்தொடுத்து அவர்களை நிலை குலைய செய்ததுடன் புலிகள் இரண்டு ரி‍ 55 டாங்கிகளை கைப்பற்றுவதற்கு வழி சமைத்துக்கொடுத்தது.

இந்த‌ இரண்டு ரி‍ 55 டாங்கிகளில் ஒன்றை மண்ணுக்குள் புதைத்து பயன்படுத்தியே இரண்டு டோரா பீரங்கிப் படகுகளை சாலைப்பகுதியில் ஒரே நாளில் புலிகள் தகர்த்து சாதனை புரிந்தனர்.

1993 நவம்பரில் நடைபெற்ற ஈருடகச் சமரான தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் பூநகரி முகாமை தீபன் தலைமையிலான போராளிகளும் நாகதேவன்துறை கடற்படைத்தளத்தை பானு தலைமையிலான போராளிகளும் தகர்த்தனர். இங்கே கைப்பற்றப்பட்ட 5 நீருந்து விசைப்படகுகளே கடற்புலிகள் தோற்றம் பெற்று பலம் பெற உறுதுணையாக இருந்தது என்றால் மிகையாகா.

1994ல் தீபன் யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டார். அக்காலப் பகுதியில் சந்திரிகா அம்மையார் தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் பேச்சு வார்த்தை நடந்தது. 1995ல் முறிவடைந்த பேச்சு வார்த்தை 3ம் ஈழப்போருக்கு வழி சமைத்தது.

1995ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவத்தினரின் முன்னேறிப் பாய்தலுக்கெதிரான புலிப்பாய்ச்சலிலும் இடிமுழக்கம் நடவடிக்கைக்கெதிரான சண்டையிலும் தன் காத்திரமான பங்களிப்பை வழங்கினார்.

சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையை ஆரம்பத்தில் பால்ராஜ் சொர்ணம் தலைமையிலும் பின்னர் தீபன் பானு தலைமையிலும் புலிகள் எதிர்த்துப் போரிட்டனர். தீபன் தலைமையிலான போராளிகள் நவம்பர் 27 மாவீரர் நாள் முடியும் வரை யாழ்ப்பாணம் படையினர் கைகளில் வீழ்வதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர்.

யாழ்ப்பாணத்தை விட்டு 1996 ஏப்ரல்‍ மே காலப்பகுதியில் வெளியேறிய புலிகள் வன்னியை தளமாக்க முடிவு செய்தபோது அதற்குப் பெருந்தடையாக இருந்தது முல்லைத்தீவு இராணுவ முகாம் ஆகும். அம்முகாமை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் புலிகள். தீபனை அழைத்த தலைவர் முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான ரெக்கியை ஆரம்பவிக்கவும் தாக்குதல் திட்டத்தை தீட்டவும் உத்தரவிட்டார்.
தீபனின் திறமையான திட்டத்தினால் 1996 ஜூலை 18ல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்க்கப்பட்டபோது 1000க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இங்கே கைப்பற்றப்பட்ட இரண்டு 122mm ஆட்லறி பீரங்கிகளே பின்னாளில் புலிகள் மரபு ரீதியாக தமது இராணுவத்தைக் கட்டமைக்க உதவின.

ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை 1997ல் ஆரம்பிக்கப்பட்டபோது புளியங்குளத்தை தக்கவைக்கும் பொறுப்பு தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓமந்தையையும் நெடுங்கேணியையும் இலகுவாக கைப்பற்றிய இராணுவம் புளியங்குளத்தை கைப்பற்ற முடியாமல் மாற்றுப்பாதையில் கனகராயன்குளத்தையும் கரிப்பட்டமுறிப்பையும் கைப்பற்றியபோது புளியங்குளம் கைவிடப்படவேண்டியிருந்தது.

இதன்போது தீபனின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாக விக்கீஸ், அறிவு மற்றும் லோரன்ஸ் விளங்கினார்கள்.இந்தக்கூட்டணியின் கண்டு பிடிப்பான மண் அணைக்கட்டும் அகழியுமே இலங்கை இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்பது யாவரும் அறிந்ததே.

இன்றைய தேச நிர்மாணம் மற்றும் கட்டமைப்பு அமைச்சராக இருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரன் என்கின்ற கேணல் கருணா அம்மான் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை காலத்தில் தானே வன்னிப்பகுதியின் கட்டளைத்தளபதியாக நியமிக்கப்பட்டேன் என்று கூறி வருகிறார். ஆனால் அவர் தீபனுடன் இணைந்தே இந்தப் பொறுப்பை வகித்தார் என்பதும் இவர் தொடர்பாடல் மற்றும் ஒருங்கிணைப்பு வேலைகளை கவனித்தபோது ஒட்டுமொத்த பொறுப்பாளராக இருந்தவர் தீபன் என்பதையும் குறிப்பிடத்தவறிவிட்டார்.

1998ல் ஜெயசிக்குரு கைவிடப்பட முக்கிய காரணமாக இருந்தது, சத்ஜெய நடவடிக்கையின் மூலம் படையினர் கைப்பற்றி வைத்திருந்த கிளிநொச்சியை ஓயாத அலைகள்‍ 2ன் மூலம் புலிகள் மீளக்கைப்பற்றிக்கொண்டதே. இத்தாக்குதலிலும் தீபனின் பங்களிப்பு மிகக்காத்திரமானதாகும்.

1999ல் புலிகள் ஓயாத அலைகள் 3ஐ ஆரம்பித்து படையினர் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கையின் மூலம் 18 மாதங்கள் கஷ்டப்பட்டு பிடித்து வைத்திருந்த பகுதிகளை வெறும் மூன்றே வாரங்களில் மீளக்கைப்பற்றிக்கொண்டனர்.

ஓயாத அலைகள் 3ன் முத்தாய்ப்பாக அமைந்தது ஆனையிறவு முகாம் கைப்பற்றலாகும். 1991 ல் ஆகாய கடல் வெளிச் சமரில் பெற்ற பின்னடைவும் படிப்பினைகளும் பின்னாளில் உலகமே வியக்கும் வண்ணம் இடம்பெற்ற குடாரப்புத் தரையிறக்கத்துக்கு வழி சமைத்தது எனலாம்.

இத்திட்டத்தை தலைவர் சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜுக்கு விளக்கியபோது சற்றுத்தயங்கினாராம் பால்ராஜ். பின்னர் தீபன் செய்ய வேண்டிய கடமைகளை விளக்கியபின்பு தீபன் மீதிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை காரணமாக களத்தில் இறங்கினாராம் பால்ராஜ்.
குடாரப்புத் தரையிறக்கம் இடம்பெற்றபின் செம்பியன்பற்றிலிருந்து வெற்றிலைக்கேணி கட்டைக்காடு வரை நிலை கொண்டிருந்த படையினரை விரட்டி அடித்தும் ஆனையிறவு முகாமை பின் பக்கமாக தாக்கியும் ஆனையிறவு முகாம் கைப்பற்றலில் முக்கிய பங்காற்றினார் தீபன்.

2000 ஏப்ரல் 24 ல் இடம்பெற்ற ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கிலான படையினரின் தீச்சுவாலை(அக்னிகீல) நடவடிக்கையை சின்னாபின்னமாக்கியது தொட்டு 2009 ஜனவரி வரை 55ம் மற்றும் 53ம் படையனியின் ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எத்தனையோ முயற்சிகளை தவிடு பொடியாக்கியவர் வட போர்முனைக் கட்டளைத்தளபதி தீபன்.


அதே போன்று கிளிநொச்சியை சுற்றி 18km நீளமான 'L' வடிவிலான மண் அணைக்கட்டு அமைத்து கிளிநொச்சியின் வீழ்ச்சியை பல மாதங்கள்(2009 ஜனவரி 1 வரை) தள்ளிப்போட்டவர் தீபன்.

கடைசியாக புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் ஏப்ரல் 1ம் திகதி பல படையணித்தளபதிகளுடன் சேர்ந்து படையினருக்கெதிராக பாரிய முறியடிப்புச் சமர் ஒன்றைத் திட்டமிட்டார் தீபன். ஆனால் காலன் வேறு விதமாக திட்டமிட்டான் போலும். ஏப்ரல் 1ம் திகதி அன்றும் 2ம் திகதி அன்றும் தீபனுக்கு நெஞ்சிலே காயம் பட்டது.ஆனாலும் தொடர்ந்து போராடிய தீபன் எதிரியின் நயவஞ்சகமான நச்சுக்குண்டுத்தாக்குதலில் வீரகாவியமானார்.

25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் ஏப்ரல் மாதம் 4ம் திகதி புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது.

சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜ் என்றால் எந்தவித சந்தேகங்களும் இன்றி சமர்க்களங்களின் துணை நாயகன் இந்த தீபன் அம்மான் தான். பால்ராஜ் எனும் பாசறையிலே வளர்த்தெடுக்க‌ப்பட்ட இந்த கண்டாவளை கண்டெடுத்த கண்மனி, பால்ராஜ் மே 2008ல் மறைந்தபோது அழுதபடியே சொன்ன வார்த்தைகள் இவை "என்னை அருகிலே வைத்திருந்து தளபதியாக வளர்த்தெடுத்த தளபதி, அவர் என் போர் ஆசான்."
தமிழனை தலை நிமிர வைத்த இந்த இரண்டு வீரர்களும் இன்று நம்மிடையே இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர்களின் நினைவுகள் எம்மனங்களில் நீங்காதிருக்கும் என்பதும்.

-சாணக்கியன்

லெப்.கேணல் கலையழகன் (மறுக்கமுடியாத மாவீரம்)

லெப்.கேணல் கலையழகன்
சிவபாதசுந்தரம் ஞானசீலன்
யாழ்.மாவட்டம்
கலையழகன் என நினைக்கும் போது, என்றும் மாறாத புன்னகை பூத்த முகமே எல்லோருக்கும் நினைவிற்கு வரும். கள்ளம் கபடமற்ற சிரிப்பும், எல்லோருடனும் அன்பாக, பண்பாக பழகும் தன்மையும், அனைவரையும் உபசரிக்கும் இயல்பும் அவனது இலட்சணங்கள். ஆனால் அவனுக்குள் இருந்த அற்புதமான திறமையும், ஆழமான ஆளுமையும், பன்முகத்தன்மையும் பலருக்குத் தெரியாது. குழந்தைத்தனமான முகத்திற்கு சொந்தக்காரன் பல்வேறு பொறுப்புக்களை தோளில் சுமந்து திரிந்த ஒரு அற்புதமான போராளி என்பது சிலருக்கும் மட்டும் தெரியும்.
ஆரம்பப் பயிற்சியை முடித்துக்கொண்ட கலையழகன், 1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேசியத்தலைவர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட கேணல் கிட்டு அரசறிவியல் கல்லூரி மாணவனாக இணைத்துக்கொள்ளப்பட்டான். தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப அரசறிவியலும், படையப்பயிற்சியும் இக்கல்லூரி மாணவர்களிற்கு மாறிமாறி வழங்கப்பட்டது. அக்கல்லூரியின் முதன்மை மாணவர்களில் ஒருவனாக மாவீரன் கலையழகன் திகழ்ந்தான். பேச்சாற்றல், நுட்பமாகப் பதில் கொடுக்கும் தன்மையினை கல்லூரியில் அவன் வளர்த்துகொண்டான். அங்கு அவனது ஒழுக்கம், கட்டுப்பாடு, மற்றவர்களோடு பழகும் தன்மை, எல்லோருக்கும் உதவும் பண்பு, நேர்மை என்பன அவனைத் தூய்மையான போராளியாக வெளிச்சம் போட்டுக்காட்டியது.
நான்கு வருடங்களிற்கு மேலாக அரசறிவியல் கற்ற கலையழகன் தேசியத்தலைவர் அவர்களது கருத் துரைகளினாலும், தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் தொடர் வகுப்புக்களினாலும் முழுமையான போராளியாகப் புடம் போடப்பட்டான். இந்தக்காலப் பகுதியில் கொமாண்டோப் பயிற்சியிலிருந்து கனரகப்பீ ரங்கிப் பயிற்சி வரைக்குமான பல்வேறு வகையான படையப்பயிற்சிகளை அவன் பெற்றான். 1995ஆம் ஆண்டு மாதகலில் ஆரம்பித்த அவனது போர் நடவடிக்கைகள் ரிவிரச, சத்ஜெய, ஜெயசிக்குறு, ஓயாத அலைகள்-03, ஆனையிறவுச்சமர் என நீண்டது. அண்மைய முகமாலை தாக்குதல் களத்திலும் அவன் பங்குபற்றியிருந்தான்.
இக்கல்லூரியின் முதலாவது அணி மாணவர்களின் பட்டப்படிப்பு நிறைவடைந்த போது, மிகச்சிறந்த மாணவர்கள் சிலரில் ஒருவனாக கலையழகன் தெரிவு செய்யப்பட்டு தலைவர் அவர்களினால் சிறப்புப் பரிசும் ஷதிறவோர் எனும் பட்ட வழங்கிக் கௌரவிக்கப்பட்டான். அரசியல் அறிவும், படைய அறிவும் ஒருங்கே இணைந்து தலைவர் அவர்கள் எதிர்பார்த்த பல்துறைசார் போராளியாக அவன் இந் தக் காலகட்டத்தில் வளர்ந்திருந்தான். கல்லூரிக் காலங்களில் பகுதி நேரமாக கலையழகன் தொலைத்தொடர்பாளனாக செயற்ப்பட்டான். பின்பு சிறிது காலம் மொழிபெயர்ப்பு அறிவினை பெறுவதற்கான கல்வியையும், பாதுகாப்பு பயிற்சியையும் பெற்ற கலையழகனுக்கு தேசியத்தலைவர் அவர்களைப்பற்றிய வரலாற்றுப்பதிவுகளை ஆவணமாக்கும் பணியில் ஈடுபடும் சந்தர்ப்பம் கிடைத்தது.
இவ்வரிய சந்தர்ப்பத்தை தனது வாழ்நாளில் தனக்கு கிடைத் த பெரும் பேறாகவே அவன் கருதியிருந்தான். கால ஓட்டத்தில் அவனுக்கு வேலைச்சுமை அதிகரித்த போதும் தலைவர் அவர்களின் வரலாற்றை ஆவணமாக்கும் பணியினை தானே செய்யவேண்டும் என்ற ஆர்வமும் துடிப்பும் அவனுக்கிருந்தது. தலைவர் அவர் களது ஆரம்ப கால சம்பவங்களைத் தேடி எடுத்து தொகுப்பதிலும், தலைவர் அவர்களின் ஆரம்பகாலத் தோழர்களிடமும், ஆதரவாளர்களிடமும் தகவல்களைத் திரட்டி அதனைச் சரிபார்த்து ஆவணமாக்குவதிலும் அவன் அதிக ஆர்வம் செலுத்தியிருந்தான், வேறு சில தேசப்பற்றாளர்களுடன் சேர்ந்து கலையழகனின் கடும் உழைப்பின் பயனாகவே “Leader for All Season” என்ற தலைவர் அவர்களைப்பற்றிய புகைப்பட ஆவணநூலும், விடுதலைப் பேரொளி என்ற தலைவர் அவர்களைப்பற்றிய தொகுப்பு நூலும் வெளிவந்தன.
செஞ்சோலை, காந்தரூபன் சிறார்களுக்கான எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைவதற்காக, அவர்களிற்கான அழகான, அமைதியான இருப்பிடங்களை அமைத்துக்கொடுக்க வேண்டுமென்ற தலைவர் அவர்களின் பெருவிருப்பத்தினை நிறைவேற்றும் பொறுப்பு கலையழகனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தப்பணியை விரும்பி ஏற்றுக்கொண்ட கலையழகன் அதற்காக கடுமையாக உழைத்தான் . புலம் பெயர்ந்த மக்கள், அமைப் புக்கள், மத்தியில் இதற்கான நிதி வளங்களை திரட்டுவதற்காக கடும் பிரயத்தனமெடுத்தான். ஏராளமான பேரை அவன் சந்தித்தான், கதைத்தான், திட்டங்களை வழங்கினான். இறுதியில் அவன் இந்தப்பணியில் முழுமையாக வெற்றியடைந்திருந்தான். செஞ்சோலை ஷகாந்தரூபன் சிறார்களுக்கான இருப்பிடங்கள் அமைக்கப்பட்டு தலைவர் அவர்களால் அவை திறந்து வைக்கப்பட்டது.
அவனுக்குப் பெரும் மன மகிழ்வையும் திருப்தியையும் தந்திருந்தது. அவனது ஆன்மா அன்று நிறைவடைந்திருந்தது. இதே போலவே நவம் அறிவுக்கூட போராளிகளிற்கான அமைவிடத்திற்கும் கலையழகனின் பங்கு கணிசமானதாக இருந்தது. எமது தேசத்திற்கான வெளிநாட்டுத்தொடர்புகளை, அனைத்துலக பணிகளை செய்வதற்கான தயார்ப்படுத்தலுக்காக கலையழகன் பல்வேறு நாடுகளிற்கு அனுப்பப்பட்டான். வெளிநாட்டுப் பயணமானது அவன் கல்லூரியில் கற்ற பல விடயங்களை நேரில் பார்த்து அறியக்கூடியதாக இருந்தது. புலம்பெயர்ந்து வாழும் எமது மக்களின் தாயகப்பற்று, விடுதலையுணர்வு, வாழ்க்கைநிலை என்பவற்றை அவன் அறிந்து கொண்டான். எமது பொறுப்பாளர்கள், செயற்பாட்டாளர்களின் கடின உழைப்புப் பற்றியும், எதிர் கொள்கின்ற பிரச்சினை குறித்தும் இங்கு சகதோழர்களிற்கு எடுத்துரைத்தான்.
அதே நேரம் தேசியத்தலைவர், விடுதலைப் போராட்டம் குறித்த தெளிவான கருத்துக்களை அவன் செல்லுமிட மெல்லாம் முன்வைத்தான். நட்பு ரீதியாக நிறையப் பேருடன் உறவாடி தொடர்புகளைப் பேணிவந்தான். புலம்பெயர்ந்த எமது உறவுகளின் தாயகம் தொடர்பான பிரச்சினைகளை அந்த மக்களின் நிலையில் நின்று பார்க்க வேண்டுமென்று வலியுறுத்தியவன். குறிப்பாக கனடாவில் வாழும் தமிழர்களிற்கான தாயகப்பணிகளை ஒருங்கிணைப்பதில் அவன் கடுமையாக உழைத்தான். புலம்பெயர் தமிழர்களின் பலத்தை, வளத்தை ஒருங்கிணைப்பதில் அவன் ஆற்றிய பணி அளப்பரியது. அவை வரலாற்றில் பொறிக்கப்படவேண்டியவை. கடந்த வருட நடுப்பகுதியில் கலையழகன் அனைத்துலகத் தொடர்பக துணைப்பொறுப்பாளராக நியமிக்கப்பட்டான்.
இதற்கு இவனது பண்பும் , ஆளுமையும், விடையங்களை இலகுவாகக் கையாளும் ஆற்றலும் காரணமாக இருந்தன. சகபோராளித் தோழர்களை மதித்து, அவர்களோடு மனம் திறந்து பழகி, அனுசரித்து, அவர்களது தேவைகளை விளங்கி பூர்த்தி செய்யும் பக்குவம் அவனுக்கிருந்தது. போராளிகளை வளர்க்க வேண்டும், வேலைகளுக்குள்ளால் உள்வாங்க வேண்டும், நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டுமென்று அவன் விரும்பிச் செயற்பட்டான். அவனை விட வயதில் கூடியவர்களும், அனுபவசாலிகளும் இருக்குமிடத்தில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தன்மை அவனிடமிருந்தது. அந்தக் கவர்ச்சி மிக்க ஆளுமை எல்லோரையும் அவன் பால் ஈர்த்தது. குறுகிய காலத்தில் அவன் மிக வேகமாக வளர்ந்தான். அவனது ஆற்றல், ஆளுமையின் வீச்சு, முதிர்ச்சியடைந்த தன்மை என்பவை மூலம் ஒரு பெரிய பொறுப்பைத் தனியே செய்யக்கூடிய நிலையினை அவன் அடைந்திருந்தான் .
அவன் நல்லவனாக மட்டுமல்லாமல் வல்லவனாகவும் திகழ்ந்தான் என்பது தான் உண்மை. இவ்வாறான நேரத்தில் தான் 18.04.2007 அன்று எதிர்பாராத வெடிவிபத்தில் கலையழகன் வீரச்சாவு என்ற செய்தி வந்தவுடன் நாம் எல்லோரும் துடிதுடித்துப் பதறிப்போனோம். ஆழிப்பேரலை வந்து தாக்கியது மாதிரியான உணர்வு, பூமியதிர்ந்து நிலம் பிளந்து போன மாதிரியான நிலை, இதயத்தை யாரோ சம்மட்டியால் அடித்த அதிர்வு. வார்த்தைகளில் வடிக்க முடியாத துயரமும் வலியும். வேதனைச்சகதியில் சிக்கித் தவிக்கின்ற சோகம் . ஏன் இவ்வளவு வேகமாக எமை விட்டுப்பிரிந்தான் என்று மனதில் ஆழமான வலியுடன் எழும்பும் வினா. கலையின் இழப்பின் பெறுமதி, இழப்பின் இதயவலி, அதன் ஒட்டுமொத்தப் பரிமாணம் எனக்கே முழுமையாகத் தெரிந்திருந்தது.
என்னையே முழுமையாகத் தாக்கியிருந்தது. அவன் அழகானவன், பண்பானவன்,பழகுவதற்கு இனிமையானவன், கள்ளம்கபடமற்ற வெள்ளையுள்ளம் படைத்தவன். ஆளுமையெடுத்து செயற்கரிய பணிகளைச் செய்தவன். முதல் நாள் உயிரோடு வலம் வந்தவனை மறுநாள் விதைகுழியில் விதைத்துவிட்டு வந்தோம். இது எவ்வளவு துயரமாக, கொடுமையாக இருந்தது. ஆனாலும் எவ்வளவு இழப்புவரினும், இடர்வரினும் உறுதி தளரோம். லெப். கேணல் கலையழகனது தலைவர் மீதான பற்றும் பாசமும், விடுதலைவேட்கையும், தேசிய உணர்வும் கொண்ட எண்ணங்களை நெஞ்சினில் சுமந்து அவனது இலட்சியக் கனவை நனவாக்குவோம் என அவனது விதைகுழி மீது சத்தியம் செய்கின்றோம்.

ராம் நகுலன் விலைபோய்விட்டாரா?” – புலனாய்வு என்னா சொல்லுகிறது

சொல்லவும் முடியாமல் சகிக்கவும் முடியாமல் சில சம்பவங்கள் வரலாறுகளில் நடைபெறுவது உண்மை.
ஆனால் எப்போது எந்தெந்த விடயங்களை சொல்லவேண்டும் என்பதில் தடம் புரள்வதால் அது எதிர்காலத்தில்
பல ஆபத்துக்களையும் விளைவிக்கும் என்பதும் உண்மை.

அண்மை காலமாக விடுதலைப்புலிகளின் பேரழிவுக்கு பின்னர் பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. இதனை
சம்பந்தப்பட்ட தரப்பினர் தமிழீழ தேசம், மக்கள் விடுதலை கருதி மறைப்பதும் அதே நேரம் அவை கசிவதுமாக
இருக்கின்றது. இதனால் இன்று விடுதலைப்புலிகள் பல இயக்கங்களாக உருவெடுப்பது போன்ற தோற்றங்கள்
எழுந்தவண்ணம் உள்ளது சிலவேளை நிஜமாக கூட வரலாம். புலம்பெயர் சமூகத்தில் தான் இவை அதிகமாக
இருந்த போதும் தாயகத்திலும் இன்று இரண்டு இயக்கங்கள் போல உருவெடுக்கும் அபாயம் எழுந்துள்ளது.
ஒன்று இராணுவத்தினராலும் கருணாவினாலும் நடத்தப்படும் இயக்கம். மற்றது என்ன செய்வதென்று தெரியாமல்
தத்தமது பாட்டில் குழுக்களாக மறைந்து வாழும் இயக்கம்.
இராணுவத்தினரால் நடாத்தப்படும் இயக்கம் பற்றி முதலில் பார்ப்போம்.
மே 17 இற்கு பின்னர் சரணடைந்த சில பொறுப்பாளர்கள் மற்றும் ஏற்கனவே இராணுவத்துடன் தொடர்பில்
இருந்தவர்கள், இரட்டை முகவராக செய்ற்பட்டோர்கள், கருணா ஆகியோர் மற்றும் கிழக்கு மாகாணத்தில்
இருந்த விடுதலைப்புலிகள் ஆனால் கருணாவுடன் இரகசிய தொடர்பை வைத்திருந்தவர்கள் அனைவரும்
சேர்ந்து இராணுவத்தின் வழிகாட்டுதல்களில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை நடாத்த ஆரம்பித்துள்ளனர்.
இதன் மூலம் விடுதலைப்புலிகளின் எஞ்சி இருக்கின்ற போராளிகள் பொறுப்பாளர்களை கண்டுபிடித்தல்,
விடுதலைப்புலிகளின் இராணுவ தகவல், ஆயுத கிடங்குகளை கண்டுபிடித்தல், புலம்பெயர் நாடுகளில் உள்ள
வலையமைப்பினை ஊடுருவி தாக்கி அழித்தல், அரசியல் ரீதியாக தமிழ் மக்கள் இடையே பிளவுகளை ஏற்படுத்தல்
என்ற வகையில் இவை அமைந்தது.
இந்த வகையில் ஆரம்பத்தில் திரு.கே.பி அவர்கள் தலைமையில் அனைவரும் கூடிய போதே இராணுவத்தினரின்
வழிகாட்டுதலில் இருக்கும் புலிகள் அமைப்பு செயற்பட தொடங்கியது. இதில் முதற்கட்டமாக தயா மோகன்
என்பவர் மலேசியாவுக்கு அனுப்பபட்டார் இவர் இராணுவத்தின் வழிகாட்டுதலில் கருணாவினால் ஏற்பாடுகள்
செய்யப்பட்டு முஸ்லிம் நபர் ஒன்றின் பெயரில் பாஸ்போட் செய்து மலேசியா வந்தடைந்தார். இதே காலப்பகுதியில்
ஒன்பது பேர் கொண்ட சரணடைந்த புலிகளும் இந்தியாவுக்கு அனுப்பபட்டிருந்தனர். இதில் என்ன துன்பகரமான
விடயம் என்றால் இவர்களுக்கான நிதிகளை புலம்பெயர்ந்த சில ஆதரவாளர்களும் புலிகளும் அனுப்பியுதவினர்
என்பதே ஆகும் (திரு. தயாமோகனின் வாக்குமூலத்தின்படி).
தயாமோகன் வந்தபின்னர் திரு கே.பி அவர்கள் தயாமோகனிற்கு தனியாக வீடு எடுத்து கொடுத்து
சகலவசதிகளையும் செய்து கொடுத்தார். தனது ஆதரவுக்காக தயாமோகனை பாவித்த கேபி அவர்கள்
தயாமோகனூடாக கருணா, இலங்கை அரசு ஆகிய தொடர்புகளையும் ஏற்படுத்தி விரும்பியோ விரும்பாமலோ
இராணுவத்தினரால் நடாத்தப்படும் புலிகள் அமைப்பின் நோக்கத்திற்கு ஏற்ப நடந்துகொண்டார். இதேவேளை இந்திய
றோ அதிகாரிகளுடன் தொடர்பினை ஏற்படுத்திய கே.பி, அவர்கள் ஊடாக தனது பாதுகாப்பினையும் உறுதி செய்து
கொண்டார்.
இவர்களது தயாரிப்பில் உருவான திட்டங்களின்படி கே.பி புலம்பெயர்ந்த மக்களையும் அணிதிரட்டும் முயற்சியிலும்,
நாடுகடந்த அரசு போன்ற சில திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கும் நேரத்தில் கே.பி க்கும் ஏனைய
சில புலிகளுக்கும் இடையே முரண்பாடுகள் வலுத்தமை உங்களுக்கு தெரியும்.
இந்த முரண்பாடுகளை பயன்படுத்தி புலம்பெயர் மக்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள் பலர் இவர்களுள்
புலிகளின் முக்கிய பொறுப்பில் முன்பு இருந்தவர்களும் உள்ளடங்குவதுடன் புலிகளால் தண்டனை
வழங்கப்பட்டவர்களும் சேர்ந்துகொண்டனர். கூடவே முக்கியமாக சில இணைய தளங்கள், ஊடகவியலாளரும்
அடங்குவர். உதாரணமாக கே.பி தலைமையிலான முதலாவது ஒற்றுமை படுத்தல் கூட்டத்தில் அது இரகசியமானது
என்றும் முக்கியமானவர்களே பங்கு பற்றலாம் என்றும் கூறப்பட்டதாம். ஆனால் முக்கிய புலி உறுப்பினர் ஒருவர்
தனது ஸ்கைப் ஊடான கூட்டத்தில் டி.பி.எஸ் ஜெயராஜ் அவர்களையும் கூட வைத்துக்கொண்டே கூட்டத்தை
நடாத்தி இருக்கின்றார் என்பது அண்மையில் தான் கசிந்துள்ளது. வாழ்த்துக்கள் அந்த புலி உறுப்பினரின்
வெளிப்படை தன்மைக்கு.
இவ்வாறு இந்த காலப்பகுதிக்குள் கே.பி மற்றும் உறுப்பினர்கள் முறுகல் நிலையினை எட்டினாலும் தேச
நன்மை கருதி பிரிந்து செல்லும் நிலையினை தோற்றுவிக்க கூடாது என சிலர் மெளனமாகவே ஆமா
போட்டுகொண்டு இருந்தனர். ஆனால் இலங்கை அரசாங்கம் மிக சாதூரியமாக இந்திய ரோவினையும் ஏமாற்றி
தன்னால் நடாத்தப்படும் புலிகள் அமைப்பின் ஒருபகுதியூடாக சூட்சுமமாக தகவல்களை திரட்டி கே.பி இனை
கடத்தி சென்றமை (அழைத்து சென்றமை) நடந்து முடிந்த நிலையில் புலம்பெயர் நாடுகளில் உள்ள
புலிப்பொறுப்பாளர்கள் இலங்கையில் உள்ள புலிகளுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு வேலைகளை
ஆரம்பித்துள்ளனர்.
திரு. ராம்
ராம் அவர்கள் நம்பிக்கையாகவும் விசுவாசமாகவும் பழகி புலம்பெயர்ந்தவர்களிடம் நம்பிக்கையினை ஏற்படுத்தி,
இரக்கத்தினை ஏற்படுத்தி மாதாந்தம் நிதிகளை பெற்றுவந்தார். கூடவே தலைவர் தனக்கு இறுதியாக பல
கட்டளைகளை பிறப்பித்ததாகவும் அதனை நிறைவேற்ற வேண்டும் எனவும் அனைவரிடமும் நம்பிக்கையினை
ஏற்படுத்தி பல வேலைகளை ஆரம்பித்தார்.
1 இலங்கையில் ஆங்காங்கே உள்ள போராளிகளின் தொடர்புகளை தரும்படி கேட்டு அதனை பெற்றுகொண்டு
அதன்படி போராளிகள் இருக்கும் இடங்களை கண்டுபிடித்தார்.
2 அவர்களூடாக இருக்கும் ஆயுத கிடங்குகள் இ தகவல்களை திரட்டினார்
3 போராளிகளை பாதுகாத்து வைத்திருக்கும் பொதுமக்கள் இடங்களையும் சிலரிடம் பெற்று கொண்டார்.
4 புலம்பெயர் நாடுகளில் பல பொறுப்பாளர்கள், அமைப்புக்கள் ஆகியோரிடம் இருந்து தகவல்களை
பெற்றுக்கொண்டார்.
5 தலைவர் உண்மையில் இறந்து விட்டதாகவும் அதனை தனக்கு தலைவரின் ஆட்களும் சூசையும்
சொன்னதாகவும் கூறி சிலரை நம்பவைத்தார்.
6 புலம்பெயர் நாடுகளில் நிதி வரவு விபரங்கள், ஆயுத கொள்வனவுகள் பற்றிய விடயங்களையும் கேட்டறிந்து
கொள்ள முற்பட்டார்.
ஆனால் இவை அனைத்தையும் இவர் மிகவும் இலாவகமாக எங்கிருந்து செய்தார் என்பது உங்களுக்கு மட்டுமல்ல
ஏமாந்த புலிபொறுப்பாளர்கள் சிலருக்கும் தெரியாது. உண்மையில் இவை அனைத்தையும் திரு இராம் அவர்கள்
எங்கிருந்து மேற்கொண்டார் என்றால் மின்னேரியாவில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாமில் இருந்துதான்.
இவை அனைத்தையும் இராணுவத்தின் வழிநடாத்தலில் மேற்கொண்டார். இந்த விடயம் புலிகளில் உள்ள சிலருக்கு
தெரியும் அதாவது நாட்டில் இருக்கும் புலிகளின் மிக முக்கியமானவர் சிலருக்கும் வெளி நாட்டில் இருக்கும்
சிலருக்கும் ஏற்கனவே தெரிந்திருந்தது. ஆனால் அவர்கள் அமைதியாக இருந்துவிட்டனர். ஏன் என்று தெரியவில்லை.
நாட்டில் இருக்கும் புலனாய்வு துறை, இம்ரான் பாண்டியன் படையணி, ராதா வான் காப்பு அணி, கரும்புலிகள் அணி
மற்றும் புலிகளின் இராணுவ புலனாய்வு அணிகள் திரு இராம் அவர்களிடம் தமது விபரங்களை ஒப்படைக்காது
அதே நேரம் அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவது போன்று நடித்துள்ளனர். ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில்
இருக்கும் புலிகளின் சில பொறுப்பாளர்கள் திரு இராம் அவர்களுடன் கதைக்கும்படி தொடர்புகளை ஏற்படுத்தி
கொடுத்த வண்ணம் இருந்தனர்.
இது இவ்வாறு இருக்க இவரின் உண்மைதன்மை எங்கு இருக்கின்றார் என்பதனை கண்டறிய இரு கரும்புலி
அணிகளை சேர்ந்தவர்களும் அதே நேரம் புலிகளின் புலனாய்வு அமைப்பும் பல பக்கங்களில் செயற்பட்டனர்.
இறுதியாக சில கரும்புலி உறுப்பினர்கள் நேரடியாகவே களத்தில் இறங்கினர். திரு இராம் அவர்களுடன் நேரடியாக
பேசி வெளி நாட்டில் உள்ள ———- என்பவர் நீங்கள் தான் படையணிகளுக்கு பொறுப்பு என்று கூறியதாகவும்
சாமான்களையும் ஆட்களையும் பற்றி கதைக்கவேண்டும் என கூறியபோது திரு. இராம் அதற்கான திகதி நேரம்,
இடம் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளார். அந்த போராளி அங்கு சென்றார். ஆனால் செல்லும்போது அவர் தனது
கைத்தொலை பேசியில் கூறும்போது “ரோட் கிடங்கும் பள்ளமுமாக இருக்கு” என சங்கேத மொழியில் கூறினார்.
இறுதியாக கூறும்போது “வந்திட்டன் ஆனால் மை போல கிடக்கு” என கூறினார். அதன்பின்னர் தொடர்பு இல்லை.
ஆனால் திரு இராம் அவர்கள் பின்னர் வெளிநாட்டில் உள்ளவர்களிடம் பேசும்போது அவங்கள் ஆமியோட கூட்டு
மற்ற மாதிரி என பேச்சினை முடித்துகொண்டார்.
அடுத்த சோதனையாக இவர் நிதி அடிக்கடி அனுப்பசொல்வது வழமை ஆகவே இந்த நிதி வங்கி கணக்கிற்கு
அல்லது உண்டியல் அல்லது மணிகிறாம் ஊடாக பெற கூடியவாறு விபரங்களை திரு இராம் அனுப்பியுள்ளார்.
இவ்வாறு புலம்பெயர்ந்த நாடு ஒன்றில் இருக்கும் ஒரு புத்திசாலி புலி அங்கிருக்கின்ற ஆதரவாளர் மற்றும் சில
புலி அங்கத்தவர்களுடன் பேசி குறிப்பிட்ட ஒரு நகரத்தினை சொல்லி இந்த இடத்தில இந்த நாள் நீங்கள் போய்
நில்லுங்கள் காசு எடுக்கவருவார்கள் என்ன மாதிரி என்று பார்த்து சொல்லுங்கள் என தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதே நேரம் இராம் அவர்களின் உதவியாளருக்கும் தகவல் வழங்கப்பட்டது அதாவது வழமையான இடத்தில் இந்த
திகதியில் போய் எடுக்கலாம் என அறிவித்துள்ளார்கள். சொன்னதன்படி இராம் அவர்களின் உதவியாளர் வந்தார்
ஆனால் சும்மாவா வந்தார் இரண்டு பீல்ட் பைக்கில்ஸ் உடன் பாதுகாப்பாக வந்து சிறிது தூரத்தில் இறக்கிவிடப்பட்ட
பின்னர் குறிப்பிட்ட நபர் பணத்தினை எடுத்து சென்றிருக்கின்றார்.
அடுத்ததாக இவரிடம் வழங்கப்பட்ட தகவல்களின் படி சில போராளிகள் பிடிபட்டனர், ஆயுத கிடங்குகள் பிடிபட்டன.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போராளிகளும், புலம்பெயர் புலிகள் சிலரும் கேட்டபோது அது பழைய சாமான்கள்
கருணாவோட காலத்தில செய்தது இப்ப எடுக்கிறாங்கள் என்று கூறியுள்ளார். சில நேரம் நம்மட பிடிபட்டவங்க
காட்டி கொடுக்கிறாங்க என்று சமாளித்துள்ளார். ஆனால் போராளிகளின் கருத்துப்படி இவர் ஆயுத விபரங்களை
கேட்டபோது அவர்கள் உண்மையான இடத்தினை சொல்லாது சில ஆயுதங்களை புதிய இடங்களில் பதுக்கி வைத்து
விட்டே தகவல்களை வழங்கி இருக்கின்றனர். இதன்படி முன்பு பிடிபட்ட போராளிகளுக்கு அந்த விடயங்களே
தெரியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதே நேரம் இங்கு புலிப்பொறுப்பாளர்களுடன் கதைக்கும் போது தமக்கு சாப்பாட்டிற்கே வழி இல்லை என்றும்
போன் சார்ச் பண்ண முடியாத நிலையில் உள்ளதாகவும் கூறுவார். ஸ்கப் வசதி நமக்கு இல்லை போனிலதான்
பேசவேண்டும் என்று கூறும் இவர் அதே நாள் சில மணித்தியாலங்களில் தனக்கு நெருங்கிய நண்பரிடம்
ஸ்கைப்பில் பேசியுள்ளார். என்னதான் நடக்குது என்று குழம்பிபோயினர் சில புலிகள்.
அடுத்ததாக சில பெண்போராளிகளை அம்பாறை, மட்டகளப்பு போன்ற இராணுவ முகாம்களில் வைத்து சித்திரவதை
செய்து அவர்களூடாகவும் பணம் பெறப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட யாழ் மாவட்டத்தை சேர்ந்த போராளி இவ்வாறு
நிர்க்கதியாகி இவர்களின் திட்டத்திற்கு அமைவாக செயற்பட்டார். இதன்படி தான் காயப்பட்டு இருப்பதாகவும் தனக்கு
அப்பா அம்மா சகோதரங்கள் யாரும் இல்லை என்றும் தான் இந்தியா செல்ல இராம் அண்ணா ஒழுங்குபடுத்தி
இருப்பதாகவும் 10 இலட்சம் ரூபா உடன் தேவை என்றும் வெளிநாடுகளில் காசு கேட்டுள்ளார். சிலர் இரக்கம்
பார்த்து பணம் அனுப்பினர். ஆனால் பின்னர்தான் தெரிய வந்தது அந்த பெண்போராளிக்கு அப்பா அம்மா உட்பட
சகலரும் இருக்கின்றார்கள் மட்டுமன்றி சகோதரன் கூட வவுனியாவில் உள்ளார்.
மாவீரர் நாள் உரை
இதே நேரம் இவ்வருட மாவீரர் நாள் உரை நான் தான் விடப்போகின்றேன். நான் வீடியோவிலும்,
வொஇஸ் கட் இலும் தருவேன் அதனை போடுங்கள் ஒரு எஃப் ரி பி இல போட்டு தருவோம் நீங்கள் அதனை
பிரசுரியுங்கள் என நேற்று பல இணைய தளங்களுக்கு கூறியுள்ளார். திரு. இராம். அது மட்டுமன்றி புலிகளின்
தலைவராக தாம் ஒருவரை நியமித்து உள்ளதாகவும் துணைத்தலைவர் தான் என்றும் செயலாளர் அல்லது
பேச்சாளர் திரு நகுலன் என்றும் கூறியுள்ளார். (இந்த ஒலிப்பதிவு சில இணைய தள ஆசிரியர்களிடம் பதிவு
செய்யப்பட்டு உள்ளது.)
சிம் காட்டிற்கே வசதி இல்லாம நிற்குறோம் ஐயா என சொன்ன இராம் இந்த நவீன வசதிகளுடன் இப்போது
இருக்கின்றார் என்பது சந்(தேக)தோசமாக இருக்கின்றது அல்லவா.
நடந்தது இதுதான் அம்பாறையில் மட்டகளப்பில் இருந்த ———- என்ற புலிபொறுப்பாளர் ஏற்கனவே
கருணா ஊடாகவும், இராணுவத்தினரின் பராமரிப்பில் இருந்துவந்துள்ளார். இவர் வன்னியில் போர் உகிரமடைந்து
வருகையில் மணலாற்று காட்டுப்பகுதிக்கு அழைக்கப்பட்டிருந்தார். தலைமையின் சொல்லை கேட்பது போன்று
இராணுவமும் இவரை மண்கிண்டி மலை பகுதிக்கு அனுப்பியது. பின்னர் நகுலன் அவர்களையும் இவர் ஊடாக
வரவழைக்கப்பட்டபோது நகுலனும் இராணுவத்தினர் போட்ட வலையில் சிக்கினார். தொடர்ந்து நகுலன் மற்றும்
மட்டு பொறுப்பாளர் அவருடன் இன்னுமொரு முக்கிய பொறுப்பாளர் எல்லோரும் சேர்ந்து ராம் அவர்களை
அழைப்பது போன்று வரவழைத்து இராணுவம் போட்டதிட்டத்தில் சிக்கி கொண்டனர். இவர்களுடன் ஒரு
கொம்பனி போராளிகளும் உள்ளடங்குவர்.
இவர்களை வைத்தே இப்போது இராணுவம் இயக்கம் ஒன்றை நடாத்தி வருகின்றனர். இந்த அடிப்படையில்.
வெளி நாட்டில் இருக்கின்ற சில பொறுப்பாளர்கள். நாடு கடந்த அமைப்பின் முக்கியஸ்தர்களும் நாட்டில் இருந்து
வந்த சில பொறுப்பாலர்கள் தயா மோகன் உட்பட எல்லோரும் சேர்ந்து மாவீரர் நாள் அறிக்கை தயரிக்கப்பட்டு
வருகின்றது.
இந்த அறிக்கையில் தலைவர் பிரபா இறந்துவிட்டதாகவும் அவருக்கு வீரவணக்கம் செலுத்தி இயக்கத்திற்கு
புதிய தலைவர், துணை தலைவர், செயலர் ஆகியோரை நியமித்து அறிக்கை வரவுள்ளது. தலைவராக கே.பி
அல்லது இராணுவத்தால் கைது செய்யப்பட்ட ஒரு புலிதலைவர் (இது இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது ஆனால்
திகைப்பூட்டும் வகையில் அந்த பெயர் இருக்கலாம்) நியமிக்கப்படுவர். இந்த அறிக்கையில் தமிழீழம் என்ற
இலட்சியத்தினை விடுத்து அரசாங்கம் சர்வதேச நாடுகளுடன் சேர்ந்து ஒருங்கிணைந்த இலங்கைகுள் கூட்டு
அரசியலை நோக்கிய திட்டம் ஒன்று அறிவிக்கப்படலாம். புலம்பெயர் மக்களை ஏமாற்ற நாடுகடந்த அரசுக்கும்
ஆதரவு தருமாறும் அறிக்கை வரலாம்.
அண்மையில் திரு இராம் கைது செய்யப்பட்டதாக ஒரு செய்தி வந்திருந்தமை உங்களுக்கு தெரியும்.

ஆனால் இதுதான் நடந்தது.
ராம் நகுலன் ஆகியோர் இராணுவத்திடம் இருக்கின்றனர் என்ற செய்தி உறுதிப்படுத்தப்பட்டதைன தொடர்ந்து
பலர் அவருடனான தொடர்பை துண்டித்துக் கொண்டனர். இதனால் திட்டம் பிசக போகுது என்று அறிந்த
சிங்கள இராணுவம் ராம் அவர்கைள தப்பி ஓடுவது போல விட்டு பின்னர் பிறிதொரு இடத்திற்கு மாற்றினர்.
ராம் அவர்களும் முன்னேற்பாடாக இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னர் எனக்கு கொஞ்சம் சிக்கலாக இருக்கு
சில நேரம் மெடிக்ஸ் தேவைப்படலாம் ஆட்கைள ஒழுங்கு பண்ணுமாறு வடபகுதியில் உள்ள போராளிகளிடம்
கேட்டுள்ளார். இந்த சம்பவத்தின் பின்னர் உடனடியாக வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் அங்குள்ள
சில போராளிகளுக்கும் சொல்லியுள்ளார். சிக்கல்தான் ஒருமாதிரி உடைத்து கொண்டு வந்திட்டன் இப்போ
முன்பு இருந்த இடத்தில் இருந்து 40 கிலோ மீற்றர் தொலைவில் வந்துவிட்டதாக கூறியுள்ளார்.
ஆனால் இன்னொரு புதினம் இவர் இராணுவத்திடம் ஏற்கனேவ மாட்டியுள்ளார் என நம்பிக்கையாக தெரிந்த
ஒரு பொறுப்பாளருக்கு சொல்லியுள்ளார். நான் மாட்டிதான் இருந்தனான் ஆனால் இப்போ நல்ல
பிள்ளைளேபால் நடித்து வெளியே தப்பி வந்திட்டேன் என்று கூறியுள்ளார். ம்ம்ம் என்னதான் நடக்குது !!!??
எது எப்படி இருப்பினும் மக்களே உசாராக இருங்கள்!!
கிழக்கில் இருந்த 200 மேற்பட்ட போராளிகளும் ராம் நகுலன் என்பவர்களும் அரச இயந்திரத்தினால்
நடாத்தப்படும் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் என்பதைன மனதில் கொண்டு செயற்படுங்கள்.
தேசிய தலைவர் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. தமிழீழ தேசிய
தலைவர் மேததகு வே.பிரபாகரன் அவர்கள் இறுதி வரை யுத்தத்தில் ஈடுபட்டார். 16 ம் திகதி அதிகாலை
முள்ளிவாய்க்கால் கடற்கைர வழியாக ஒரு விசேட கொமாண்டோ அணி உடைத்து ஊடறுத்துக் கொடுக்க
தேசிய தலைவர் கரும்புலி அணிகேளாடு வெளியேறினார் முன்பு சென்ற அணி கெப்பாபுலவு ரோட்டில்
இருபக்கமும் பொக்ஸ் அடித்து அதனூடாக தலைவரின் அணியை வெளியேற்ற உதவியது என தகவல்.
அணியின் தலைவராக கேணல் லக்ஸ்மன் செயற்பட்டார். லக்ஸ்மன் அவர்களின் இறுதி செய்தி “நான்
கடந்திட்டேன் ஆனால் காயப்பட்டுவிட்டேன்” என்பேத ஆகும். ஆனால் அவர் தலைவைரப்பற்றியோ
தன்னைப்பற்றியோ இதுவரை எந்த செய்தியினையும் சொல்லவில்லை. அதன்பின்னர் தொடர்பு
ஒருவருக்கும் இல்லை என்பது எனது அனுமானம்.
தலைவர் சொல்லும் போது போராளிகள், சாரதி, தொலைத்தொடர்பாளர், மருத்துவர்
என அனைவரையும் விட்டுவிட்டு கரும்புலிகள் அணியுடந்தான் சென்றார். அவர்
சென்றது சில முக்கியமான தளபதிகளுக்கு கூட தெரியாது. இதே நேரம் கேணல் சூசை
மற்றும் திரு பொட்டு அம்மான் உட்பட பலர் 17 ம் திகதி காலை வரை
முள்ளிவாய்க்கால் உட்பகுதியிலேயே சண்டை பிடித்துகொண்டு நின்றார்கள் என்பதும்
உண்மை.
நன்றி
இ.மாறன்
உங்களில் ஒருவன்

லெப்.கேணல் ராதா

ராதாவின் சாதனைகளில் இன்னும் ஊமையாய் இருக்கும் உண்மைகள் சில, எம் தேசம் மீண்ட பின்பே பேசப்படும்.

லெப்.கேணல் ராதா
கனகசபாபதி ஹரிச்சந்திரா - வண்ணார்பண்ணை யாழ்
வீரஜனனம: 22-12-1958 - வீரமரணம் 20-05-1987
யார் இந்த ராதா? தமிழீழ போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்கட்கு ராதாவை தெரியாமல் இருக்க முடியாது. யாழ் இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே ஆற்றலும் ஆளுமையும் மிக்க இளைஞனாயிருந்த ஹரிச்சந்திரா தான் 1983ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டதும் தலைவரினால் ராதா எனப் பெயரிடப்பட்டு எமது விடுதலைப்பயணத்தில் தளபதி ராதா ஆகினார்.
கல்லூரியில் படிக்கும் காலத்திலும், பின்னரும் தான் ராதா எப்போதும் அழகான ஆடம்பரமற்ற உடைகளை உடுத்தும் பழக்கம் உடையவர். இதனால் யாழ் வீதிகளில் மோட்டார் சைக்கிள்களில் உலா வந்த ராதாவைப் பார்ப்பவர்கட்கு அவர் ஓர் அரச அதிகாரியைப் போலவோ அல்லது மருத்துவரைப் போலவோ தோன்றினாரே அன்றி வேறு விதமான பார்வையைக் கொடுக்கவில்லை.
சாந்தமும் வசீகரமும் கொண்ட அவரது தோற்றத்தைப் போலவே அவரது அணுகுமுறைகளும் அமைந்திருந்தன. 8ம் வகுப்பில் படிக்கும் போதே சாரணர் இயக்கத்தில் சேர்ந்து கொண்ட ராதா உயர்தர வகுப்பு படிக்கும் வரை சாரணர் இயக்கத்தில் இருந்து கல்லூரியின் பயிற்சிப் பாசறைக்கே தலைவனாக இருந்ததினால் கல்லூரிக் காலத்தில் இருந்தே அவரிடம் நிர்வாக ஒழுங்குகளும் கட்டுப்பாடுகளும் நிறைந்து காணப்பட்டன.
யாழ் இந்துக்கல்லூரியில் மாணவ தலைவர்கட்கு முதன்மை மாணவத் தலைவனாக இருந்த ராதா வகுப்பறைகளின் நடைபாதைகளில் நடந்து வந்தாலே மாணவர்கள் அதிபரைக் கண்டதுபோல் அமைதியாகி விடுவார்கள். இது ராதா மாணவப் பருவத்து நினைவுகள்.
கல்வி, விளையாட்டு, நிர்வாகம் என்று எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கிய ராதா தனது கல்லூரி வாழ்வை முடித்துக்கொண்டு கொழும்பில் வங்கியொன்றில் பணிபுரிந்தார். 1983ல் நடைபெற்ற இனப்படுகொலைகளை கண்களினால் கண்ட ஹரிச்சந்திரா உடனடியாகத் தன்னை விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு இணைத்துக்கொண்டார்.
அறிவும், ஆற்றலும், வீரமும், விவேகமும் ஒருங்கே கொண்ட ஒரு வித்தகனை விடுதலைப்புலிகள் இயக்கம் பெற்றுக்கொண்டது. இந்த வித்தியாசமான வீரனை, நடமாடும் பல்கலைக்கழகத்தினை இனங் கண்டுகொண்ட தேசியத்;தலைவர், ராதாவின் ஆற்றலும், ஆளுமையும் அவரைப் போல பல நூறு போராளிகளை உருவாக்கும் என்பதை உணர்ந்து கொண்டு பயிற்சி முகாமினை நடாத்தும் பணியினை ராதாவிடம் ஒப்படைத்தார். அந்தப் பல்கலைக்கழகத்திடம் இருந்து விடுதலைப்புலிப் போராளிகள் படித்துக்கொண்ட பாடங்கள் தான் எத்தனை? எத்தனை?
பயிற்சி முகாமில் புலிக்கொடி பறக்கிறது. போராளிகள் அணிவகுத்து நிற்கின்றார்கள். இப்போது கல்லூரியில், வீதிகளில் கண்ட ஹரிசந்திராவை அங்கே காணமுடியவில்லை. ஆங்கிலப் படங்களில் வெறுமனே வேசமிட்டு வரும் ஒரு பெரிய இராணுவ அதிகாரி ஒருவனை அங்கே காணமுடிந்தது.
"Scout Attention" என்ற அதிகார அறைகூவலும், உருமறைப்பு உடைகள் உரசும் சத்தத்துடனான இராணுவ நடையும் அவருக்கே உரியவை. பயிற்சிக் கழகத்தில் ராதாவைப் பார்த்தாலே பயமாக இருக்கும். அவ்வளவு கடுமை, அசுர வேகம் அதுதான் ராதா.
ராதா அசைக்கமுடியாத தன்னம்பிக்கை மிக்கவர். அதேபோல் தலைவரும் ராதா மேல் நம்பிக்கை கொண்டிருந்தார். பயிற்சி முகாம்களில் பயிற்சி பெறும் போராளிகள் கடுமையான கொமாண்டோ பயிற்சிகளை பெறும்போது அவர்களின் பின்னே னுரஅடி ரவன்ஸ் எனப்படும் போலிக்குண்டுகளைப் பாவித்து போர்க்கள நிலைமையைப் போன்ற பிரமையை உருவாக்கும் போர்ப்பயிற்சி மரபுமுறை. ஆனால் ராதா இந்த மரபுகளை மீறினார். தான் போலிக்குண்டுகளை பாவிக்க விரும்பவில்லை, நிஜமான குண்டுகளை பாவிக்கப்போவதாக ராதா தலைவரிடம் அனுமதி வேண்டினார். ராதாவின் திறமையிலும் நம்பிக்கையிலும் நம்பிக்கை கொண்டிருந்த தலைவர் ராதாவிற்கு அனுமதி கொடுத்தார்.
"Down Position" இது ராதாவின் கட்டளை. பயிற்சி பெறும் போராளிகள் வேகமாக நிலை எடுத்து நகர்கிறார்கள். அப்போது அவர்களின் பின்னே நின்ற ராதா எம்-16 ரகத் துப்பாக்கியினால் அவர்களின் பாதணிகளைக் குறிபார்த்துச் சுடுகிறார். நிஜமான குண்டுகள் பாதணிகளில் பட்டும் படாததுமாய் செல்கின்றனர். அருகே நின்று பயிற்சியை மேற்பார்வை செய்துகொண்டிருந்த பொன்னம்மான் சொல்கிறார் "அது தான் ராதா". அன்றைய பயிற்சி முடிந்து போராளிகள் தங்கள் தங்குமிடங்களுக்கு செல்கின்றார்கள். அங்கே தங்களது இரும்பாலான அடிப்பாகங்களைக் கொண்ட சப்பாத்துக்களை கழற்றிப் பார்க்கிறார்கள். சிலரது பாதணிகளை எம்-16 ரவைகள் துளைத்திருந்தன. இந்த ஓய்வு நேரத்தில் அந்த 'அத்காரி ராதாவைக்" காணவில்லை. ஒரு நல்ல நண்பனை, தோழனை அங்கே காணமுடிந்தது. என்ன I say கஸ்டமா இருக்கா, துன்பந்தான். இப்படிக் கதைப்பது ராதாவின் வழமை.
பள்ளிக்கால காதல் கதை கேட்கும் அளவிற்கு பழகுவார் ராதா. ஒரு மாலை நேரம் பயிற்சி முடிந்து எல்லோரும் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு போராளி தனது பள்ளிக்காதலியின் பெயர் இராசாத்தி என்றும் அவளைப்பற்றிய கதைகளையும் ராதாவோடு கதைத்திருந்தான். சிறிது நேரத்தில் முகாமின் ஒலிபெருக்கி "இராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" என்ற பாடலை மெதுவாக ஒலித்துக்கொண்டிருந்தது. இப்படி ராதா வித்தியாசமானவர்.
தமிழ், ஆங்கிலம், சிங்களம் என்று மூன்று மொழிகளையும் அறிந்திருந்த ராதாவின் மேசையில் புத்தகங்களும் குவிந்திருக்கும். அவர் தெரிந்து வைத்திருக்காத துறையே இல்லை என்று துணிந்து கூறலாம். ராதாவின் ஆற்றல் கண்டு தலைவரே ஒரு தடவை வியந்து புகழ்ந்ததுண்டு.
அடர்ந்த காடு குறிப்பிட்டளவு போராளிகள், பொன்னம்மான், விக்டர் உட்பட சில தளபதிகள் அவர்களோடு தலைவர். இவர்களுடன் கையில் வாக்கிடோக்கியுடன் ராதா. எல்லோரும் மிகுந்த மகிழ்வோடு தலைவரும், பொன்னம்மானும் கூறும் கதைகளைக் கேட்டபடியே காட்டின வழியே நடந்து கொண்டிருந்தார்கள். எல்லோரோடும் சேர்ந்து சிரித்துக் கதைத்தபடி நடந்து கொண்டிருந்த ராதா திடீரென "னுழறn Pழளவைழைn" என உரத்த குரலில் கட்டளை பிறப்பித்தான். தலைவர் உட்பட எல்லோரும் கட்டளைக்குப் பணிந்தார்கள். தலைவனும் தளபதிகளும் உள்ளிருந்து வெளிநோக்கி வியூகம்; அமைக்குமாறு சைகையால் கட்டளை கொடுத்தார்கள். அது வரை எதுவுமே நடக்கவில்லை. சிறிது சிறிதாக கேட்ட ரீங்கார சத்தம் ஒன்று மட்டும் கூடிக்கொண்டு வந்தது. அதுவரை ராதாவைத் தவிர எவருக்கும் எதுவும் புரியவில்லை. சிறிது நேரத்தில் காட்டுத் தேனீக்களின் பெரிய பட்டாளம் ஒன்று பேரிரைச்சலுடன் எல்லோரையும் கடந்து பறந்து சென்றது.
தேனீக்கள் கண்களில் இருந்து மறைந்ததும் எல்லோரும் எழுந்தார்கள். பொன்னம்மானும் தலைவரும் ராதாவைப் பார்த்தார்கள். " காடு பற்றிய புத்தகம் ஒன்றில் படிச்சனான் அண்ணை. சத்தம் சிறிதாக இருக்கும் போதே இதுவா இருக்குமோ என்று நினைச்சுத்தான் Command கொடுத்தனான். அதுபோலவே நடந்துவிட்டது. இந்தத் தேனீக்கூட்டம் பாதை மாறாதாம் வந்த வழியே பறக்குமாம். நாங்கள் கீழே படுக்காமல் நடந்து வந்திருந்தா இண்டைக்கு எங்களிலே கனபேருக்குக் கண் பறந்திருக்கும்"என்று ராதா கூறி முடித்தார்.
ராதாவைத் தொடர்ந்த பொன்னம்மான் போராளிகளைப் பார்த்து " இண்றைக்கு இதிலை இரண்டு விசயம் படித்திருக்கிறியள். ஒரு திடீர் யுடநசவ வந்தால் எப்படி positionP எடுக்கிறது ஒன்று . order வந்தால் கேள்வி கேட்கக் கூடாது எண்டது இரண்டாவது. ஏன் படுக்க வேணும் எதற்குப் படுக்க வேணும் என்று யாரும் கேட்டுக் கொண்டு நிண்றிருந்தால் இப்ப கண் போயிருக்கும் Down என்றால் Down தான்" என்று சொல்லிச் சிரித்தார்.
இவ்வாறு எண்ணற்ற திறமைகளைக் கொண்டிருந்த ராதா தலைவரின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெற்ற விசேட கொமாண்டோ அணியிற்கும் பயிற்சி அளித்தார். பயிற்சியாளனாக இருந்த ராதா லெப்.கேணல் விக்டருடன் மன்னார்க் களம் நோக்கிச் சென்று சாதனைகள் செய்யத் தொடங்கினான். மன்னார் பொலிஸ் நிலையத் தாக்குதலில் ராதாவின் திறமையை விக்டர் பல இடங்களிலும் குறிப்பிடுவது வழக்கம்.
விக்டர் இறந்த பின் மன்னார்ப் பிரதேசத் தளபதியாகப் பொறுப்பேற்ற ராதா உலகில் கண்ணிவெடியால் தகர்க்கப்படாதென புகழ்பட்ட "பவலோ" கவச வாகனத்தைத் தகர்த்து விடுதலைப்புலிகளின் தொழில்நுட்பத் திறனை உலகிற்குக் காட்டினார்.
கேணல் கிட்டு அவர்கள் காலை இழந்த பின் யாழ் பிராந்தியத் தளபதியாக பொறுப்பேற்ற ராதா குறுகியகால இடைவெளியில் குரும்பசிட்டி இராணுவமுகாம், மயிலியதனை இராணுவமுகாம், காங்கேசன்துறை காபர்வியூ இராணுவமுகாம் என பல முகாம்களைத் தாக்கிப் பல வெற்றிகளைக் குவித்தார். பல முனைகளிலும் திறமை கொண்ட இந்த நடமாடும் பல்கலைக்கழகம் இன்னும் சில காலம் இருந்திருந்தால்..... இது தலைவர் உட்பட எல்லோர் மனதிலும் எழும் கேள்வி. "சண்டைக்கு எண்டு போய் சாகிறதெண்டால் ஐ ளுயல எங்களுக்கெண்டு ஒரு றவுண்ஸ் அல்லது ஓர் செல் துண்டு இருக்கு அது வந்தால் தான் சா வரும். இல்லையெண்டால் ஒரு போதும் சாகேலாது I say" இது ராதா போராளிகளைப் பார்த்து அடிக்கடி கூறும் வாசகம். ஆம் அவர் கூறியது போல் 20-05-1987ல் அவரைத் தேடி எதிரி ஏவிய குண்டொன்று அவரது மார்பினைத் துளைத்தது. ஹரிச்சந்திரா என்ற ராதா காவியமாகி ஆண்டுகள பல தாண்டிய போதும் அவரது பசிய நினைவுகள் எம் மண்ணில் இருக்கும். ராதாவின் சாதனைகளில் இன்னும் ஊமையாய் இருக்கும் உண்மைகள் சில, எம் தேசம் மீண்ட பின்பே பேசப்படும்.

வெற்றிக்கு வித்திட்ட லெப்.கேணல் குணா

இந்திய அடக்குமுறைப் படை தமிழீழப் பிரதேசமெங்கும் ஆக்கிரமிப்புக் கால்களைப் பதித்திருந்த நேரம் ... யாழ் - தென்மராட்சிப் பகுதியில் இந்தியப் படைக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்... எவரையும் கவரக் கூடிய நிமிர்ந்த எடுப்பான தோற்றத்துடன்.... தென்மராட்சித் தளபதியாக மக்களின் அன்புக்கும் மதிப்பிற்குமுரியவராக அந்நாட்களில் மக்களின் ஆதரவுடன் அன்னை மண்ணை ஆளவந்த படையை எதிர்த்து அண்ணன் வழி நின்ற தளபதி.. குணாண்ணை என்று அன்போடும் உரிமையோடும் அழைக்கப்பட்டு வந்த.. லெப். கேணல் குணா.
அன்றைய நாட்களில் தென்மராட்சியில் குணா அவர்களின் பெயரைக் கேட்டாலே இந்திய இராணுவத்திற்கும் அதனுடன் சேர்ந்தியங்கிய துரோக கும்பலிற்கும் கலக்கம் தான். பல நெருக்கடியான இறுக்கமான சந்தர்ப்பங்களிலும் தளராது களம் நின்று எதிரிகளுக்கு இழப்புகளை கொடுத்த தளபதி. அதற்கமைவான ஒரு சம்பவத்தை நினைவு கூரலாம்...

1987 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி மேஐர் நடேசு மற்றும் கப்டன் சிங்கன் (பாபு) ஆகிய இருவரும் சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் உள்ள வீடொன்றிற்கு குளிப்பதற்கு சென்று குளித்துக் கொண்டு இருந்த பொழுது தீடீரென சுற்றி வளைத்த இந்திய இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் இருவரும் வீரச்சாவடைகின்றனர்.
சம்பவமறிந்து கலங்கிப் போய்விட்டனர் குணாவும் தோழர்களும். இதற்கிடையில் அந்த இரண்டு போராளிகளின் உடல்களையும் இந்திய இராணுவம் சாவகச்சேரியில் தெருத் தெருவாக கட்டி இழுத்து சென்றதை அறிந்த போது கவலையில் இருந்தவர்களை மேலும் ஆத்திரமடையச் செய்தது.
உடனடியாக செயலில் இறங்கிய குணா,பாலன் (பிறிதொரு சண்டையில் மட்டுவில் பகுதியில் 1989 இல வீரச்சாவு) எனும் போராளியிடம் இறந்த போராளிகளின் பெற்றோருக்கு உடலை பெறுப்பேற்றாலும் தகனம் செய்யவேண்டாம் என்றும் தாங்கள் வந்த பின்னரேயே தகனம் செய்ய வேண்டும் எனவும் சொல்லச் சொல்லி அனுப்பிவைத்தார்.
தன்னோடு தினேசண்ணையையும் (பிரிகடியர் தமிழ்ச்செல்வன்) இன்னும் ஐந்தாறு போராளிகளையும் அழைத்துக் கொண்டு சாவகச்சேரி - வேல் திரையரங்கில் நிலை கொண்டிருந்த இந்தியப் படை மீது தாக்குதலைத் தொடுப்பதற்காக விரைகிறார். டச்சு வீதி வழியாக தாக்குதலை எதிர்பார்த்து நின்ற குணா அணியினர் டச்சு வீதியிலிருந்து இந்திய படையும் ஈ.பி ஆர் எல் எவ் துரோக கும்பலும் புறப்பட்டதையறிந்து யாழ் - கண்டி வீதியில் நிலையெடுத்து கொள்கின்றனர் . அடை மழை பெய்து கொண்டிருந்த நேரம். காத்திருந்தது போலவே இந்திய - ஈ.பி ஆர் எல் எவ் துரோக கும்பல்களின் வாகன தொடரணி வரவும் கண்ணிவெடித் தாக்குதலுடன் சண்டை தொடங்கியது. சுமார் 15 நிமிட நேரம் நடைபெற்ற நேரடி மோதலில் 5 இற்கும் மேற்பட்ட இராணுவம் கொல்லப்பட துரோகக் கும்பலில் 12 பேர் காயமடைய சண்டைய முடித்துக் கொண்டு கைப்பற்றிய ஆயுதங்களுடன் கல்வயல் - விளைவேலி பகுதிகளுக்கூடாக தினேசண்ணையோட மட்டுவிலுக்கு வந்து மாவீரர் மேஜர் நடேசு கப்டன் சிங்கன் ஆகியோரின் வித்துடல்களின் முன் கைப்பற்றிய ஆயுதங்களை வைத்த பின்பே தகனம் செய்ய உத்தரவிட்ட குணா அண்ணன் களத்தில் சாதித்தவை அநேகம்.

1993-11-11 மீண்டும் பூநகரியில் களம் திறக்கப்படுகிறது. பத்தாம் திகதி இரவிலே தனங்கிளப்பு அறுகுவெளியூடாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அணிகள் நகர்த்தப்படுகின்றன. முதலில் சென்று கொண்டிருந்த அணிகளுக்கு தலைமைதாங்கிச் சென்று கொண்டிருந்த குணா அணியினருக்கு எதிர்பாராத விதமாக சண்டை தொடங்கப்படு முன்னரே எதிரிகளின் கடும் தாக்குதலைச் சந்திக்க நேரிடுகிறது. ஆனாலும் தமது தாக்குதலின் பிரதான இலக்கு எந்த ஒரு காரணத்துக்காகவும் தவறக் கூடாது என்பதற்காக எதிரியின் தாக்குதலைச் சமாளித்தவாறே அணியினரை நகர்த்துகிறார். ஆனாலும் எதிரியின் தாக்குதலில் தன் தாய்மண்ணில் தவளைப் பாய்ச்சல் என்னும் மாபெரும் வெற்றிச் சமரின் முதற்களப் பலியாக தளபதி லெப். கேணல் குணா அவர்கள் வீரச்சாவடைகிறார். அந்நேரத்தில் அவர் இக்கட்டான ஒரு கட்டத்தில் கூறிய "நான் சாகலாம் .. நீ சாகலாம்.. நாங்கள் சாகக் கூடாது" என்ற வார்த்தைகளே அவரின் வடிவமாக நின்றன.. தனது வீர மரணத்தை மாபெரும் வெற்றிச்சமருக்கு அர்ப்பணித்து ஓய்கிறார் பூநகரி நாயகராய்..
இப்படியான ஆயிரம் ஆயிரம் வீரர்களின் அர்ப்பணிப்புகளால் கட்டப்பட்ட எங்கள் தாய்த் தேசம் அந்நியர் பிடியில் மீண்டும்.. தங்கள் சொந்த நலன் கருதாது தம் மண்ணுக்காக இனத்துக்காக தம்மையே அர்ப்பணித்த வீரர்களுக்கு வெறுமனே கண்ணீர் அஞ்சலி மட்டும் செலுத்துவதன்று.. அவர் தம் கனவு ஈடேற நாமும் ஒன்றிணைந்து செயற்பட்டு எமது விடுதலையை வென்றெடுப்பதே அவர்களின் தியாகங்களுக்கு நாம் சூட்டும் மணிமுடியாகும்.

மேஜர் சுவர்ணன்


ஓயாத அலைகள் – 3 என்ற பெயரில் விடுதலைப் புலிகள் பெரும் தொடர்ச் சமரொன்றை சிறிலங்கா அரசபடைகளின் மேல் தொடுத்திருந்த நேரமது. 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதத் தொடக்க நாளில் வன்னிக் காடுகளில் சுழன்றடிக்கத் தொடங்கிய ஓயாத அலைகள் யாழ்ப்பாணப் பக்கத்தை நோக்கித் திரும்பியிருந்தது.
அதன் முதற்கட்டமாக கட்டைக்காடு - வெற்றிலைக்கேணிக் கடற்கரைகளைக் கைப்பற்றிய நிலையில் யாழ் சாலையில் நெஞ்சை நிமிர்த்தியிருந்த பரந்தன் படைத் தளத்தையும் புலிகள் கைப்பற்றி, அடுத்த கட்ட நகர்வுக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்த நேரம். உமையாள்புரம் இராணுவ முகாமைச் சூழ அவ்வப்போது 'சில்லறைச் சண்டைகள்' மூண்டு தணிந்து கொண்டிருந்தன.
ஒருநாள் இரவு உமையாள்புரத்தில் புலிகளின் தாக்குதலணியொன்று எதிரி மீதான திகைப்புத்தாக்குலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. அவ்விடத்தில் நிலை கொண்டிருந்த இம்ரான் பாண்டியன் படையணியைச் சேர்ந்த மேஜர் சங்கர் தலைமையிலான ஒரு கொம்பனியே அந்தத் தாக்குதலுக்கான ஆயத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அது பெருமெடுப்பான நிலமீட்புத் தாக்குதலில்லை. எதிரிகள் சிலரைக் கடுமையான காயத்துக்குள்ளாக்கும் நோக்கத்தோடு நடத்தப்படும் தாக்குதல். இவை யாவும் சுவர்ணன் தலைமையிலான அணியொன்றை மையமாக வைத்துத்தான் நடத்தப்படுகிறது. இந்தத் தாக்குதல் திட்டம் நடைபெறப்போகும் நேரத்தில் சுவர்ணன் தனது அணியோடும் ‘பொருளோடும்’ இராணுவத்தின் முன்னணி நிலைகளைக் கடந்து தென்மராட்சிப் பகுதியில் நிலைகொண்டிருந்தான்.
1996 ஆம் ஆண்டு ஆனிமாதத்தின் நடுப்பகுதியில் ஒருநாள். வன்னிக் காட்டுப்பகுதியில் ஓரிடத்தில் நாங்கள் மும்முரமாக வேலை செய்துகொண்டிருக்கிறோம். வேறிடத்திலிருந்து கழற்றப்பட்டுக் கொண்டுவரப்பட்டிருந்த லக்சபானா மின்கோபுரமொன்றை காட்டுக்குள் ஓரிடத்தில் மீளப் பூட்டும் வேலைதான் அது. அதற்கான கற்றூணை நிலத்துள் நாட்டும் வேலை நடந்துகொண்டிருக்கிறது. ஆழக்கிண்டிய கிடங்கில் கற்றூணை இறக்கிவிட்டோம். இனி நிமித்திவைத்து மண்போட்டு மூடவேண்டும். கல்லோ தொன் கணக்கில் நிறையுடையது. மூன்றுபக்கமிருந்து கேபிள்கள் போட்டு இழுத்து நிமிர்த்திவைத்திருக்க ஒருவர் தூணில் கேடர்கள் பொருத்தி நிலைப்படுத்த வேண்டும். அதன்படி நாங்கள் மூன்றுபக்கமிருந்து இழுத்து தூணை நிமிர்த்திவிட்டநிலையில் கேடரைப் பூட்ட வேண்டிய சுவர்ணன் அதைச் செய்யாமல் எங்கோ பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தான். தூணை இழுத்து வைத்துக் கொண்டிருப்பவர்களுக்குக் கைகடுத்தது.
“டேய் சுவர்ணன்! என்ன மிலாந்திக் கொண்டிருக்கிறாய்? கெதியா கேடரைப் பூட்டு” இது ரகுவண்ணா.
“சுவர்ணன் மாஸ்டர் எண்டெல்லோ கூப்பிடச் சொன்னனான்? அப்பிடிக் கூப்பிட்டு வேலையைச் சொல்லுங்கோ, செய்யலாம்.” இது சுவர்ணன்.
“டேய்! ஆளப்பார் தேவாங்கு மாதிரி இருந்துகொண்டு மாஸ்டரோ?…. பகிடியை விட்டிட்டு கெதியாப் பூட்டடா, கை கடுக்குது” ஒருபக்கத்தில் கேபிளை இழுத்துப்பிடித்திருந்த மைந்தன் கத்துகிறான்.
சுவர்ணன் அசைவதாயில்லை. செங்கோல் பிடித்த மன்னன் போல ஒருகையில் கேடரைப்பிடித்தபடி மறுகையை இடுப்பில் வைத்தபடி ஒயிலாக ‘போஸ்’ கொடுத்துக் கொண்டிருந்தான். அவ்விடத்தில் வேறு ஆட்களுமில்லை. அடிக்கப் போவதென்றாலும் ஒருவர் கேபிளை விட்டுவிட்டுத்தான் போகவேண்டும்.
“சுவர்ணன் மாஸ்டர், அச்சா மாஸ்டரெல்லோ, ஒருக்கா கேடரைப் பூட்டிவிடுங்கோ மாஸ்டர்”… ஒருமுனையிலிருந்த குமுதன் கெஞ்சினான். அதன்பிறகுதான் சுவர்ணன் தனது வேலையைச் செய்தான். அன்றைய செயலுக்குப் பரிகாரமாக தேங்கிநின்ற சேற்றுநீரில் எங்களால் புரட்டியெடுக்கப்பட்டான்.
இப்படித்தான் இருப்பான் சுவர்ணன். எந்தநேரமும் ‘சீரியசாக’ பகிடி விட்டுக் கொண்டிருப்பான். தன்னை மாஸ்டர் என்றுதான் அழைக்க வேண்டுமென்று அடிப்படைப் பயிற்சி முடிந்து சிறப்பு இராணுவப் பயிற்சிகள் தொடங்கிய காலத்திலேயே கதைக்கத் தொடங்கிவிட்டான். உச்சிவெயிலில் வாட்டியெடுக்கப்பட்ட நிலையில் கொட்டிலுக்கு வந்தால் சுவர்ணனின் சேட்டைகள் இன்னும் கொதியைக் கிழப்பும். அதுவும் கோபம் உச்சத்துக்கு வரும்போது திக்கத் தொடங்கிவிடும் ரகுவண்ணாவை வேண்டுமென்றே அவன் படுத்தும்பாடு சொல்லி மாளாது. தன்னை மாஸ்டர் என்று சொல்லச் சொல்லிச் நச்சரிக்கும் எந்தவிடத்திலும் சிறுபுன்னகைகூட அவனிடம் வராது. புதிதாக அவனோடு பழகுபவர்கள் அவன் சீரியசாகவே கதைப்பதாக நினைத்துக் கொள்வார்கள். அவன் இருக்குமிடம் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். ஆனால் சுவர்ணன் சிரிப்பதில்லை. எல்லாவற்றையும் சீரியசாகவே கதைத்துக் கொண்டிருப்பான்.
யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக் காட்டுக்குள் வந்த புதிதில் சுவர்ணின் அணி பட்டபாடு சொல்லி மாளாது. மிகக்கடுமையான வேலைகள் எமக்கிருந்தன. கிணறு வெட்டுவது, காட்டுக்குள் பாதைகள் போடுவது, தளம் அமைப்பது, பதுங்கு குழிகள் வெட்டுவது என்று மிகமிகக் கடுமையான வேலைகள். அந்தநேரத்தில் சுவர்ணன் செய்யும் சேட்டைகள் சம்பந்தப்பட்டவர்களை விட மற்றவர்கள் வயிறு குலுங்கிச் சிரிக்குமளவுக்கு இருக்கும்.
ஒருகட்டத்தில் எமது கொம்பனி மறுசீரமைக்கப்பட்டது. அப்போது புதிதாக 50 கலிபர் ஆயுதத்துக்கான எட்டுப் பேர் கொண்ட அணியொன்று உருவாக்கப்பட்டது. அதில் சுவர்ணனும் ஒருவன். இவ்வளவுநாளும் சுவர்ணன் வேறு அணியிலிருந்ததால் அவனது குறும்புகளை ரசித்துக் கொண்டிருந்த எமக்கு இப்போது அனுபவிக்க வேண்டியிருந்தது. அதிலொன்றுதான் மேற்சொன்ன கற்றூணை நிறுத்தும் வேலையின்போது நடந்தது. இதுபோல் ஏராளம் சம்பவங்களுள்ளன. ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக ஏதாவது குறும்பு செய்துகொண்டிருப்பான். அவனது ‘மாஸ்டர்’ பம்பல் எத்தனை மாதமானாலும், எத்தனை தடவைகள் திரும்பத் திரும்ப நடந்தாலும் ஒவ்வொரு முறையும் மறக்க முடியாத நினைவாகவே பதிந்துவிடும்.
50 கலிபர் அணி தேர்வு செய்யப்பட்டு விட்டது என்றாலும் எமக்கான ஆயுதம் வழங்கப்படவில்லை. சும்மா ‘கலிபர் ரீம்’ என்ற பேரில் அலைந்துகொண்டிருந்தோம். உண்மையில் அது கனரக ஆயுதங்களுக்கான பிரிப்பாக இருக்கவில்லை, கனரக வேலைகளுக்கான அணிப்பிரிப்பாகவே அமைந்துவிட்டது. வேலைகள் பங்கிடப் படும்போது ஆகக்கடுமையாக வேலைகளே எமது 50 கலிபர் அணிக்கு வழங்கப்படும். அந்த வழியே வந்ததுதான் ரவர் பூட்டும் வேலையும். ‘உவங்கள் கலிபர் ஒண்டும் தரப்போறேல. உது சும்மா மடார் வேலை செய்யிறதுக்கு ஒரு ரீம் தேவையெண்டதுக்காக பிரிச்சதுதான்’ என்று எமக்குள் பம்பலாகப் பேசிக் கொள்வோம். இந்த ‘மடார்’ வேலைகளைச் செய்யும் அணியில் சுவர்ணன் இருப்பது எப்பேர்ப்பட்ட விளைவு? பின்னாளில் GPMG ஆயுதத்துக்கென ஓரணி பிரிக்கப்பட்டபோது அதிகம் மகிழ்ந்தது நாம்தான். எமது கொம்பனிக்கு நல்லதொரு கனரக ஆயுதம் கிடைக்கிறது என்பதற்காகவன்று, எமது சுமைகளைப் பங்கிட இன்னோர் அணி வந்த மகிழ்ச்சியே அது. எமது கலிபர் அணிக்கான கடின வேலைகள் அவர்களோடும் பங்கிடப்பட்டன.
சுவர்ணின் நகைச்சுவையுணர்வு அலாதியானது. எமது கொம்பனியிலிருந்த அணிகள் காட்டுக்குள்ளிருந்த தளத்திலேயே தனித்தனிக் கொட்டில்களில் தங்கியிருக்க, எமது 50 கலிபர் அணி சற்றுத்தள்ளி வெட்டைக்கு அண்மையாகத் தங்கியிருந்தது. அதிகதூரம் எம்மை நடக்கவைத்த கடுப்பு எமக்குள் இருந்தது. ‘கலிபரைத் தந்திட்டு வெட்டைக்குப் பக்கத்தில விட்டாலும் அதில விசயமிருக்கு. இது சும்மா பேருக்கு ஒரு ரீமை வைச்சுக்கொண்டு வெட்டைக்குப் பக்கத்தில இருங்கோ எண்டா என்ன நியாயம்?’ என்று சுவர்ணன் பேசிக்கொண்டிருப்பான்.
http://www.facebook.com/photo.php?pid=36771&op=1&view=all&subj=177878082065&aid=-1&auser=0&oid=177878082065&id=100000450670413FPRIVATE "TYPE=PICT;ALT=" http://www.facebook.com/photo.php?pid=36771&op=1&view=all&subj=177878082065&aid=-1&auser=0&oid=177878082065&id=100000450670413
அணியின் பெயரில் மட்டுமே கொண்டிருந்த கலிபர் ஒருநாள் இரவில் எமது கொட்டிலுக்கு வந்தது. அதற்கு முன்பு நாங்கள் 50 கலிபர் பார்த்திருக்கிறோம். அமைப்பில் இணையமுன்பும் பார்த்திருக்கிறோம், இணைந்தபின்னரும் பார்த்திருக்கிறோம். சிறப்புப் பயற்சி பெற்ற தளத்தில் 50 கலிபர் அணியொன்றும் பிறிம்பாகப் பயிற்சியெடுத்துக் கொண்டிருந்தது. அப்போது இன்னும் நெருக்கமாக அவ்வாயுதத்தை அறிந்திருக்கிறோம். தூக்கிப் பார்த்திருக்கிறோம். அதுவரை நாம் பார்த்ததெல்லாம் பெல்ஜியத் தயாரிப்பான 50 கலிபர் ஆயுதம். நல்ல உருப்படி. நல்ல நிறையும்கூட. அதைத் தூக்குவதற்கும் இயக்குவதற்கும் மிகுந்த உடற்பலமும் பயற்சியும் தேவை. ஆயுதத்தைப் பார்த்தாலே ஒரு பயமும் மதிப்பும் தோன்றும். அதை இயக்குபவர்களை வித்தியாசமாகப் பார்க்கத் தோன்றும்.
ஆனால் இப்போது எமக்குத் தரப்பட்டிருப்பது அப்படிப்பட்ட ஆயுதமில்லை. அதை 50 கலிபர் என்று சொன்னபோது சிரிப்புத்தான் முதலில் வந்தது. 50 கலிபர் ஆயுதத்துக்கென எமது மனதிலிருந்த விம்பம் இவ்வாயுதத்தோடு பொருந்தவில்லை. இது மிகவும் நிறைகுறைந்த, ஒல்லியான ஓர் ஆயுதம். சீனநாட்டுத் தயாரிப்பு. வந்தவர்கள் இறக்கிவைத்துவிட்டுப் போய்விட்டார்கள். நம்பமுடியாமல் குமுதன் குழல் விட்டத்தை அளந்தான். 12.7 mm வருகிறது, அப்போ சரிதான், இது 50 கலிபர் தான்.
முன்பு எம்மை ‘பிஸ்டல் காயாக’ எரிச்சல்படுத்திய, மகிழ்ச்சிப்படுத்திய சுவர்ணன் உண்மையிலேயே ஒரு கைத்துப்பாக்கியைத் தனது திறமைக்கான பரிசாகப் பெற்றுக்கொண்டான்.
மறுநாள் காலை ஆயுதத்தைத் தூக்கிக் கொண்டு எமது தளத்தின் ஒன்றுகூடலுக்குச் செல்ல வேண்டும். இதைக் கொண்டுபோனால் 50 கலிபர் என்று யாரும் நம்பப் போவதில்லை. நம்பினாலும் எமக்கான மதிப்பு இருக்கப்போவதில்லை. 'இதைவிட ஒரு PK LMG யே திறம் போல கிடக்கு' என்று யாராவது நக்கலடிக்கக் கூடும். இதுவரை கட்டியெழுப்பியிருந்த விம்பம் கலைந்துபோய்விடும். சுவர்ணன் ஒரு திட்டத்தைப் போட்டான். ஆயுதத்தைப் பாய்களால் சுற்றி, பிறகு படுக்கை விரிப்பால் சுற்றி கொஞ்சம் பெரிய உருப்படியாக்கினான் சுவர்ணன். அடுத்துவந்த ஒருகிழமைக்கு எமது கொம்பனிக்கு அப்படி உருப்பெருப்பிக்கப்பட்ட உருப்படியைத்தான் எமது 50 கலிபர் என்று காட்டிக் கொண்டிருந்தோம். எமது கொட்டில்பக்கம் யாரையும் வரவிடாமலும் பார்த்துக் கொண்டோம்.
மீட்கப்பட்ட முல்லைத்தீவில் 1997 தைமாதம் 50 கலிபர் பயிற்சிக்காகப் போயிருந்தோம். அங்கும் அவனது சேட்டைகள் தொடர்ந்தன. கடற்புலி அணியிலிருந்து பயிற்சிக்கு வந்திருந்த சிலர் இவனை உண்மையிலேயே ஒரு பயிற்சியாசிரியர் என்று நினைக்க வைத்துவிட்டான். பயிற்சியின் இறுதிக்கட்டத்தில் தொடர்சூட்டுப் பயிற்சிக்கான நாள். பத்து ரவைகளைத் தந்து பனையில் கட்டப்பட்டிருக்கும் பட்டத்துக்குச் சுடச் சொன்னார்கள். ஒரு விசையழுத்தத்தில் எவ்வளவு குறைவான ரவைகளைச் செலுத்துகிறோமோ அவ்வளவுக்கு எம்மால் அதிக மதிப்பெண்கள் பெறமுடியும். ஒரு விசையழுத்தத்தில் அதிகபட்சம் மூன்று ரவைகளுக்கு மேல் சுடாமலிருப்பதே நல்ல பெறுபேற்றைப் பெற உதவும். அதேநேரம் மொத்தச் சூட்டு நேரமும் கவனிக்கப்படும். பத்து வினாடிகளுக்குள் பத்து ரவைகளையும் சுட்டிருக்க வேண்டும். நாங்களெல்லோரும் மூன்று அல்லது நான்கு விசையழுத்தங்களில் பத்து ரவைகளைச் சுட்டோம். ஓரளவு நல்ல பெறுபேறுதான். சுவர்ணனின் முறை வந்தது. ஒரே விசையழுத்தல்தான். பத்தும் பறந்து போனது. முக்காலியின் முன்கால் அப்படியே எழுந்து அந்தரத்தில் நின்றது. அந்த நிலையிலேயே எங்களைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தான். 'எருமை!! எல்லாத்தையும் காத்தில பறக்கவிட்டிட்டு பெரிய றம்போ மாதிரி போஸ் குடுக்கிறான் பார்'.ரகுவண்ணா சொன்னார்.
சூட்டுப்பயிற்சிக்குப் பொறுப்பான பயிற்சியாசிரியர் முகத்தில் கடுப்பு. ஆனால் சுவர்ணனைப் பொறுத்தவரை எல்லாம் நல்லபடியாகவே நடந்தது போல் நடந்துகொண்டான்.சுட்டுவிட்டு நேரே ஆசிரியரிடம் போன சுவர்ணன், நிறுத்தற் கடிகாரத்தைப் பார்த்தபோது அது இரண்டு வினாடிகள் சொச்சத்தைக் காட்டியது.
‘உது பிழை மாஸ்டர், பத்து ரெளண்ட்சும் ஒரேயடியா அடிக்க ஒரு செக்கனுக்கும் குறைவாத்தான் பிடிக்கும். நீங்கள் சரியான நேரத்தில அமத்தேல’ என்றான். வாத்தியாரின் முகத்தைப் பார்க்க வேண்டும்.
பயிற்சி முழுவதும் முடிந்து முல்லைத்தீவிலிருந்து எமது தளத்துக்குத் திரும்பியிருந்தோம். அப்போது புதிதாக வேறு படையணியிலிருந்து நூறுபேர் வரை எமது தளத்துக்கு வந்திருந்தார்கள். வேறோர் அலுவலாக சுவர்ணன் தவிர்த்து நாங்கள் சிலர் வெளியே ஒருகிழமை சென்றுவிட்டுத் தளம் திரும்பியபோது புதிதாக வந்த கொம்பனி ‘சுவர்ணன் மாஸ்டர்’ என்று அவனைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தது. இவ்வளவுநாளும் அவன் பட்ட கஸ்டங்கள் வீண்போகாமல் தனது இலக்கை அடைந்திருந்தான் சுவர்ணன். நாங்கள் தலையிலடித்துக் கொண்டோம்.
இப்போது அவன் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருந்தான். தான் ஒரு ‘பிஸ்டல் காய்’ என்று சொல்லவும் அதை நடைமுறைப்படுத்தவும் தொடங்கியிருந்தான். இந்தக் கொடுமைகளைச் சகித்துக் கொண்டு நாங்களும் பயணித்தோம். இயக்கத்தில் பிஸ்டல் என்பது தகுதியை நிர்ணயிக்கும் ஓர் ஆயுதமாக அப்போது இருந்தது. ‘பிஸ்டல் காய்’ என்றால் அவர் பெரிய தளபதி என்பது கருத்து. சுவர்ணன் தன்னை பிஸ்டல் காயாக பாவனை பண்ணத் தொடங்கியிருந்தான். இந்தப் புதுக்கொடுமை தொடங்கியதால் ‘மாஸ்டர்’ கொடுமையிலிருந்து நாங்கள் தப்பித்திருந்தோம்.
கணேஸ் தான் அதிகம் மாட்டுப்படுபவன். கணேஸ் தன்னுடைய மெய்க்காப்பாளன் என்று சொல்லிக்கொள்வான். ‘கணேஸ்! அண்ணனின்ர பிஸ்டலை ஒருக்கா எடுத்தா’ என்று கட்டளைகள் வரும். அந்தநேரத்தில் கையில் கிடைக்கும் கட்டைகளைத் தூக்கி எறிந்து ‘இந்தா உன்ர பிஸ்டல்’ என்று கணேஸ் பதிலளிக்கத் தொடங்கியபிறகு சுவர்ணன் தனது மெய்க்காப்பாளனை மாற்றிவிட்டான்.
முகத்தில் சின்னச் சிரிப்புக்கூட இல்லாமல் அவன் அடிக்கும் லூட்டிகள் அளவு கணக்கற்றவை. மிகமிக அவசரமாக அணியை வரச்சொல்லி அழைப்பு வந்திருக்கும். எல்லோரும் ஆயத்தமாகி வரிசையாக நிற்கும்போது சுவர்ணன் மட்டும் அங்கிங்கென்று ஏதோ தேடிக்கொண்டிருப்பான்.
‘டேய் சுவர்ணன்! என்ன கோதாரியத் தேடுறாய்?’
‘என்ர பிஸ்டலைக் காணேல. நீயே எடுத்தனீ?’
அணி முழுவதிடமும் உதைவாங்கித்தான் அன்று வெளிக்கிடுவான்.
எதிர்பாராத சந்தர்ப்பமொன்றில் கொம்பனிப் பொறுப்பாளர் சுவர்ணனை அணித் தலைவராக்கிவிட்டார். நாங்கள் ஆனந்தக் கூத்தாடினோம். அப்பாடா! இனி உவனின்ர தொல்லைகள் இருக்காது என்று பெருமூச்சு விட்டோம். ஆனால் இரண்டு நாட்களின் மேல் அது நீடிக்கவில்லை. அவன் அடித்த பிஸ்டல் குழறுபடியில் மீண்டும் பழையபடி கலிபர் சூட்டாளனாகவே நியமிக்கப்பட்டான்.
இப்படியெல்லாம் பிஸ்டலை வைத்துக் கனவு விளையாட்டுக்களை நடத்தி எங்களை எரிச்சல்படுத்தியும் மகிழ்வித்தும் வைத்திருந்த சுவர்ணன் நிசமாகவே ‘பிஸ்டல் காய்’ ஆனான். அதுவும் தேசியத் தலைவரிடமிருந்து கைத்துப்பாக்கியைப் பரிசாகப் பெற்றுக் கொண்டான்.
ஒன்றாக இருந்த நாம் காலவோட்டத்தில் பிரிந்து பணிகள் மேற்கொண்ட போது சுவர்ணன், லெப்.கேணல் ராதா வான்காப்பு அணியில் கடமையாற்றினான். 2002 இல் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் யுத்தநிறுத்த ஒப்பந்தம் ஏற்படும்வரைக்கும் லெப்.கேணல் ராதா வான்காப்பு அணி இம்ரான் பாண்டியன் படையணியின் ஓரங்கமாகச் செயற்பட்டு வந்தது.
இப்போது உமையாள்புரத்தில் ஆயத்தப்படுத்தப்பட்ட சண்டைக்கு வருவோம். ஆனையிறவைச் சூழவுள்ள பகுதிகளின் தாக்குதல் நடத்தப்படும்போது கடுமையான காயங்களுக்கு உள்ளாகும் படையினரை பலாலி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல சிறிலங்கா வான்படையின் பெல் ரக உலங்கு வானூர்தியே பயன்படுத்தப்பட்டு வந்தது.. வரும்வழியிலோ அல்லது திரும்பிச் செல்லும்போதோ அவ்வானூர்தியைத் தாக்கியழிக்கும் விதமாக ஒரு திட்டம் தீட்டப்பட்டது. இதற்காக, விமான எதிர்ப்பு ஏவுகணையைச் சுமந்தபடி ஓர் அணி தென்மராட்சிப் பகுதிக்குள் ஊடுருவி நிலையெடுத்திருந்தது. அந்த அணியின் தலைவனாகவும் ஏவுகணையை இயக்குபவனாகவும் சுவர்ணன் இருந்தான். வானூர்தியின் பாதையொழுக்கு ஏற்கனவே வேவு பார்க்கப்பட்டிருந்தது. சுவர்ணனுக்கான இலக்கை வரவைப்பதற்காகவே இம்ரான் பாண்டியன் படையணியின் ஓரணி மேஜர் சங்கரின் தலைமையில் களத்தில் இறங்குகிறது. ஆனால் அத்தாக்குதலின் பின்னாலுள்ள உண்மைக்காரணம் சிலரைத் தவிர வேறெவருக்கும் தெரியாது.
உமையாள்புர இராணுவத் தளம் மீதான தாக்குதலுக்கான திட்டம் மட்டுப்படுத்தப்பட்ட அளவைக் கொண்டது. இராணுவத்தரப்பில் கடுமையான காயக்காரரை உண்டாக்குவதன் ஊடாக குறிப்பிட்ட உலங்கு வானூர்தியை வரவைப்பதே முதன்மை நோக்கம்.
திட்டத்தின்படி தாக்குதல் நடத்தப்பட்டு எதிரிக்குச் சேதம் ஏற்படுத்தப்பட்டது. திட்டமிட்டபடியே காயக்காரரை ஏற்ற உலங்குவானூர்தி வந்தது. வரும்போது தாக்குதல் நடத்தப்படவில்லை. திட்டம் தெரிந்தவர்களுக்கு பதட்டம். ஏவுகணையோடு நிலையெடுத்திருக்கும் சுவர்ணனின் வீச்செல்லையைத் தாண்டி வானூர்தி பயணித்தாலேயே திட்டத்தில் பிசகு ஏற்பட வாய்ப்புண்டு. அல்லது எதிரியின் பகுதிக்குள் நிலையெடுத்திருக்கும் அணியை எதிரியணிகள் கண்டு தாக்குதல் நடத்தினாலும் பிசக வாய்ப்புண்டு. சுவர்ணனுடன் சீரான தொடர்பு இருந்தது. எல்லாம் சரியாக நடக்குமென்று தகவல் தந்துகொண்டிருந்தான்.
காயக்காரரை ஏற்றிக்கொண்டு பலாலி திரும்பிக் கொண்டிருந்த உலங்கு வானூர்தி எதிர்ப்பார்த்தபடியே சுவர்ணனின் எல்லைக்குள் வந்தது. அன்று அந்த இலக்கு சுவர்ணனால் அழிக்கப்பட்டது.
அவ்வெற்றிகரத் தாக்குதலை நடத்தியதற்குப் பரிசாக கைத்துப்பாக்கியொன்று தேசியத் தலைவரால் சுவர்ணனுக்குப் பரிசளிக்கப்பட்டது.
முன்பு எம்மை ‘பிஸ்டல் காயாக’ எரிச்சல்படுத்திய, மகிழ்ச்சிப்படுத்திய சுவர்ணன் உண்மையிலேயே ஒரு கைத்துப்பாக்கியைத் தனது திறமைக்கான பரிசாகப் பெற்றுக்கொண்டான்.
ஈழவிடுதலைக்கான போராட்டப்பயணித்தில் தொடர்ந்து லெப்.கேணல் ராதா வான்காப்பு அணியில் பணியாற்றிய மேஜர் சுவர்ணன் பின்வந்த ஒருநாளில் தாயக விடுதலைக்காக தனது மூச்சை நிறுத்திக் கொண்டான்.
மேஜர் சுவர்ணனுக்கும் அவனைப் போல் ஈழவிடுதலைக்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களுக்கும் எமது வீரவணக்கம்..!!!
அன்பரசன்

வெற்றிப் பாய்ச்சலில் தவளைப் பாய்ச்சல் நடவடிக்கை !

பூநகரி என்ற இடத்தின் பெயர் பிரபலமானது. அங்கு விளையும் மொட்டைக்கறுப்பன் அரிசியைப் போலவே. பூநகரி கூட்டுப்படைத் தளத்தின் மீது புலிப்படை நடத்திய மிகப்பெரும் பாய்ச்சலொன்றின் பதினாறாம் ஆண்டு நினைவுநாள் இன்று.

பூநகரியில் சிங்களப்படைகளிருந்தபோது அப்படைமுகாம் தமிழர் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் யாழ்ப்பாணம் முற்றாக முற்றுகைக்குள்ளாகியிருந்த காலத்தில் குடாநாட்டை இறுக்கியிருந்த படைத்தளங்கள் இரண்டு.ஆனையிறவு ஒரே தரைவழிப்பாதையை இறுக்கியிருந்தது. கடல்வழியான மாற்றுப்பாதையும் இறுக்கி யாழ்.குடா மக்களை இக்கட்டிலாழ்த்தியது பூநகரிப்படைத்தளம்.
அப்போது யாழ்.குடாநாட்டு மக்களுக்கான ஒரேயொரு போக்குவரத்துப் பாதையாக கிளாலி - நல்லூர் பாதையே இருந்தது. யாழ்ப்பாணத்தின் கிளாலிக் கடற்கரையிலிருந்து மன்னார் மாவட்டத்தின் நல்லூர் அல்லது ஆலங்கேணிக் கடற்கரைக்கு இரவில் படகிற் பயணம் செய்ய வேண்டும். அப்பாதை இரு பெரும் இராணுவ முகாம்களுக்க நடுவால் வருகிறது. ஒருபுறம் ஆனையிறவுஇ மறுபுறம் பூநகரி.
இரவில் பல படகுகள் பயணிக்கும். தொடக்கத்தில் வஞ்சகமில்லாமல் நிறையப்பேர் அக்கடலிற் கொன்றுகுவிக்கப்பட்டனர். வெட்டுக்காயங்களோடுகூட தமிழரின் சடலங்கள் கரையொதுங்கின. ஆயினும் பயணம் தொடர்ந்தது. கடலில் இறங்கிவிட்டால் அக்கரை போய்ச்சேர்வோம் என்ற நம்பிக்கை யாருக்கும் இருப்பதில்லை. ஆனாலும் யாழ்.குடாநாட்டுக்கான ஒரேயொரு பாதை அதுதான்.
பூநகரியில் சிங்களப்படையின் மிகப்பெரிய கூட்டுப்படைத்தளம் இருந்தது. நாகதேவன்துறையை மையகமாகவைத்து ஒரு கடற்படைத்தளமும் மிகப்பெரிய இராணுவ முகாமும் இருந்தது. கிளாலிக் கடல்நீரேரியில் நடந்த அத்தனை படுகொலைகளுக்கும் நாகதேவன்துறைக் கடற்படைத்தளமே காரணம்.

இப்பெரிய கூட்டுப்படைத்தளம் மீது புலிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனர். அதற்கான வேவு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. ("உறங்காத கண்மணிகள்" என்ற தமிழீழ முழுநீளத் திரைப்படம்இ இப்பூநகரிப் படைத்தளத்துள் வேவு பார்த்த வீரர்களையும்இ அங்கு நடந்த உண்மைச் சம்பவங்களையும் தழுவி எடுக்கப்பட்டது)
யாழ். தென்மராட்சியில் இப்படைத் தளம் மீதான தாக்குதலுக்கு புலியணிகள் பயிற்சியிலீடுபட்டுக்கொண்டிருந்தன. அந்நேரம்தான் யாழ்ப்பாணம் நோக்கி ஆனையிறவுப் படைத்தளத்திலிருந்து 'யாழ்தேவி' என்ற படைநடவடிக்கை சிங்கள அரசால் தொடங்கப்பட்டது. பூநகரிப்படைத்தளம் மீதான தாக்குதலுக்குத் தயாராகிக்கொண்டிருந்த புலியணிகளைக் கொண்டு அவசரஅவசரமாக அந்நடவடிக்கையை முறியடித்தனர் புலிகள்.
நீண்ட தயார்ப்படுத்தலின்பின் அந்நாளும் வந்தது. நவம்பர் மாதம் பத்தாம் நாள் இரவு புலியணிகள் அத்தளம் மீது தாக்குதல் தொடுத்தன. கடல்வழியாலும் தரைவழியாலும் அக்கூட்டுப்படைத்தளம் மீது அகோரத் தாக்குதல் நடத்தப்பட்டது. விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் வளர்ச்சியில் முக்கியமான சமர் அது. பெரும் சமரொன்றுக்கான விநியோகம்இ பாதுகாப்பு என்பவற்றை முதன்முதல் கடற்புலிகள் வழங்கினர்.
நீர் வழியாலும் நில வழியாலும் தொடுக்கப்பட்ட சமர் என்பதாலேயே இந்நடவடிக்கைக்கு 'தவளைப் பாய்ச்சல்' என்று பெயர் சூட்டப்பட்டது.
மூன்றுநாட் சமரின் பின் புலியணிகள் பின்வாங்கின. ஏராளமான ஆயுத தளபாடங்களைக் கைப்பற்றியிருந்தனர். குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய சம்பவம்இ முதன் முதலில் போர் டாங்கியொன்றை அரசபடையினரிடமிருந்து புலிகள் கைப்பற்றினர். இன்னொன்றை இயங்குநிலைத் தடையொன்றை அகற்றத் தெரியாததால் டோபிட்டோ வைத்துத் தகர்த்தழித்தனர். அன்று கைப்பற்றப்பட்ட அந்த ஒரேயொரு டாங்கி பல முக்கிய வெற்றிகளை ஈட்டித்தந்தது.

நாகதேவன் துறையிலிருந்து ஐந்து 'நீருந்து விசைப்படகு'களைக் கைப்பற்றினர் கடற்புலிகள். அவையும் போராட்டத்தில் மிகப்பெரிய பங்கை ஆற்றியிருந்தன.
அத்தாக்குதலில்தான் விடுதலைப்புலிகளின் பெண்புலிகளின் முதலாவது 'லெப்.கேணல்' தரத் தளபதி வீரச்சாவடைந்தார்.
லெப்.கேணல் பாமா/கோதை என்ற கடற்புலிகளின் பெண்களணியின் தளபதி இந்நடவடிக்கையில் வீரச்சாவடைந்தார்.
இச்சமரில் புலிகள் தரப்பில் லெப்.கேணல் நவநீதன்இ லெப்.கேணல் குணாஇ லெப்.கேணல் அன்புஇ லெப்.கேணல் அருணன்/சூட்டி எனும் முக்கிய தளபதிகள் உட்பட 469 போராளிகள் வீரச்சாவடைந்தனர்.
பூநகரி கூட்டுப்படைத்தளத்தின் மீதான தாக்குதலுக்கு வலுச்சேர்க்கும் வகையில் சமநேரத்தில் பலாலி விமானப்படைத்தளம் மீதும் கரும்புலித்தாக்குல் ஒன்று நடத்தப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி வெற்றியாக அத்தாக்குதல் அமையவில்லை. இத்தாக்குதலில் 13 கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்.
பூநகரியில் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யும் விதமாக யாழ்ப்பாணம் யாகப்பர் தேவாலயத்தின் மீது சிங்கள வான்படை குண்டுகளை வீசி அத்தேவாலயத்தைத் தரைமட்டமாக்கியது. ஆலயம் முற்றாக நாசமானதோடு அத்தாக்குதலில் பத்துப் பொதுமக்கள் பலியாகினர்.
அதன்பின்னும் பூநரிப்படைத்தளம் சிங்களப்படையினரிடமே இருந்தது. ஆனால் கிளாலிக் கடலில் கடற்படையினரின் தாக்குதல் அச்சமின்றி பொதுமக்களின் பயணம் தொடர்ந்தது. கடற்புலிகளின் பாதுகாப்போடு பகலிற்கூட பயணங்கள் தொடர்ந்தன.
யாழ். குடாநாட்டை படையினர் முழுதாகக் கைப்பற்றியபோது ஆயிரக்கணக்கான மக்கள் அப்பாதையூடாகவே வன்னிக்கு வந்தார்கள். அதன்பின்னும் பூநகரி படையினரிடம்தான் இருந்தது. முல்லைத்தீவு முகாம் புலிகளால் வெற்றிகொள்ளப்பட்டபோது கிளிநொச்சி நகரை ஆக்கிரமித்துக்கொண்டது அரசபடை. அந்நேரத்தில் சத்தம்போடாமல் அரசபடை ஒரு காரியத்தைச் செய்தது.
1996 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் பூநகரிப் படைத்தளத்தில் இருந்து முற்றுமுழுதாகப் பின்வாங்கி யாழ்ப்பாணத்துக்குச் சென்றுவிட்டது இராணுவம்.சிறுசண்டைகூட இல்லாமல் பூநரிப்படைத்தளம் புலிகள் வசமானது.
பின்னர் இது ஒரு பெரிய வெற்றி விழாவாகக் கொண்டாடப்பட்டது. அதற்கென ஒரு முத்திரை பொறிக்கப்பட்ட சின்னமும் வழங்கப்பட்டது. ஒரு கண்காட்சி நாவற்குளிப்பகுதியில் நடைபெற்றது. அங்கே அத்தளம் போன்றே நீருக்கு மத்தியில் வடிவமைக்கப்பட்ட ஒரு இடத்தில் ஆயுதங்களும் டம்மி பொம்மைகளும் வைக்கப்பட்டிருந்தன.

Friday, April 24, 2009

தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து ...





நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சியங்களாகவே எமக்கு காட்சி தருகின்றன.



நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லை, துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்.



சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும்.



மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம், அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.



விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் ஒரு ரணகளம்



பயிற்சி - தந்திரம் - துணிவு இந்த மூன்றும் ஒரு படையணிக்கு அமையப் பெறுமாயின் வெற்றி நிச்சயம்.



சுதந்திரம் இல்லாமல் மனித வாழ்வில் அர்த்தமே இல்லை.



நாம் துணிந்து போராடுவோம், சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது, வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது.



கேணல் கிட்டு ஒரு தனிமனித சரித்திரம், ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு



இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது.



மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு, அவர்களது கஸ்டங்களைப் போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.



விழிப்புத்தான் விடுதலைக்கு முதல் படி.



விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியற்ப் பாதை.



இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப - வரலாற்று ஓட்டத்திற்கு அமைய கலை இலக்கிய கர்த்தாக்கள் புதுமையான, புரச்சிகரமான படைப்புக்களை உருவாக்க வேண்டும்.



எமது மொழியும், கலையும், பண்பாடும் எமது நீண்ட வரலாற்றின் விழுதுகளாக எமது மண்ணில் ஆழமாக வேரூன்றி நிற்பவை. எமது தேசிய வாழ்விற்கு ஆதாரமாய் நிற்பவை.



எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது.



மனித ஆன்மாவின் ஆழமான அபிலாசையாகவே மனிதனிடம் சுதந்திர தாகம் பிறக்கின்றது.



சிங்களப் பேரினவாதமானது தமிழினத்தின் தேசிய அன்மாவில் விழுத்திய ஆழமான வடுக்கள் ஒருபோதும் மாறப்போதில்லை.



மலைபோல மக்கள் சக்தி எமக்கு பின்னால் இருக்கும் வரை, எந்தப் புதிய சவாலையும் நாம் சந்திக்கத் தயார்.



மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்.



எமது மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அதனின்றும் மக்களை விடுவித்து எமது மக்களின் சுதந்திரத்தையும், பாதுகாப்பiயும் நிலைநாட்டும் வரை, நாம் ஆயுதம் ஏந்திப் போராடுவதைக் கைவிடமாட்டோம்.



இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி.



உழைப்பவனே பொருளுலைகைப் படைக்கின்றான். மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தின்றான்.



நாம் தமிழீழப் பெண் சமூகத்தின் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது.



சான்றோரைப் போற்றுவதும், கற்றோரைக் கௌரவிப்பதும் தமிழர்களாகிய எமது மரபு, எமது சீரிய பண்பாடு.



எமது சொந்தப் பலத்தில் நாம் வேரூன்றி நிலையாக நிற்பதால், மற்றவர்களின் அழுத்தங்களுக்குப் பணிந்து கொடாமல் தலை நிமிர்ந்து நிற்கமுடிகின்றது.



அனைத்துத் தமிழ் மக்களும் ஒரே இனம் என்ற தேசாபிமான உணர்வுடன் போராட்டத்தில் பங்கு கொண்டால் எமது விடுதலை இலட்சியம் வெற்றி பெறுவது நிச்சயம்



மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல, எனது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது.



ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன், ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்.



கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புக் கவசங்கள் - எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள் - எதிரியின் படைபலத்தை மனப் பலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்.



எமது மக்கள் சுதந்திரமாகவும், கௌரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழவேண்டும். இந்த இலட்சியம் நிறைவேறவேண்டுமாயின் நாம் போராடியே ஆகவேண்டும்.



நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது.



எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீ சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.



ஒரு விடுதலை வீரனின் சாவு, ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு, ஓர் உன்னத இலட்சியம் உயிர்பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை, அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை.



தமிழீழ மண்ணில் ஆயுதப்புரட்சி இயக்கத்திற்கு அத்திவாரமிட்டவர்கள் நாம். தமிழனின் வீர மரபைச் சித்தரிக்கும் சின்னமாக உதித்த எமது இயக்கம், வீரவரலாறு படைக்கும் புரட்சிகர விடுதலைச் சக்தியாக விரிவடைந்து வளர்ந்திருக்கின்றது.



ஒடுக்கப்படும் மக்களே ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட வேண்டும், அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அநீதியை ஒழித்துத்துக் கட்ட முன்வர வேண்டும்.



எந்த ஒரு விடுதலை இயக்கமும் தனியாக நின்று, மக்களுக்குப் புறம்பாக நின்று, விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. அது நடைமுறைச் சாத்தியமான காரியமுமல்ல.



குட்டக் குட்டத் தலைகுனிந்து அடிமைகளாக, அவமானத்துடன் வாழ்ந்த தமிழரைத் தலை நிமிர்த்தி தன்மாத்துடன் வாழ வைத்த பெருமை எமது விடுதலை இயக்கத்தையே சாரும்.



தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும், கௌரவத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் தமது இன்னுரை அர்பணித்துள்ள மாவீர்களான தியாகிகள், காலம் காலமாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.



எதிரியால் ஆக்கிமிக்கபட்டிருக்கும் எமது மண்ணை முதலில் மீட்டெடுப்பது இன்றைய வரலாற்றின் தேவை. இந்த வரலற்று நிர்ப்பந்தத்தை நாம் அசட்டை செய்ய முடியாது.



தங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு தேசியப் படையுடன் இணைந்து சுதந்திரத் தமிழீழத்தை நிறுவினாலெழிய, ஒரு போதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.



விடுதலைப் போராட்டத்தில் மக்கள் வெறும் பார்வையாளராக இராது, நேரடிப் பங்காளிகளாக மாறவேண்டும்.



இது கரும்புலிகள் சகாப்தம், இடியும் மின்னலுமாகப் புலிகள் போர்க் கோலம் பூண்டு விட்ட காலம்

வான்புலிகள்






வான்புலிகள் (Tamileelam Air Force - TAF) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வான்படைப் பிரிவாகும். இப்பிரிவு ஆங்கிலத்தில் Air Tigers, Flying Tigers, Sky Tigers என்று பலவாறு குறிக்கப்படுவதுண்டு.


வான்புலிகள் மார்ச் 26, 2007 அன்று கொழும்பில் உள்ள கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது தாக்குதலை நடத்தியதன் மூலம் வெளியுலகுக்கு தங்கள் இருப்பை உறுதி செய்தனர். இவர்கள் இளநீல வரிப்புலி சீருடையும், 'வானோடி' என்ற வாசகம் குறிக்கப்பட்ட சின்னத்தையும் அணிந்திருப்பர்.


வான்புலிகள் வரலாறு 85, 86 காலப் பகுதிகளிலேயே புலிகள் விமானங்களை கட்டுதல் தொடர்பாக கவனம் எடுக்க தொடங்கி விட்டார்கள்

செப்டம்பர் 27, 1998 - 1998ம் ஆண்டு மாவீரர்தின உரையின்போது விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வான்புலிப் படைப்பிரிவு தொடர்பான முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அந்நிகழ்வின்போது வான்புலிகளுக்கு சொந்தமான வான்கலத்திலிருந்து பூக்கள் தூவப்பட்டதாக நேரில் பார்த்தவர்களுடைய அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2000 - 'வான்புலிகள் ஆண்டு' என தமிழீழ விடுதலைப் புலிகளால் அறிவிக்கப்பட்டது

கேணல் சங்கர் என்று அழைக்கப்பட்ட வித்தியாலிங்கம் சொர்னலிங்கம் தலைமையில் வான்புலிகள் பிரிவு தொடங்கப்பட்டது. டிசம்பர் 2001 அவர் கொல்லப்படும் வரை வான்புலிகள் பிரிவின் தலைவராக செயற்பட்டார்.

ஜனவரி 26, 2005 - இரணைமடு விமான ஓடுதளம் பற்றிய இலங்கை இராணுவ அறிக்கை


ஆகஸ்டு 11, 2006 - யாழ்ப்பாணத்திலுள்ள பலாலி வான்படைத்தளம் (இலங்கை இராணுவத்தினருக்கு சொந்தமானது) வான்புலிகளால் வான்கலங்களை பயன்படுத்தித் தாக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற ஊகங்களை உருவாக்கும்படியான செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

மார்ச் 26, 2007 - அதிகாரப்பூர்வமாக விடுதலைப்புலிகளால் உரிமை ஏற்கப்பட்ட முதலாவது வான் புலித் தாக்குதல் 26ம் திகதி மார்ச் 2007 இல் இலங்கை கட்டுநாயகா விமானப்படைத்தளத்தின் மீது நடத்தப்பட்டது.


ஏப்ரல் 24, 2007: பலாலி இராணுவத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள்வெற்றிகரமான தாக்குதலை நடத்தின


ஏப்ரல் 29, 2007: வான்புலிகளின் இரண்டு வான்கலங்கள் கொழும்புக்கு வடக்கே 3மைல் தொலைவில் உள்ள கொலன்னாவை எண்ணெய் குதங்களையும் 10 மைல் தொலைவில் உள்ள கெரவலப்பிட்டி எண்ணெய் குதங்களையும் குண்டு வீசி தாக்கின

ஏப்ரல் 29, 2007: வான்புலிகளின் இரண்டு வான்கலங்கள் கொழும்புக்கு வடக்கே 3மைல் தொலைவில் உள்ள கொலன்னாவை எண்ணெய் குதங்களையும் 10 மைல் தொலைவில் உள்ள கெரவலப்பிட்டி எண்ணெய் குதங்களையும் குண்டு வீசி தாக்கின

அக்டோபர் 22, 2007 - எல்லாளன் நடவடிக்கை 2007: அநுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது அதிகாலை வான், மற்றும் தரை என நடத்திய இரு முனைத் தாக்குதலில் 8 வானூர்திகள் அழிக்கப்பட்டு 13 படையினர் கொல்லப்பட்டனர்

வான்புலிகள் நடத்திய தாக்குதல், வெளியிடப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவை அடிப்படையில் புலிகளிடம் 2-5 இலகுதர வான்கலங்கள் உண்டு எனக்கருதப்படுகிறது.

இவை செக் நாட்டு இசட்-143 வகை விமானங்களாக இருக்கலாம் என்று இலங்கை அரசு கருதுகின்றது. இவைதவிர வான்புலிகளிடம் தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடிய பிற வான்கலங்களும், உலங்குவானூர்திகளும் இருக்கலாம்.

முதல் தாக்குதலில் வான்கலங்களேடு பொருத்தப்பட்ட சில இணைப்புப் பாகங்கள், விமான ஓட்டிகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் இலத்திரனிய குண்டு விடுவி மற்றும் குண்டுகள் ஆகியவை உள்ளூர் தயாரிப்புக்கள்.

இவை விமானங்கள் பற்றிய தொழில்நுட்ப வளம் புலிகளிடம் இருப்பதைக் காட்டுகின்றது. கட்டுநாயக்கா விமான நிலையத்தின் மீது வீசப்பட்ட 4 குண்டுகளில் 1 வெடிக்கவில்லை வெடிக்காத ஒன்றை ஆராய்ந்த இலங்கை அரச தரப்பினர் இவற்றில் பல நூற்றுக்கணக்கான உருக்கு உருளைகள் கொண்ட உள்ளூர்த் தயாரிப்பென சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் இராணுவப் புலனாய்வு ஆசிரியர் இக்பால் அத்காஸ் தெரிவித்தார்.

வான்கலத்தை இரவில் ஓட்டிச் சென்று ஓர் இலக்கை அழிக்கும் திறன் இலகுவில் பெறக்கூடிய செயற்திறன் இல்லை. மாறாக, நீண்ட கால படிப்பறிவும், பட்டறிவும் தேவை. வான்புலிகளின் இத்திறன் கட்டுனாயக்க விமானத் தளத் தாக்குதலுக்கு அடுத்து நிரூபிக்கப்பட்டிருக்கிறது

தொடக்கத்தில், வான்புலிகள் யப்பானிய கமிகாச en:Kamikaze போன்று தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தலாம் என்று இராணுவ ஆய்வாளர்களால் தெரிவிக்கப்பட்டது. எனினும் தமது முதல் தாக்குதலில் இரவில் சென்று ஒரு இலக்கை தாக்கி மீண்டதன் மூலம் இவர்களின் தாக்குதல் திறனும் முறையும் தற்கொலைத் தாக்குதல்களாக மட்டுமே அமையும் என்ற கருத்தை பொய்ப்பித்துள்ளது.
விமானம் வாங்குவதில் இருக்கும் செலவு, விமான ஓட்டிகளாக பயிற்சி பெறுவதில் இருக்கும் சிரமம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தற்கொலைத் தாக்குதல்கள் கடைசி கட்ட நடவடிக்கைகளாகவே இடம்பெறலாம் என்று தற்போது கருத்துக்கள் மீளாய்வு செய்யப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் பிளிற்ஸ்கிறீக் en:Blitzkrieg முறையான தாக்குதல் நடவடிக்கைகளிலும் வான்புலிகள் ஈடுபடலாம் என்று கருதப்படுகின்றது.

விமானவியல் தொழில்நுட்பமும் விமான ஓட்டுனர் பயிற்சியும்

வான்புலிகளின் தோற்றத்துக்கு தலைமை ஏற்றவராக கருதப்படும் கேணல் சங்கர் "சென்னையில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில், ஏரோநாட்டிக்ஸ் பிரிவில் பி.இ. படித்தார். அதன் பின்னர் கனடா சென்ற அவர், அங்கு ஏர் கனடா விமான நிறுவனத்தில் பொறியியல் பிரிவில் பணியாற்றியுள்ளார்."

வான்புலிகள் பிரான்சிலும் ஐக்கிய இராச்சியத்திலும் ஓட்டுனர் பயிற்சியைப் பெற்றிருக்கலாம் என்று பிரபல இராணுவ ஆய்வாளர் இக்பால் அதாஸ் "Intelligence sources" முன்வைத்து கருத்து தெரிவித்திருக்கின்றார்.

இந்த தொழில் நுட்பத்தை மலேசியாவில் இலங்கைத் தமிழ் பின்புலத்தைக் கொண்டவரால் இயக்கப்படும் ஒரு விமான பராமரிப்புப் பயிற்சி கல்லூரியிலும் விடுதலைப் புலிகள் பெற்றிருக்கலாம் என கருத்துப்பட The Island பத்திரிகையும் Asia Tribune தகவல்கள் வெளியிட்டுள்ளன

இரணைமடு பகுதியில் பெரிய விமானங்களும் வந்து இறங்கக் கூடிய அளவு ஓடுதளம் ஒன்று இருப்பதை செய்மதிப் படங்கள் மூலம் உறுதி செய்யக்கூடியதாக உள்ளது. இந்த விடயம் 2005 ஆண்டளவில் தெரியவந்தது. சிறிய ஓடுதளம் முல்லைத்தீவின் வேறு பகுதிகளிலும் இருக்கலாம்

கடற்புலிகள்





கடற்புலிகள் (Sea Tigers) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்படைப் பிரிவாகும். இந்தப் பிரிவுக்கு (கேணல். சூசை) தலைமை தாங்குகின்றார். கடற்புலிகள் இலங்கைக் கடற்படைக்கு எதிராக பல வெற்றிகரமான தாக்குதல்களை நிகழ்த்தி ஈழப் போரில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றார்கள்.


ஈழப்போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே கடற்போக்குவரத்து முக்கியமாக இருந்த வந்தது

1984 ஆம் ஆண்டு கடற்புலிகள் அமைப்பு அமைக்கப்பட்டது.
1990 களில் தாக்குதல் அணியாக வடிவம் பெற்றது.



மே 24, 2007 - இலங்கை கடற்படையின் நெடுந்தீவு முகாம் ஒன்று தாக்கியழிக்கப்பட்டது. இத்தாக்குதலில் 36 இலங்கைக் கடற்படையினரும் 4 கடற்புலிகளும் பலியானதாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்

பல கடற்கலங்களில் அணிகளாக சென்று, அந்த அணிகளுக்குள் இருக்கும் சில கடற்கரும்புலிக் கலங்கள் இலக்குகளை நோக்கி சென்று முட்டி வெடித்து அழிப்பது கடற்புலிகள் தாக்குதல் முறைகளில் ஒன்று.


கரும்புலிகள்