Wednesday, August 11, 2010

பிரிகேடியர் பால்ராஜ்

முதற்பயணம்

அது 1984 ஆம் ஆண்டு.

செம்மலைக் கிராமம்; இருளகற்றி விடிந்து கிடந்தது.

அங்கே கூடியிருந்த சில இளைஞர்கள் மட்டும்; சுறுசுறுப்பாக அதேநேரம்; பதை பதைப்பாக நின்றனர்.

விடுதலைப் போராளிகளாகத் தம்மை இணைத்திருந்த அந்த இளைஞர்கள்; இராணுவப் பயிற்சி பெறுவதற்காகத் தமிழ்நாடு நோக்கிய பயணத்திற்குத் தயாராகி நின்றனர்.

லெப்.காண்டீபன் தலைமையில் அவர்கள் புறப்பட வேண்டும்.

செம்மலையிலிருந்து புறப்படும் அவர்கள்; கடற்கரையை அடைந்து அங்கிருந்து வண்டியெடுத்து தமிழ்நாட்டைச் சென்றடைய வேண்டும்.

தமிழ்நாட்டைச் சென்றடையும் அவர்கள்; அங்கு நிறுவியிருக்கும் பயிற்சி முகாமில்; தமக்கான இராணுவப் பயிற்சி முடித்து விடுதலை வீரர்களாக வெளியேறுவர்.

நம்பிக்கையோடு தொடங்கிய பயணம்;; இறுதிவரை நல்லபடியாக முடிய வேண்டும். உழவுப் பொறியொன்றில் எல்லோரும் ஏறினர்; மகிழ்ச்சியோடு அந்தச் செம்மண் வீதிகளைக் கடந்து விரைந்து கொண்டிருந்தனர்; தமது விடுதலைக்கான பயணத்தில்.

செம்மலையைத் தாண்டி ஒதியமலைக்குக் கிட்டவாக் உழவுப்பொறி விரைந்து கொண்டிருக்க அந்த விடிகாலையை பயங்கரமாக்கி; நடந்தேறியது அந்தத் துயரம்.

பற்றைக்காடுகளுக்குள் மறைந்து கிடந்த சிங்களப் பேய்கள்;; தாக்கத் தொடங்கினர். எதிர்பாராத ஒரு பதுங்கித் தாக்குதல்.

சுதாகரிக்கவோ.... நிதானிக்கவோ முடியாத அளவுக்கு; கடுமையான தாக்குதல். பெரும் எதிர்பார்க்கையோடு பயணித்த் அந்தப் புதிய போராளிகளை; எதிரி ஒவ்வொருவராகச் சரித்து வீழ்த்தினான். விடுதலைப் பயணத்தின் தொடக்கப் புள்ளியிலேயே சந்தித்த பெரும் இடர்; அந்தத் தாக்குதலில் தப்பிப்பிழைப்பதென்பதே பெரும் கெட்டித்தனமான் அதிஸ்டவசமான செயல்.

வீழ்ந்தவர்கள் பிணங்களாகச் சரிய உயிரோடு அதிலிருந்து தப்பியவர்கள்; இரண்டே இரண்டு பேர்தான்.

அந்த இரண்டு பேரில் ஒருவர்; பிரிகேடியர் பால்ராச். பயிற்சிக்காக வண்டியேற வேண்டியவர்; மருத்துவச் சிகிச்சைக்காக வண்டியேற வேண்டியதாயிற்று.

தமிழ்நாட்டில்; காயத்தைக் குணமாக்கி அங்கேயே ஒன்பதாவது பயிற்சி முகாமில்; பயிற்சி முடித்து வெளியேறினார் தளபதி பால்ராச்.

அந்தத் தாக்குதலில் தளபதி பால்ராச்சைப் போராளியாக இணைத்த லெப்.காண்டீபன் வீரச்சாவடைந்து விட அதுவே அவரின் முதல் துயராகவும்; முதற்களமாகவும் அமைந்தது.

மரணவலயம்

மேஜர் பசீலன்.
வன்னியின் சண்டைக்காரர்களில்;; முதன்மையானவர்களில் ஒருவர். பசீலன் அண்ணரின் சண்டைகள் வித்தியாசமானவை துணிகரமானவை. எதிரிகளின் கணிப்பீடுகளிற்கு அப்பாற்பட்டவை.
இராணுவ வழமைகளுக்கு மாறாகச் சண்டைகளைச் செய்து எதிரியின் உச்சந்த லையில் குட்டிவிடுவதில்; வல்லவன்.

வன்னியில் பசீலன் அண்ணனின் தலைமையில்; புலிவீரர்கள் எதிரியின் கண்களுக்குள்; நீந்தி விளையாடினார்கள்.

மேஜர் பசீலன் அண்ணனின் அணியில்; தளபதி பால்ராச் ஒரு போராளியாக இருந்த அக்காலம். முல்லைத்தீவில் நகர்ந்து வந்த இராணுவத்தினர் மீது ஒரு பதுங்கித்தாக்குதலுக்கு; திட்டமிடப்பட்டது.

இடம்பார்த்து வேவு பார்த்து தாக்குதலுக்கு நாள் குறிக்கப்பட்டு அணி ஒழுங்குபடுத்தப்பட்டது. மேஜர் பசீலன் தாக்குதல் திட்டத்தை விளங்கப்படுத்த விபரங்களை உள்வாங்கியபடி; அணி உரிய இடத்திற்கு நகரத் தொடங்கியது.

எதிரி நகரும் வழிபார்த்து கிளைமோரைப் பொருத்தி விட்டு; போராளிகள் நிலையெடுக்கும் வேளை பசீலன் அண்ணர் தாக்குதல் திட்டத்தை மாற்றினார்.



போராளிகள் மீள் ஒழுங்குபடுத்தப்பட்டனர்;; திருத்தம் செய்யப்பட்ட தாக்குதல் திட்டத்தை பசீலண்ணை விளங்கப்படுத்தத் தொடங்கினார்.

எதிரி நகரும் பாதையை நோக்கி கிளைமோரைப் பொருத்தும்; அதேவேளை வெடிக்கும் கிளைமோரின் குண்டுச் சிதறல்கள் எந்தத் திசை நோக்கி தாக்குமோ அதே நேர்த்திசையில்; போராளிகள் நிலையெடுக்க வேண்டும்;. ஒரு திகிலூட்டும் திட்டத்தை; மேஜர் பசீலன் விளங்கப்படுத்தினார்.

கிளைமோரின் பின்புறமாக் அல்லது அதன் இடது மற்றும் வலது புறங்களில்; போராளிகளை நிலையெடுக்கச் செய்வதே எப்போதும் கைக்கொள்ளும் இராணுவ வழமை. ஆனால்; இந்த இராணுவ வழமையை மாற்றியமைத்து; எதிரிமீது ஒரு அச்சமூட்டும் தாக்குதலைத் தொடுக்க் பசீலன் அண்ணர் விரும்பினார்.

கிளைமோரின் தாக்குதலிருந்து தப்பும் எதிரிகள்;; கிளைமோர் வெடிக்கும் திசைக்கு எதிர்ப்புறம் போராளிகள் இல்லாத் தமக்கான பாதுகாப்பான பகுதியென எண்ணி; நிலையெடுப்பர்; அந்தப் பகுதியை; தாக்குதல் வலயமாக்குவதே மேஜர் பசீலனின் நோக்கமாக இருந்தது.

எதிரி எதை நினைப்பானோ அதற்குமாறான ஒரு தாக்குதல் திட்டம் தயாரானது. கரணம் தப்பினால் மரணம் என்கிற மரண திட்டம் அது. திட்டத்தில் ஏற்படும் சிறு சறுகல் கூட தாக்குதலுக்குள்ளாக வேண்டிய எதிரிகளுக்குப் பதிலாக தாக்குதலை மேற்கொள்ளும் எமது போராளிகளே தாக்கப்படக்கூடிய ஆபத்து நிறைந்த திட்டம்.

துணிந்தவன் வெல்வான் என்பது பசீலன் அண்ணரின் கணிப்பு. அந்த தாக்குதல் திட்டத்தை நிறைவேற்றுபவர்களுக்கு அசாத்திய துணிச்சலும்;- அதிக தன்னம்பிக்கையும்- பிசகாது செய்துமுடிக்கும்;; இராணுவ ஆற்றலும்; வேண்டும்.

யாரைத் தேர்ந்தெடுக்கலாம்? பசீலன் அண்ணர் அந்தத் தாக்குதலை நிறைவேற்றும் பொறுப்புக்கு ஒருவரைத் தேர்ந்தெடுத்தார்; அது வேறுயாருமல்ல எங்கள் தளபதி ~பால்ராச். தாக்குதல் வலயத்திற்குள்ளிருந்த சிறுபள்ளத்தைத் தமக்குக் காப்பாகப் பயன்படுத்தி; பசீலன் அண்ணர் நினைத்தது போலவே எதிரிகள் மீதான அந்தத் தாக்குதலை; தளபதி பால்ராச் தலைமையிலான போராளிகள் வெற்றிகரமாகச் செய்து முடித்தனர்; அந்தக் கொலை வலயத்தில். அசாத்திய துணிச்சலுடன்.

சூட்சமம்

இளம் போராளிகளுக்கான் பயிற்சிக் கல்லூரி அது. அங்கே பல்வேறு நிலைப்பட்ட போராளிகளும் இருந்தனர்.



களம் என்பது சாதாரணமானதல்ல மரணத்தோடு விளையாடி மண்ணையும் மக்களையும் காப்பாற்றுவதற்காக் வெற்றியைச் சுவீகரிக்க வேண்டிய வீரத்திடல். அந்த வீரத்திடலில்; எதிரியோடு விளையாடி அனுபவம் பெற்ற எமது பல தளபதிகள்; நிறைந்த அனுபவங்களையும், போர்ப்பட்டறிவுகளையும் கொண்டிருந்தனர்.

இவ்வாறு பலமுறை வெற்றியோடு விளையாடிய தளபதிகளுள் ஒருவர் தளபதி பால்ராச்;; தன்னுடைய போர்க்கள அனுபவங்களை இந்த இளம் வீரர்களுக்கு புகட்டினார். அவர்கள் முன்னிலையில் பல விடயங்கள் குறித்தும் பேசினார்.

எதிரிகளின் நோக்கம் - போர்க்களத்தின் எதிர்பாரா தருணங்கள் - சண்டையில் எதிரிகளை வீழ்த்தும் வியூகம் என எல்லாவற்றையும் எல்லோருக்கும் கற்றுக்கொடுத்;தார். தான் களத்தில் கற்றவற்றையும் - சந்தித்தவற்றையும் பகிர்ந்து கொண்டார். அங்கிருந்த இளம் வீரர்களுக்கு இந்த வீரனைப் பார்க்கவும் - அவர் சொல்வதைக் கேட்கவும் வியப்பாக இருந்தது அதிக விருப்பமாகவும் இருந்தது.

தளபதி பால்ராச்; அந்த இளம் போராளிகளுக்கு சொல்லிக் கொடுத்து முடிய அவர்கள் தமக்கிருந்த சந்தேகங்களை - விருப்பங்களை தளபதியிடமிருந்து அறிந்துகொள்ள விரும்பினர். அப்போது ஒரு இளம் வீரன்;; தளபதி பால்ராச்சிடம் கேட்டான்; உங்களுக்குச் சண்டையில் பயம் வருவதில்லையா?

போர் வீரர்களுக்கு இருக்கக்கூடாத அம்சம்; பயத்தை நீக்கி வீரத்தைப் பெற அவர்கள் கேட்டுணர வேண்டிய ஆரம்பப் பாடம்;; அதை மாவீரன் பால்ராச்சிடமிருந்து கற்றுக்கொள்ள அந்த இளம்வீரன் விரும்பினான்.

தளபதி பால்ராச்; அந்த இளம் வீரனை நோக்கி கூறினார். 'எனக்குப் பயம் வருவதில்லை... அது போல உங்களுக்கும் பயம் வரக்கூடாது" அப்போது பயத்தை வென்று துணிவைப் பெறும் மந்திரத்தின் சூட்சுமத்தை; அவிழ்க்கத்தொடங்கினார் தளபதி பால்ராச்.

நீங்கள் முதலில் எந்தவேளையிலும்;; எந்த ஆபத்தையும்; எதிர்கொள்ளக்கூடியவாறு முழுத் தயார்நிலையில் இருக்கப் பழக வேண்டும்.

நான் காடாக இருந்தாலும் சரி... பெரும் வெளியாக இருந்தாலும் சரி... எந்தக் களச் சூழலில் இருக்கிறேனோ அந்தக் களச்சூழலில் எதிரி திடீரென எதிர்ப்பட்டால்; அவனை எப்படி எதிர்கொள்ளலாம் எனச் சிந்திப்பேன்.

சிந்திப்பதோடு மட்டும் நின்று விடாது அத்தகையதொரு எதிர்பாராத தாக்குதலை தடுக்கக்கூடியவாறு எனது மனதிற்குள் ஒரு கற்பனையான தாக்குதல் திட்டம் ஒன்றை ஒத்திகை செய்து... பார்ப்பேன். என்னை நான் எந்த நெருக்கடி நிலைக்கும் ஏற்ற வகையில் தயார் நிலையில் வைத்திருப்பேன்...

அதனால் எதிரி எப்படி வந்தாலும்;.. பயமின்றி; பதட்டமின்றி எந்த என்னால் சூழலிலும் சிறப்பாகச் செயற்பட முடியும்.

இதைப் போன்று நீங்களும் செய்யுங்கள் என்றார்; இளம் வீரர்களை நோக்கி; அந்தப் பயமறியாத் தளபதி.

பெருமை

சிங்களப்படைகள் தமது முழுப்பலத்தையும்... வளத்தையும் ஒன்று திரட்டி யாழ்ப்பாணம் மீது படையெடுக்க தமிழர் படையை வன்னியை நோக்கி பின்னகர்த்தினார்; தலைவர். யாழ்ப்பாணத்தைப் புலிகள் இழந்துபோனதால்;; போராடும் திறனை; அவர்கள் இழந்து போனார்களென எக்காளமிட்டது சிங்களம்.



யாழ்ப்பாணத்தைத் தொடர்ந்து வன்னி மீது போர் தொடுக்க தன்னைத் தயார்ப்படுத்தியது சிங்களம்.

அமைதியாய் - ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி; உள்ளே குமுறும் எரிமலை போல் தருணம் எதிர்பார்த்துக் காத்திருந்தார்; தலைவர்.

வெற்றி மமதையெடுத்து புலிகள் அடியோடு அழிந்தார்கள் என்றவர்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் செய்தார் தலைவர்.

1996 யூலை 18

நந்திக் கடலோரம் அமைந்திருந்த முல்லைத்தளத்தை வீழ்த்த தலைவர் முடிவெடுத்தார்; தளத்தை அழிக்கும் முழுப் பொறுப்பையும்; தளபதி பால்ராச்சிடம் ஒப்படைத்தார். புலிகளின் அசுர அடி தளம் ஆட்டம் கண்டு வீழ்ந்துபோனது.

ஆயிரத்து இருநூறிற்கும் மேற்பட்ட சிங்களப் படைகளை அழித்து தமிழர் படை எதிரியிடமிருந்து அந்த தளத்தையும் அங்கிருந்த ஆட்லறிகளையும் ஆயுத தளபாடங்களையும் கைப்பற்றியது.

போராட்டச் சக்கரம் புதையுண்டு போனதாய் புலம்பியவர்களெல்லாம்;; வாயடைத்துப் போனார்கள்.

வெற்றிப் பெருமிதத்தோடு; தலைவரின் தளம் நோக்கி விரைந்தார்; தளபதி பால்ராச். தலைவர் நினைத்ததை நினைத்தபடியே களத்தில் செய்துவிட்டு; தளபதி பால்ராச் வர தலைவர் மகிழ்ச்சியுடன்; தளபதியுடன் பால்ராச்சின் ஒரு கரத்தைப் பற்றிப் பாராட்டினார்.

2000 மார்ச் 26.

மூன்றாம் கட்ட ஈழப்போரின் போக்குத் திசையை எதிரியின் பிடியிலிருந்து புலிகளின் பிடிக்குள் கொண்டுவந்து கொண்டிருந்தார்; தலைவர்.

இடிமுழக்கம்.... சூரியகதிர்.... சத்ஜெய.... எடிபல... ஜெயசிக்குறு என அடுத்தடுத்துப் படையெடுத்து புலிகளின் கதை முடிக்க முயன்றவர்களின்; கதை முடிக்கும்; ஓயாத அலைகள் படை நடவடிக்கையை ஆரம்பித்திருந்தார் தலைவர்.

வன்னியின் தென்முனை நோக்கிப்படை நடத்திய தலைவர்; சடாரென திரும்பிய புயல் போல் வன்னியின் வட திசையில் போர்ப்புயலை; வீசச் செய்தார். ஆனையிறவைச் சூழவிருந்த படை முகாம்கள் ஒவ்வொன்றாய் வீழகளம் சூடு பிடிக்கத் தொடங்கியது.

ஓயாது வீசிக் கொண்டிருந்தவர்கள் ஓயாத அலை படை நடவடிக்கையின் மகுடமாய்;; நீண்ட காலமாக கைகளுக்கெட்டாமல்; நழுவி நிமிர்ந்து நின்ற ஆனையிறவுப் பெருந்;தளத்தை அடியோடு சாய்க்கத் தலைவர் வியூகமிட்டார்.

திட்டம் புலிகளுக்கு மட்டுமேயுரிய தனித்துவமான திட்டம். அகன்று விரிந்து கிடக்கும் பகைவனின் முற்றத்தில்; புலிகள் கூடாரமடித்து எதிரிகளை வேட்டையாட வேண்டும். சிங்க வேட்டைக்குத் தலைவர் தேர்ந்தெடுத்த இடம்;; இத்தாவில். அதை அரங்கேற்ற அவர் தேர்ந்தெடுத்த தளபதி; பால்ராச்;. முப்பத்து நான்கு நாட்கள்; இத்தாவில் மட்டுமல்ல தளபதி பால்ராச்சும்... போராளிகளும்; நெருப்பில் குளித்து நிமிர்ந்தனர்.

முடிவு இனிமேல் எங்களால் முடியாது என்ற பகைவன்;; ஆனையிறவிலிருந்த தமது சகாக்களையும்;; ஆனையிறவை நோக்கிப் பலாலியிலிருந்து அனுப்பிய தனது படைகளையும் பின்னிழுக்கச்;; சிங்களச் சிங்கங்கள் குந்தியிருந்த் அந்தப் பெருங்கோட்டை உக்கி உப்பு வெளிக்குள்; உதிர்ந்து போனது.

அதன் ஆணிவேரை ஆட்டங்காணச் செய்த அந்த முப்பத்து நான்கு நாள் இத்தாவில் சமரை பால்ராச் வென்று ஏ-9 சாலையால் தலைவரின் தளம் விரைய தலைவர் மீண்டும் கைகொடுத்தார்; அந்தத் தளபதியைப் பாராட்ட ஆனால், ஒரு கையை அல்ல இரு கைகளையும் சேர்த்து.

-------------------------

பகைவன் கூட பாராட்டும் வகையில்; படை நடாத்திய அந்தப் பெருந்தளபதி... எத்தனையோ சண்டைகளை.... சமர்களை.... வென்ற வீரன்.

எதிரிகளோடு தனித்துச் சண்டை செய்து.... குழுவாகச் சண்டை செய்து... பெரும் படையாகச் சண்டை செய்து... அந்தப் பெரும் படையையே வழிநடாத்தும் பெருந்தளபதியாய் உயர்ந்து எங்கள் புருவங்களை உயரச் செய்த அந்த உன்னத தளபதி; முடியாது என்ற களத்தில்கூட தன்னால் முடியும் எனச் சாதித்துக் காட்டிய அந்தத் தளபதி.

பெருமையோடு தான் பெற்ற இந்த இரண்டு பெரும் பாராட்டுக்களையும் மனமிளகி மகிழ்ச்சியோடு தோழர்களிடம் நினைவு கூறுவராம்.

சமயோசிதம்

தளபதி பால்ராச் தலைமையில் குடாரப்பில் தரையிறங்கிய புலி வீரர்களும் வீராங்கனைகளும்; எதிரியின் முற்றமான இத்தாவிலில் ~பெட்டிகட்டி சடு...குடு... ஆடினார்கள்.

திகைத்துப்போன பகைவன்; இருந்தவர்களையும் - கிடந்தவைகளையும் வாரிச்சுருட்டிக் கொண்டு; புலிகளோடு மூர்க்கமாக மோதத் தொடங்கினான். தாக்குதலின் கடுமை இத்தாவில் சமர் சரித்திரம் மறவாத் சமராக மாறியது.

பல்லாயிரக்கணக்கான எதிரிகளுக்கு எதிராக சுமார் ஆயிரத்து இருநூறு போராளிகள் மட்டுமே எதிர்ச் சமராடினர்.

பகைவனின் இரும்புக்கோட்டையைச் சரிக்க தலைவரின் எண்ணத்தில் உதிர்த்த அற்புதமான போரியல் திட்டம்; அதைத் தளத்தில் அரங்கேற்றும் நாயகன்; எங்கள் பிரிகேடியர் பால்ராச்; தலைவரின் நம்பிக்கையான தெரிவு எப்போதும் தலைவர் எதிரிகளை கலங்கடிக்க எய்யும்; சக்திமிக்;க அம்பு.

உள்ளே பால்ராச் நிக்குதாம்; அறிந்து கொண்ட எதிரி; எரிச்சலோடும் மூர்க்கத்தோடும்; மோதினான்.


எப்படியாவது... எங்காவது ஒரு மூலையில் சிறு உடைப்பை ஏற்படுத்த முடியாதா என எதிரி திணறினான்.

படையணிகளை மாற்றி... படையதிகாரிகளை மாற்றி... மூர்க்கத்தோடு முட்டிமோதிய போதும்; அவனால்; முன்னேற முடியாமற் போயிற்று.

உள்ளே மோதிக் கொண்டிருக்கும் போராளிகள்; குறைந்த எண்ணிக்கையாலானவர்கள்;; அவர்கள் வசமிருந்த படைக்கலங்களும்; குறைந்த எண்ணிக்கையிலானவை.

தாக்குதல் களம்; எதிரியின் முற்றம். போராளிகள் நினைத்தவுடன்; எந்தப் பற்றாக்குறைகளையும் தேவைகளையும்... நிவர்த்தி செய்துவிட முடியாது.

அதற்கு எதிரி; களத்தில் வாய்ப்பளிக்கப் போவதுமில்லை. இப்படித்தான்; களத்தில் எதிரி மோதிக்களைத்த நிலையில்; ஒருநாள் நேரடி மோதுகையைத் தவிர்த்து அகோரமான எறிகணைத் தாக்குதலைத் தொடுத்துக்கொண்டிருந்தான்.

அந்த முப்பத்துநான்கு நாள் சமரின் ஒருநாள்; போராளிகள் நிலைகொண்டிருந்த அந்தக் களமுனை முழுவதையும்; எறிகணைகள் துடைத்தழித்துக் கொண்டிருந்தன.

அப்போது எதிரி ஏவித்தொலைத்த அந்தப் பல்லாயிரக்கணக்கான எறிகனைகளில் ஒன்றோ சிலவோ அங்கே தாக்குதலுக்காகக் களஞ்சியப்படுத்தியிருந்த போராளிகளின் ஆயுதக்களஞ்சியம் மீது வீழ்ந்து வெடிக்கத்; தொடங்கியது திருவிழா!

உள்ளேயிருந்த் அத்தனை வெடிபொருட்களும்;; கடாம்... புடாம்... டமால்... எனப் பெரும் வெடியோசையோடு; தொடர் குண்டோசையாக் வெடித்துச் சிதறியது.

உள்ளே என்ன நடக்கிறது என்பது எவருக்குமே புரியவில்லை. எறிகணைகளை ஏவிக்கொண்டிருந்த எதிரியும் கூடக் குழம்பிப் போனான்.

குண்டுமழை ஓய்ந்தது போல் அந்தக் களமுனை சற்று அமைதியுற அங்;கு நிலைமையின் விபரீதம் கண்முன்னே விரிந்து கிடந்தது.

உள்ளே இருப்பவர்களின் இருப்பு இந்த வெடிபொருட்களின்; இருப்பிலும் தான் இருக்கிறது. அவை எதிரிகளை அழிக்காமலே அழிந்து போகுமானால் நிலைமையைக் கற்பனை செய்யவே கடினமாக இருக்கும். ஆனால் அத்தகையதொரு நிலைமைதான் அந்தக் களத்தில்; தளபதி பால்ராச்சின் முன் ஏற்பட்டுவிட்டது.

எத்தகைய படைகளையும்... எந்த உறுதி மிக்கத் தளபதிகளையும்... படையதிகாரிகளையும்; குழம்பச் செய்துவிடக்கூடிய அழிவு.

களமுனையில் நின்றவர்கள்; ஏதோ சிக்கல் ஏற்பட்டுவிட்டது என்பதை உணர்ந்து பதட்டத்தோடு தொலைத் தொடர்புக் கருவியில்; தளபதி பால்ராச்சை அழைத்தனர்.
லீமா... லீமா...
என்ன மாதிரி...?
ஏதும் சிக்கலோ...?
அறிந்து கொள்ளும் அவசரம்; எல்லோருக்கும்;; நிதானமாக் எந்தக் குழப்பமுமற்று அழைத்த எல்லாக் குரல்களுக்கும் லீமாவின் பதில் வந்தது தெளிவாக. அது ஒண்டுமில்லை நாளைக்கு நாங்கள் செய்யப்போகும் 'ஒழுங்குக்கு" இண்டைக்கு ஒத்திகை நடக்குது. என தொலைத் தொடர்வுக்கருவியில் ஒலித்தது. உறுதிகுலையாத ஒரு தளபதியின்; சமயோசிதக் குரலாக.

சுனாமி..!

2004 ஆம் ஆண்டு காலப்பகுதி...... தளபதி பால்ராச் அப்போது தென்தமிழீழத்தின்; வாகரையில் நின்றார். வடதமிழீழத்தின்; அனேகமான போர்க்களங்களில் நடமாடிய அந்தத் தளபதி; இப்போது தென்தமிழீழத்தில்...


அது ஒரு அமைதிக்காலம்; போர் ஒய்ந்திருக்க அந்தத் தளபதியும்; ஓய்வாக இருந்தான். அழகான கடற்கரையோரம்... அழகூட்டும் ஊர்மனை... கல...கலவெனச் சிரிக்கும் ஏதுமறியாச் சனங்களின் வீடுகள் என எல்லா இடமும்; அந்தத் தளபதி; பயணித்தான்.

வாகரையின் கடல்மணல் தொடும்; அந்தக் கடற்கரையோரம்;; தென்னைமரக் கூடலுக்குள்;; தளபதி பால்ராச்சின் பாசறை இருந்தது. 2006 டிசம்பர் 26 விடிகாலை. சத்தம் சந்தடி ஏதுமின்றி; இயற்கை மகள் சீறிச்சினக்க கரையோர மக்கள்; தண்ணீருக்குள்;; கண்ணீரோடு தவித்தனர். தென்னாசியாவின் கரையோரம் எங்கும்;; மனித உயிர்கள்; மண்மேடாய் குவிந்தன. எல்லோரும் அழுதார்கள்;;; ஏதேனும் ஒரு அசுமாத்தம் தெரிந்திருந்தால் கூட ஓடிப் பிழைத்திருப்போமே என குமுறிக் குழறினர்.

இயற்கை ஏன் எங்களை எச்சரிக்கவில்லை; கடலைச் சபித்து மண்ணள்ளித் தூற்றினர். சின்ன எச்சரிக்கை எங்களுக்காக் எங்கள் மீது பரிவுகொண்டு; எவரேனும் எங்களை எச்சரித்திருக் கூடாதா?; ஆதங்கத்தால் ஏங்கினர்.

இயற்கையின் விபரீதத்தை; உணரமுடியாமற் போனதா அல்லது இயற்கையின் எச்சரிக்கையை உணரத் தவறினோமா?; எவருக்கும் விடை தெரியாத அந்த நாளில்; குமுறி எழுந்த அந்தச் சுனாமி அலை கடலைவிட்டுத் தரைக்குத் தாவியபோது கரையோர மக்களுக்கு விபரீதத்தின் விளைவு புரியவில்லைத்தான்.

நின்று... நிதானித்து... சுதாகரிக்க எந்த அவகாசமும்; எவருக்கும் இருக்கவில்லைத்தான். வாகரையின் கரையோரத்தை நோக்கி; மலை போல சீறிவந்த கடலலை சூழ்ந்துகொள்ள அங்கிருந்த தளபதி பால்ராச்சின் பாசறையையும்;; கடல் நீர் விழுங்கத் தொடங்கியது.

இந்தக் கடல்நீர் வெளியேற்றம்;;; வழமைக்கு மாறானது ஆபத்தானது புரிந்து கொண்ட தளபதி பால்ராச்; இயற்கை விளைவித்த அந்த ஆபத்திற்கு மத்தியிலும்; ஒரு களத்தின் நடுவே நின்று செயற்படும் வீரனைப் போல் துரிதமாகத் துணிவோடு செயற்பட்டார்.

கடல்நீர் காலளவு... கையளவு தாண்டி கழுத்தளவு வந்துவிட அந்த முகாமிலிருந்த ஆயுதங்களையும் வெடிபொருட்களையும்; நீரிழுத்துப் போகாமல்; இருக்க தளபதி பால்ராச்; பெரும் போராட்டத்தையே நடாத்த வேண்டியிருந்தது.

அங்கிருந்த கனரக மோட்டரொன்றைக்; கயிற்றில் இணைத்து தென்னை மரத்தோடு கட்டியதோடு, ஏனைய போராளிகளை ஏவி; இயக்கத்தின் உடமைகளையும்; தமிழ்மக்களின் பாதுகாப்புக் கேடயங்களையும் காப்பதில்; முன்னின்றான் அந்தத் தளபதி.

சீறியெழுந்து; சுழன்றடித்துக் கொண்டிருந்த அந்த அலையின்; கொடூரப் பிடியின் நடுவே நின்றுகொண்டும்; தன்னுயிரைப் பாதுகாக்க வேண்டுமெனக் கொஞ்சமேனும் நினையாத அந்தத் தளபதி; ஆபத்திற்கு மத்தியிலும் அந்த முகாமிலிருந்த ஒரு துப்பாக்கியை கையிலெடுத்து வானை நோக்கி; ரவைக்கூட்டிலிருந்த அத்தனை துப்பாக்கி ரவைகளும் தீரும் வரை சுட்டுத் தீர்த்தாராம்.

துப்பாக்கி ரவையின் சத்தத்தையும்; அலையின் பேரிரைச்சலையும் கேட்டுச்; சனங்கள் ஏதோ ஆபத்து வருகிறதென எச்சரிக்கையடைந்து பாதுகாப்பான இடங்களுக்கு ஓடித்தப்பட்டும். சனங்களின் மீது அன்புகொண்ட எங்கள் தளபதி...

நம்பிக்கை..!

'சிங்கமுகச்" சிலந்தி போல் ஆனையிறவுப் படைத்தளம்; தனது பாதுகாப்பு வலைப் பின்னலை இறுக்கமாகப் பின்னி; குடாநாட்டின் தொண்டைக்குழிக்குள்; விரிந்துகிடந்தது. ஆயிரக்கணக்கில் போராளிகளை விதையாக்கிய பின்னும்; அந்தப் படைத்தளம் வீழாது வீங்கிப் பெருத்திருந்தது.

ஆனையிறவுச் சிலந்தியின்; ஒவ்வொரு பாதுகாப்பு வலைப் பின்னலையும்;; அது அகல விரித்திருந்த அதன் ஒவ்வொரு கால்களையும் அறுத்தெறிந்து பிணமாக்கத் தலைவர் முடிவெடுத்தார்.

ஒரு பகற்பொழுது; பரந்தனில் தொடங்கிய சண்டை விறுவிறுவென உமையாள்புரம் வரை அகன்று நின்ற ஆனையிறவின் கால்களையும்; மறுபுறம் கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, புல்லாவெளிவரை நீண்டு கிடந்த கால்களையும் அறுத்தெறிய ஆனையிறவு ஒடுங்கிப் போனது. புலிகளுக்கேயுரிய திகிலூட்டும் ஒரு அதிரடி முயற்சியின் மூலம்; ஆனையிறவை அடியோடு வீழ்த்துவதே தலைவரின்; திட்டம். குடாரப்பில் தரையிறங்கி; இத்தாவிலில் உறுதியாக நின்று கொண்டு; ஆனையிறவின் கழுத்தை நெரிக்க வேண்டும்.

திட்டத்தை நிறைவேற்றும் அதிபதியாக் பால்ராச்சைத் தேர்ந்தெடுத்தார் தலைவர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்; மிகப் பெரும் தரையிறக்க நடவடிக்கை தரைப் புலிகளும்... கடற்புலிகளும் இணைந்து மேற்கொள்ளப் போகும்; கூட்டு நடவடிக்கை.

எதிரியின் பயணப் பாதையில் சூறாவளியென சுழன்றடிக்கப்போகும் போராளிகளுக்கு நம்பிக்கையூட்டித்; தலைவர் அனுப்பிவிட வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு கடற்கரையோரம் போராளிகள் ஒன்றுசேர்ந்தனர் ஒரு பெரும் வரலாற்றுப் பயணம் இங்கிருந்துதான் ஆரம்பிக்கப்போகிறது.

வெயில் பளீரெனச்; சுட்டெரிக்கும் ஒரு பகற்பொழுது அந்தக் கடற்கரையோரம்; தரையிறக்கத் தளபதி பால்ராச்சும்; கடற்படைத் தளபதி சூசையும்; ஒன்றாக அமர்ந்திருந்தனர். வந்திருந்த உணவுப் பொதியொன்றைப் பிரித்துச் சாப்பிடத் தொடங்க தளபதி சூசை மெதுவாக உரையாடலை ஆரம்பித்தார்.

அக்காலம்; மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டம்;; இயக்கம் ஒரு பெரும் தொடர்ச்சியாக போருக்கு முகம் கொடுத்து வந்ததால்; வளப் பற்றாக்குறைகளைப் பெரியளவில் எதிர்கொண்டபடியிருந்தது. போராயுதங்களுக்கும்;; போரைப் பின்னின்று இயக்கும் பல அடிப்படைப் பொருட்களுக்கும் கூட பெரும் தட்டுப்பாடு.

இந்த நிலையில் கடற்புலிகளைப் பொறுத்த வரையில் தரையிறங்கப் போகும் ஆயிரக்கணக்கான போராளிகளையும்;; அவர்கள் கொண்டு செல்லும் ஆயுதத் தளபாடத் தொகுதிகளையும்; உள்ளே தரையிறக்குவதென்பது இமாலய சாதனை.

அதற்காக கடற்புலிகளின் கையிருப்பிலிருந்த பெருந்தொகை எரிபொருட்களையும்; படகுத் தொகுதிகளையும்; அவர்கள் செலவளிக்க வேண்டியிருந்தது.

இந்த நிலையில்; கடற்புலிகளின் வசம் குடாரப்பில் தரையிறக்கப்பட வேண்டிய தளபதி பால்ராச் தலைமையிலான ஆயிரத்து இருநூறு போராளிகளையும்; அவர்களின் ஆயுதத் தளபாடங்களையும்; ஏற்றிச்செல்லக்கூடிய அளவு எரிபொருள் மட்டுமே தளபதி சூசையின் கையிருப்பில் இருந்தது.

சண்டை ஏதாவது சிக்கலாகி; நிலைமை நெருக்கடிக்குள்ளாகுமிடத்து அவ்வளவு தொகை போராளிகளையும் ஆயுத தளபாடங்களையும்; மீளவும் தளம் திருப்ப வேண்டும். ஆனால் அதற்கு தேவையான எரிபொருள்; கையிருப்பில் இல்லை.

நிலைமையின் தன்மையை கடற்படைத் தளபதி; தளபதி பால்ராச்சிற்கு சங்கடத்தோடு உரைக்க ஏற்கெனவே நிலைமையை நன்கு அறிந்திருந்த அந்தத் தளபதி; தனது இதழ்களில் தவழ்ந்த மெல்லிய புன்னகையோடு கண்களில் நம்பிக்கைத் தெறிக்க தளபதி சூசையை நோக்கிக் கூறினாராம்.

'என்னை உள்ள இறக்கி விட்டாக்காணும்.... நான் தரையால வருவன்" என்று.

கைதி..!

1983 க்கும் 1984 க்கும்; இடைப்பட்ட காலம். வன்னியில் புலிகள் இயக்கம்; வேர்விடத் தொடங்கியிருந்த வேளையது. பால்ராச் அதிகம் அறியப்படாத ஒரு இளைஞனாக இருந்த நாட்கள்...

அதாவது போராட்டத்தில் அவர் தன்னை முழுமையாக் இணைத்துக்கொள்ளாத காலம். ஆதரவாளனாக.... பகுதி நேரப் போராளியாக அவர்; இயங்கிக் கொண்டிருந்தார்;. ஒருநாள்.........

இயக்க வேலையாக் தண்ணீரூற்று.... முள்ளியவளையென அலைந்து திரிந்து விட்டு; மிதிவண்டியில்; முல்லைத்தீவு நகர் வழியாக பயணித்துக்கொண்டிருக்க முல்லைத்தீவு இராணுவ முகாமிலிருந்த சிறிலங்கா இராணுவத்தினர்; இளைஞனாக இருந்த தளபதி பால்ராச்சை இடைமறித்தனர்.

அப்பாவி இளைஞனாக் காட்டிக்கொண்ட போதும்;; அவரைச் சிங்களப் படைகள் கைது செய்தனர்.

தளபதி பால்ராச் முல்லைத்தீவு முகாமில்; மூன்று நாட்கள்; சிறை வைக்கப்பட்டார்.

அவர் அங்கிருந்த அந்த மூன்று நாட்களும்;; சிறிலங்காப்; படையினரும் பொறுப்பதிகாரிகளும்... அவரை மிரட்டியும்... வெருட்டியும்; பல்வேறு உபதேசங்களைச் செய்தனர்.

தளபதி பால்ராச்;சைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளன் என்றோ... அல்லது பகுதிநேரப் போராளியென்றேர் அடையாளம் காணாத சிங்களப்படைகள்;; சின்னப் பெடியள் தேவையற்ற விடயங்களில் ஈடுபடக்கூடாது என போராட்ட உணர்வை மழுங்கடிக்கும் கருத்துக்களை; விதைக்க விளைந்தனர்.

தளபதி பால்ராச் எல்லாம் அறிந்தும்;; அறியாதது போல மௌனம் காக்க சிங்களப் படைகள் அவரை விடுவித்தது. பின்னர், தளபதி பால்ராச்; போராளியாகி; தளபதியாகி; சிங்களப் படைகளுக்கு எதிராகத்; தொடர் போராட்டங்களையே நடாத்தினார்.

எல்லாவற்றிற்கும் மேலாக் தளபதி பால்ராச் எந்த இராணுவ முகாமில் சிறை வைக்கப்பட்டாரோ அந்த இராணுவ முகாம் பின்னாளில் தளபதி பால்ராச் தலைமையில்; தாக்கியழிக்கப்பட்டு வரலாற்றில் பதிவாகியது. ஒரு முன்னாள் கைதியின் எழுச்சி; ஒரு இராணுவ முகாமின்; அழிவாகிப் போனது.

போரியல் புத்தகம்..!

போராட்டம் வளர்ந்துவிட்டது. போர்க்கலையில் வல்ல புலிகளாக் போராளிகளும் வளர்ந்து விட்டார்கள்.

ஒரு கைத்துப்பாக்கியோடு ஆரம்பித்த விடுதலைப் போராட்டம்;; ஆட்லறிகளையும்... டாங்கிகளையும் கொண்ட பெரும் படையாக உயர்ந்து நிற்கிறது.

காலமும்... சூழலும் மாற... மாற... போரும் அதன் தன்மைக்கேற்ப மாறிவிட்டது.

கெரில்லாப் போராட்டமாக ஆரம்பித்த விடுதலைப்போர்;; மரவுவழிப்படை நடத்தலை மேற்கொள்ளும்; அளவுக்கு வளர்ந்தாயிற்று.

காலத்திற்கு ஏற்ப போராளிகளும் மாறவேண்டும்;; அவர்களை மாற்றவேண்டும்.

வெறும்; சண்டைக்காரர்களாக மட்டுமல்ல அதிகாரிகளாக... தளபதிகளாக... சண்டைத்திறன் கொண்ட நிபுணர்களாக அவர்களை மாற்ற வேண்டும்.

தலைவர்; இந்த விடயத்தில் எப்போதும் அதிக கரிசனை எடுப்பார்;. அவரே நேர்நின்று எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துவார்.

நவீன கால போர் என்பது சாதாரணமானதல்ல ஆயுதங்களும் அதன் பயன்பாடுகளும் ஒருபுறம் இருக்க இன்னொரு புறம்; தந்திரங்களும்... உத்திகளும் செல்வாக்குச் செலுத்தும். ஆயுதப்பயன்பாடு குறித்து அறிந்து கொள்ளும் வசதி; உத்திகளையும்... தந்திரங்களையும்; அறிந்துகொள்ளக் கிடைப்பதில்லை.

அது வெறுமனே எழுத்தில் வடிக்கப்பட்ட நூல்களிலிருந்து மட்டும்; கற்றுத்தெரிந்து கொள்ள முடியாது.

ஒவ்வொரு போர் அனுபவமும்... தந்திரமும்... உத்தியும்;; அதனதன் பௌதீகச் சூழலுக்கும் புவியல் அமைப்புக்கும் ஏற்ப மாறுபடும்; தளபதிகளின் திறமைகளுக்கும் ஏற்ப வித்தியாசப்படும்.

இதற்கேற்ப போரியல் அறிவை வளர்த்தெடுத்து இளம்புலி வீரர்களுக்கு புகட்ட வேண்டும். தலைவர்;; இளம் வீரர்களுக்கான அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரியொன்றை ஆரம்பித்திருந்தார். தகுதியானவர்களைக் கொண்டு; பல்துறை சார்ந்த போரியல் பாடங்களை அவர்களுக்கு ஊட்டினார்.

அங்கு உள்நாடு தொட்டு... வெளிநாடு வரையான போர்க்களங்களையும் போரியல் அனுபவங்களையும் கற்றுக்கொடுப்பதற்கு ஏற்பாடாகி இருந்தது. ஒருநாள்; தலைவர்; பிரிகேடியர் பால்ராச்சை அழைத்தார்;. அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரியில் கற்கும்; போராளிகளுக்குப் பாடம் புகட்டுமாறு பணித்தார். ஆனால்; ஒரு நிபந்தனையோடு...

நீ வெளிநாட்டுச் சண்டைகளைப் பற்றியொண்டும் அங்கு வகுப்பெடுக்க வேண்டாம்; நீ... பிடித்த சண்டைகளைப் பற்றி மட்டும் சொல்லு அதுவே அவர்களுக்குப் பெரிய பாடம் என்றார். அந்தளவுக்குச் சண்டை அனுபவங்கள் நிரம்பிய ஒரு போரியல் புத்தகமாக எங்கள் தளபதி பிரிகேடியர் பால்ராச்; தலைவரின் பார்வையில்; மிளிர்ந்தார்.

திசைகாட்டி..!

இந்திய - புலிகள் போரின் உக்கிரம்; மணலாற்றுக் காட்டுக்குள் தீவிரம் பெற்றிருந்த காலம். தலைவரின் இருப்பிடத்தை அறிந்து கொண்டதில்;; இந்தியர்களுக்கு உற்சாகம். தமது சிறப்புப் படையணிகளை ஒன்றுதிரட்டி மணலாற்றுக் காட்டைச் சுற்றிவளைத்து தலைவரைக் கொன்றுவிடத் துடித்தனர்.

தலைவரை அழிக்கும் படை நடவடிக்கைக்கு அவர்கள் சூட்டிய பெயர்;; ~செக்;மேற். இந்தியர்கள் அந்தப் பெரும் நடவடிக்கையை; மணலாற்றுக் காட்டுக்குள் மேற்கொண்ட போதும்;; தலைவர் அங்கிருந்து பின்வாங்கவோ இடம்மாறவோ விரும்பவில்லை. இந்திய - புலிகள் போரின் இறுதி முடிவை இந்த மணலாற்றுக் காட்டுக்குள்; வைத்து தீர்மானிக்க அவர் விரும்பினார்.

வேட்டையாட வந்தவர்கள்; அங்கே வேட்டையாடப்பட்டார்கள். அது ஏறத்தாழ கோலியாத்துகளுக்கும்; தாவீதுகளுக்கு மிடையிலான யுத்தம். இந்த யுத்தம் அரங்கேறிய இடமோ பெரும் வனாந்தரம்.

அக்காலம்; காடு முழுவதுமாக போராளிகளின் உள்ளங்கைகளுக்குள்; அகப்பட்டுவிடவில்லை. ஒருபுறம்; இந்தியர்களோடு போராடிக்கொண்டு; காட்டின் விசித்திரங்களையும் விடுபடாத முடிச்சுகளையும் அவர்கள் அவிழ்க்க வேண்டியிருந்தது. காடு எந்தச் சலனமுமற்று இருளால் மூடிக்கிடந்தது. எங்கோ கத்தித் தொலைக்கும் விசித்திரப் பறவைகள்;; எட்டுமுட்டாகச் சந்தித்தால் துள்ளிப் பறந்தோடும் காட்டு விலங்குகள்; எவருக்கும் வளைந்து கொடுக்காது இறுமாப்போடு நிமிர்ந்து நிற்கும் காட்டு மரங்கள்;; எனக் காடு காடாகவிருந்தது.

மனிதர்களுக்கு அந்நியப்பட்டு நிற்கும் இந்தக் காட்டுக்குள்தான்;; தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும்;; ஒரு வல்லரசிற்கெதிரான போர்; நடந்து கொண்டிருந்தது. உள்ளே தலைவர் இருக்கிறார் என்பதை அறிந்து கொண்ட இந்தியர்கள்; பேராசையோடு காட்டைச் சூழ்ந்தார்கள்;; காட்டுக்குள் குவிந்தார்கள்.

பெரும் வல்லரசு ஒன்றின்; ஒருமுகப்படுத்தப்பட்ட படை அவர்களுக்கு எல்லா வளங்களும் இருந்தன. ஆனால் தலைவரின் தலைமையில் நின்ற போராளிகளுக்கு...? போராளிகளைப் பொறுத்த வரையில்; காடு நண்பனாகவும் இருந்தது எதிரியாகவும் விளங்கியது. அது இயற்கையின் ஒரு விந்தையான படைப்பு.

ஆற்றல் உள்ளவர்களுக்கும்;; அனுபவம் கொண்டவர்களுக்கும் மட்டுமே வழிகாட்டும். அது எத்தனை ஆற்றல் படைத்தவர்களையும்; அனுபவம் கொண்டவர்களையும் கூட சிலவேளைகளில் சறுக்கி விழுத்தி விடும்.

காட்டு அனுபவம் இல்லாது எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும்;; காட்டுக்குள் நிறைந்து கிடக்கும் எதிரியிடமோ மாட்டிவிடும். அந்த வனத்துக்குள் அனாதையாய் அலையவிட்டு; வேடிக்கை பார்த்து நிற்கும். அனுபவத்தின் மனக்குறிப்பைக் கண்களுக்குள் விரித்து காடு முறித்து பாதையெடுத்தால் மாத்திரம் தான்; போராளிகளின் பயணங்கள் இலகுவாகும். மற்றும்படி பயணத்தை இலகுவாக்கப் போராளிகளிடம்; போதிய திசையறி கருவியும் கிடையாது வரைபடக் குறிப்பும் கிடையாது. இத்தனைக்கும்; எதிரிகளின் சுற்றிவளைப்புக்குள்ளும் முற்றுகைக்குள்ளும்; தொடரவேண்டிய பயணங்கள்.

அந்த நேரங்களில்; திசையறிகருவி இல்லாமலேயே காடுமுறித்து மனக்குறிப்பால் போராளிகளை அழைத்துச் செல்லும்; காட்டனுபவம் உள்ளவர்கள் வேண்டும். ஆம்; மணலாற்றுக் காட்டுக்குள்; காட்டனுபவமும்-ஆற்றலும்-அறிவுமுள்ள பல திறமைசாலிகளை தலைவர் தன்வசம் வைத்திருந்தார். அத்தகைய திறமைசாலிகளில் ஒருவர்; பிரிகேடியர் பால்ராச். அக்காலம்; தளபதி பால்ராச் தலைவரின் நம்பிக்கைக்குரிய ஒரு திசையறிகருவி.

முற்றுகை..!

இந்திய ஆக்கிரமிப்புப் படைகள் வெளியேறியிருந்தன இல்லை வெளியேற்றப்பட்டிருந்தன. மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக சிங்களப் படைகள் திமிர் எடுத்து மண் பசியுடன்; தமிழர்களை வேட்டையாட வெடித்தது இரண்டாம் கட்ட ஈழப்போர். விளைவு சிங்களப் படைகளிற்கு எதிரான போர்; தீவிரம் பெறத் தொடங்கியது.

அந்தநேரம் கொக்காவில்... மாங்குளம்... முல்லைத்தீவு என பல இடங்களிலும்; சிங்களப் படைகள்; குந்தியிருந்தன. இவ்வாறு வன்னியை ஆக்கிரமித்து நின்ற சிங்களப் படை முகாம்கள்;; எரிச்சலூட்டிக் கொண்டிருந்த அதேநேரம். அவர்களுக்கெதிராக பதுங்கித் தாக்குதல்கள்... கண்ணிவெடித் தாக்குதல்கள்... காவலரண்கள் தகர்ப்பு... மினிமுகாம்கள் கைப்பற்றல் என போரின் பரிமாணம் மாறத்தொடங்கியிருந்தது. ஈழப்போர் இரண்டாம் கட்டத்திற்குத் தாவியிருந்த அதேநேரம்;; இயக்கம் வளப்பற்றாக் குறைகள்... ஆளணிப் பிரச்சினைகளென இல்லாமைகளோடு மோதியபடி தான் முன்னேறியது.


ஆயினும்;; நம்பிக்கையை முதலீடாக்கி; கொஞ்ச நஞ்சமாக இருந்த ஆயுத இருப்பைத் துணையாகக்; கொண்டு; பல சிங்களப் படைத் தளங்களை புலிவீரர்கள்; ஒவ்வொன்றாக வீழ்த்தத் தொடங்கினர்.

முல்லைத்தீவில்... நீண்ட நெடுநாட்களாக ஒரு இராணுவ முகாமை நிறுவி; அந்த மக்களின் அன்றாடச் சீவியத்தில்;; மண்ணள்ளிக் கொட்டினர் சிங்களப் படைகள். எப்படியும் இந்த இராணுவ முகாமை தாக்கியழிக்க வேண்டும்.

இயக்கம் முடிவெடுத்து... வேவு எடுத்து... சின்ன ஒத்திகை பார்த்து... முன்னேறித் தாக்கத் தொடங்கியபோது இல்லாத அந்த வளப் பற்றாக்குறைகள் இயக்கத்திற்கு நெருக்கடியைக் கொடுத்தது.

முகாமைச் சுற்றிவளைத்து வீழும் என்ற நம்பிக்கையோடு போராளிகள் தாக்கிய போதும்;; அது கைநழுவிப் போனது.

முகாமில் குந்தியிருந்த சிங்களப் படைகள்;; தாம் பலமாக அமைத்து வைத்திருந்த காவலரண்களுக்குள்ளும்... காப்பகழிகளுக்குள்ளுமிருந்து கடுமையாகத் தாக்கினர். தாராளமாக வெடிபொருட்களைப் பயன்படுத்தி; பலமாகத் தாக்கினர்.

போதாததற்கு முள்ளிவாய்க்கால் பக்கமாக் கடல் வழியாகப் படைகளைத் தரையிறக்கம் செய்ய நிலைமை கைமீறிப்போனது.

முகாம் மீதான தாக்குதலுக்கே பற்றாக்குறை என்கிற நிலையில்தான் வெடிபொருட்கள் இருந்தன. இந்த நிலையில்; தரையிறக்கப்பட்டிருக்கும் படைகளுக்கு எதிரான சண்டைக்குத் தேவையான வெடிபொருட்களுக்கு; எங்கே போவது?

இருந்த பலமும்; வந்த பலமும் ஒன்றுசேர திரண்ட பலத்தோடு; உக்கிரமாக மோதத் தொடங்கினான்;; எதிரி.

இந்தளவுக்கும்; தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போராளிகளின் பல அணிகள் தளத்தின் முற்றத்திற்குள்; கடுமையாக மோதிக் கொண்டிருந்தன.

இந்த நிலையில்; தரையிறக்கப்பட்ட சிங்களப் படைகள்;; தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போராளிகளைச் சுற்றிவளைத்துவிட்ட நிலையில்; அணிகளைப் பின்னிழுக்க வேண்டியதாயிற்று.

ஆனால்; முகாமின் மையப்பகுதியில் மேஜர் றொபேட் தலைமையிலான அணியொன்று தாக்குதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது அந்த அணி தாக்குதலை நிறுத்தி வெளியேற முயல்கையில்; அவர்களை தனது இறுக்கமான முற்றுகைக்குள்; வளைத்துவிட்டான் தமது முகாமைத் தாக்க வந்த புலியணியொன்றை சுற்றிவளைத்துவிட்ட மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தன சிங்களப் படைகள்.

மீளமுடியாத நெருக்கடிக்குள்; அணி திணறியது. உள்ளே நிற்பவர்கள் வெளியில் வரவேண்டுமானால் வெளியிலுள்ளவர்களின் உதவி தேவை. உள்ளே இருப்பவர்களால்; முற்றுகையை உடைக்க முடியாத நிலை.

அப்படியாயின் முற்றுகையை உடைக்க யாரால் முடியும்...? தொலைத்தொடர்புக் கருவி; நம்பிக்கையோடு அழைத்தது. லீமா... லீமா...
லீமா...லீமா... ரொபேட்.
அழைத்த ரொபேட்டின் குரலுக்கு தளபதி பால்ராச் குரல் கொடுத்தார்.

'அப்படியே சண்டை பிடிச்சுக் கொண்டிருங்கோ இப்ப வாறன்..." சொன்னதோடு நிற்கவில்லை அந்தத் தளபதி. நெருப்பு மழையில் நீந்தி; முன்னேறி; நெருக்கடிக்குள்ளாகிய அணியோடு சேர்ந்தபோது உடைந்து நொருங்கியது எதிரியின் முற்றுகை.

ஓய்வறியாத் தளபதி..!

பூநகரிப் படைத்தளம் மீதான தாக்குதல். புலிகள் இயக்கத்தின் அனைத்துப் படையணிகளும் ஒன்றிணைக்கப்பட்டு; கடும் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டன.

போராளிகள்-தளபதிகள்-பொறுப்பாளர்கள் என எல்லோரும் ஒரு சேர உழைத்தனர். இரண்டாம் கட்ட ஈழப்போரில்; புலிகள் இயக்கம் மேற்கொள்ளும்; பாரிய படை நடவடிக்கை. ஆகாய கடல்வெளி படை நடவடிக்கையின் பின்னர்; புலிகள் இயக்கத்தின் அனைத்து படையணிகளும்; பங்கு கொள்ளப்போகும் ஒரு நடவடிக்கை பெரியளவில் மேற்கொள்ளப்படும் ஒரு ஈரூடகத்தாக்குதல்.

தளபதி பால்ராச் உட்பட அனைத்து தளபதிகளும், போராளிகளும் தளம் மீதான தாக்குதலுக்கான பயிற்சிகளிலும்; ஒழுங்குபடுத்தல்களிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்க முந்திவிட்ட எதிரி ~யாழ்தேவி படை நடவடிக்கையை ஆரம்பித்து விட்டான்.

ஆனையிறவிலிருந்து - கிளாலி நோக்கி எதிரியின் முன்னகர்வு யாழ்தேவி வேகமெடுக்க முதல் அதன் பயணப்பாதையிலேயே தடம்புரளச் முன்பு செய்ய வேண்டும். அதுவும் பூநகரி படைத்தளம் மீதான தாக்குதல் ஏற்பாடுகளுக்கு எந்தப் பழுதும் ஏற்படாத வகையில்; யாழ்தேவியை தடம்புரளச் செய்யவேண்டும்.
தலைவர் தளபதி பால்ராச் தலைமையில் படையணிகளை; யாழ்தேவி களத்திற்கு அனுப்பி வைத்தார்.

படையணிகள் களத்திற்கு விரைய ~யாழ்தேவி படை நடவடிக்கையை வழிநடத்திக் கொண்டிருந்த சிங்களத்தின் தளபதிகளுக்கு பிடித்தது ~அட்டமத்து சனியன் தளபதி பால்ராச் அவர்களும்- தளபதி தீபன் அவர்களும் களச்சூழலுக்கு ஏற்ப ஒரு அதிரடி நடவடிக்கையை திட்டமிட்டனர்.

பரந்து கிடந்த அந்த மணற்பாங்கான பகுதியில்; மணலைக் கிளறிப் போராளிகளை உள்ளே புதைத்த வேகமாக முன்னேறி வரும் பகைவன் நெருங்கி வந்தவுடன்; மண்ணுக்குள்ளிருந்து கிளர்ந்தெழுந்து புயலெனத் தாக்க எதிரி ஆடிப்போனான்.

சண்டை வெகு கலாதியாக சூடுபிடிக்க எப்போதும் போல் கட்டளைப் பீடத்துள்ளிருந்து வழிநடத்தவேண்டிய தளபதி பால்ராச்; சண்டை தொடங்கிய வேகத்தோடு; போராளிகளோடு போராளிகளாக களத்தில் குதித்து விட டாங்கியிலிருந்து எதிரி ஏவிய ஒரு குண்டு வீழ்ந்து வெடித்ததில்; தளபதி பால்ராச் விழுப்புண்ணடைந்து மருத்துவமனையில் கிடக்க வேண்டியதாயிற்று.


எவ்வேளையிலும் களத்தில் சுழன்றாட வேண்டும் என்ற எண்ணம் தளபதி பால்ராச்சிற்கு நோய்ப்படுக்கையில் கிடப்பதென்பது மரண வேதனையாக இருந்தது. அதிலும் பூநகரி தளம் மீதான நடவடிக்கைக்கான தயார்ப்படுத்தல்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில்; ஓய்வாகக் கிடப்பதென்பது கடினமாக இருந்தது.

களத்தின் நினைவுகளோடு; படுக்கையில் தளபதி பால்ராச் இருந்த ஒருநாள் பூநகரி தளம் மீதான தவளை நடவடிக்கையை ஆரம்பித்தார் தலைவர்;. போராளிகள் கடலாலும் - தரையாலும் உள்நுளைந்து தளத்தை வீழ்த்த மோதிக் கொண்டிருந்தனர். சண்டையின் போது பல இடங்களில் தடைகள் உடைந்தும்- உடையாமலும் உக்கிரமான சண்டை நடந்து கொண்டிருந்தது. நிலையில்; தொலைத் தொடர்புக்கருவியில் இடையிடையே தளபதி பால்ராச் அவர்களின் குரலும் வந்து... வந்து போனது.

வைத்தியசாலையில் படுக்கையில் கிடக்கும் தளபதி பால்ராச்; எங்ஙனம் தொலைத் தொடர்புக்கருவியில் உரையாட முடியும்; வைத்தியசாலையில் தொலைத்தொடர்புக் கருவி இல்லையே. கேள்விகள் குழப்பத்தைத் தந்தன. தவளை நடவடிக்கையின் மையக்கட்டளைப் பீடத்தில்; நிலைமைகளை அவதானித்துக் கொண்டிருந்த தலைவர்; உசாரானார்.

தளபதி பால்ராச் வைத்தியசாலையில் இரகசியமாக ஏற்படுத்திக்கொண்ட தொலைத்தொடர்புக் கருவியினூடாகவே உரையாடுகின்றார்; என்பதைப் புரிந்துகொண்டு; உடனடியாகவே ஒரு போராளியை அங்கு அனுப்பி; தாக்குதல் தொடர்பான களநிலைமையை உடனுக்குடன் தெரியப்படுத்த தான் ஏற்பாடு செய்யலாம் என்றும்; வைத்தியசாலையிலிருந்து கொண்டு தொடர்புக்கருவியில் உரையாடுவது பாதுகாப்பு இல்லையெனவும் கூறித்தான்; அந்த ஓய்வறியாத் தளபதியை ஓய்வெடுக்கச் செய்யவேண்டியிருந்தது.

சிறீ. இந்திரகுமார்

பிரிகேடியர் தீபன்

கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன்.இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணி தான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன்.

தென்மராட்சிப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளராக விளங்கிய மேஜர் கேடில்ஸின்(மகாலிங்கம் திலீபன் - கண்டாவளை) இளைய மச்சினனாகிய தீபனை இயக்கத்தில் சேர்த்தது கேடில்ஸ் என்று கூறப்படுகிறது.

தீபனை இயக்கத்தில் சேர்த்த மேஜர் கேடில்ஸ் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான்,விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு,லெப்.சித்தார்த்தன்(கேணல் சங்கரின் சகோதரன்) ஆகியோர் வீரச்சாவடைய காரணமாகவிருந்த‌ 14-02-1987 அன்று கைதடியிலே இடம்பெற்ற‌ வெடி விபத்தில் தானும் காற்றோடு காற்றாகிப் போனார்.



1984 ன் முற்பகுதியில் தன்னை இயக்கத்தில் இணைத்துக்கொண்ட‌ பகீரதகுமார், ஆயுதப் பயிற்சி பெற்று தீபனாக மாறினார், இவருடைய தொடர்பாடல் குறிப்புப் பெயர் "தாங்கோ பாப்பா" ஆகும்.

இவர் புலிகளின் முன்னாள் துணைத்தலைவர் மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலராக நியமிக்கப்பட்டு பின்னர் பிரதான மெய்ப்பாது காப்பாளரானார்.

1987 ம் ஆண்டு யூலை 29 ம் திகதி இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின் இந்திய அமைதிப்படைக்கு எதிரான‌ அக்காலப்பகுதி சண்டையில், தீபன் கிளிநொச்சி இராணுவ பொறுப்பாளராகவும், பால்ராஜ் முல்லைத்தீவின் இராணுவ பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

அக்காலத்தில் இந்தியப்படையினருக்கெதிரான அதிக தாக்குதல்கள் நடைபெற்ற மாவட்டங்கள் முல்லைத்தீவும் கிளிநொச்சியுமே ஆகும்.
இக்காலப்பகுதியில் தீபனின் இளைய சகோதரனாகிய வேலாயுதபிள்ளை சிவகுமாரும் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தனது சகோதரனைப்போலவே வேகமாக வளர்ந்த கில்மன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1993ல் திருகோணமலைக்குப் பொறுப்பாளராக அனுப்பப்பட்ட கில்மன் 1994ல் நடைபெற்ற தவறுதலான வெடிவிபத்தில் லெப்.கேணல் கில்மனாக தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார்.

1988ம் ஆண்டின் பிற்பகுதியில் மன்னார் நீங்கலான வன்னிப்பகுதியின் இராணுவப் பொறுப்பாளராக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். துணை இராணுவப் பொறுப்பாளராக தீபன் இருந்தார். இந்த இரண்டு வீரர்களும் தமது போராளிகளை முன்னின்று வழி நடத்தி பல வெற்றிச் சமர்களுக்கு வித்திட்டார்கள்.

இந்திய அமைதிப்படை 1990ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஈழத்தை விட்டு அகன்றது. மீண்டும் ஜூன் மாதமளவில் இலங்கைப் படைகளுடனான 2ம் ஈழப்போர் ஆரம்பமானது. பால்ராஜின் தலைமையின் கீழ் புலிகள் பல வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டார்கள், அவற்றில் பிரதானமானவை மாங்குளம் மற்றும் கொக்காவில் முகாம் தகர்ப்பாகும்.

பால்ராஜும் தீபனும் 1991ல் மேற்கொள்ளப்பட்ட‌ ஆனையிறவு முகாம் மீதான ஆகாய கடல் வெளிச்சமரில் பங்கு பற்றி குறிப்பிடத்தக்களவான வெற்றியைப் பெற்ற போதும் முகாம் தகர்ப்பு என்ற இலக்கு எட்டப்படவில்லை.

1992ல் உருவாக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். தீபன் வன்னிப்பகுதியின் தளபதியானார். இவர்களின் இணை மண்கின்டிமலை மீதான இதயபூமி நடவடிக்கையில் பங்கு பற்றி புலிகளுக்கு மகத்தான வெற்றியை தேடித்தந்தது.

தீபனின் திறமையும் வீரமும் வெளிப்பட்ட இரு சமர்கள் யாழ்தேவி மற்றும் தவளைப்பாச்சல் ஆகும். ஆனையிறவிலிருந்து வடக்காக‌ யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட யாழ்தேவியை இடை நடுவில் தடம்புறள வைத்த பெருமை தீபனையே சாரும். 1993 செப்டெம்பரில் இடம்பெற்ற இந்த இராணுவ நடவடிக்கையின் முதல் நாள் சண்டையிலேயே பால்ராஜ் காயம் காரணமாக களத்திலிருந்து அகற்றப்பட்டார். அதன் பின்னர் தீபனே முறியடிப்புச்சமருக்குத்தலைமை தாங்கினார்.



தீபனின் தந்திரத்தின்படி மண் கும்பிகளுக்குள் மணித்தியாலக்கணக்காக காத்திருந்த புலிகள் முன்னேறிய‌ இராணுவம் மிக அருகில் வந்ததும் திடீர்த் தாக்குதலைத்தொடுத்து அவர்களை நிலை குலைய செய்ததுடன் புலிகள் இரண்டு ரி‍ 55 டாங்கிகளை கைப்பற்றுவதற்கு வழி சமைத்துக்கொடுத்தது.

இந்த‌ இரண்டு ரி‍ 55 டாங்கிகளில் ஒன்றை மண்ணுக்குள் புதைத்து பயன்படுத்தியே இரண்டு டோரா பீரங்கிப் படகுகளை சாலைப்பகுதியில் ஒரே நாளில் புலிகள் தகர்த்து சாதனை புரிந்தனர்.

1993 நவம்பரில் நடைபெற்ற ஈருடகச் சமரான தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் பூநகரி முகாமை தீபன் தலைமையிலான போராளிகளும் நாகதேவன்துறை கடற்படைத்தளத்தை பானு தலைமையிலான போராளிகளும் தகர்த்தனர். இங்கே கைப்பற்றப்பட்ட 5 நீருந்து விசைப்படகுகளே கடற்புலிகள் தோற்றம் பெற்று பலம் பெற உறுதுணையாக இருந்தது என்றால் மிகையாகா.

1994ல் தீபன் யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டார். அக்காலப் பகுதியில் சந்திரிகா அம்மையார் தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் பேச்சு வார்த்தை நடந்தது. 1995ல் முறிவடைந்த பேச்சு வார்த்தை 3ம் ஈழப்போருக்கு வழி சமைத்தது.



1995ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவத்தினரின் முன்னேறிப் பாய்தலுக்கெதிரான புலிப்பாய்ச்சலிலும் இடிமுழக்கம் நடவடிக்கைக்கெதிரான சண்டையிலும் தன் காத்திரமான பங்களிப்பை வழங்கினார்.

சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையை ஆரம்பத்தில் பால்ராஜ் சொர்ணம் தலைமையிலும் பின்னர் தீபன் பானு தலைமையிலும் புலிகள் எதிர்த்துப் போரிட்டனர். தீபன் தலைமையிலான போராளிகள் நவம்பர் 27 மாவீரர் நாள் முடியும் வரை யாழ்ப்பாணம் படையினர் கைகளில் வீழ்வதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர்.

யாழ்ப்பாணத்தை விட்டு 1996 ஏப்ரல்‍ மே காலப்பகுதியில் வெளியேறிய புலிகள் வன்னியை தளமாக்க முடிவு செய்தபோது அதற்குப் பெருந்தடையாக இருந்தது முல்லைத்தீவு இராணுவ முகாம் ஆகும். அம்முகாமை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் புலிகள். தீபனை அழைத்த தலைவர் முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான ரெக்கியை ஆரம்பவிக்கவும் தாக்குதல் திட்டத்தை தீட்டவும் உத்தரவிட்டார்.
தீபனின் திறமையான திட்டத்தினால் 1996 ஜூலை 18ல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்க்கப்பட்டபோது 1000க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இங்கே கைப்பற்றப்பட்ட இரண்டு 122mm ஆட்லறி பீரங்கிகளே பின்னாளில் புலிகள் மரபு ரீதியாக தமது இராணுவத்தைக் கட்டமைக்க உதவின.

ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை 1997ல் ஆரம்பிக்கப்பட்டபோது புளியங்குளத்தை தக்கவைக்கும் பொறுப்பு தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓமந்தையையும் நெடுங்கேணியையும் இலகுவாக கைப்பற்றிய இராணுவம் புளியங்குளத்தை கைப்பற்ற முடியாமல் மாற்றுப்பாதையில் கனகராயன்குளத்தையும் கரிப்பட்டமுறிப்பையும் கைப்பற்றியபோது புளியங்குளம் கைவிடப்படவேண்டியிருந்தது.

இதன்போது தீபனின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாக விக்கீஸ், அறிவு மற்றும் லோரன்ஸ் விளங்கினார்கள்.இந்தக்கூட்டணியின் கண்டு பிடிப்பான மண் அணைக்கட்டும் அகழியுமே இலங்கை இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்பது யாவரும் அறிந்ததே.

இன்றைய தேச நிர்மாணம் மற்றும் கட்டமைப்பு அமைச்சராக இருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரன் என்கின்ற கேணல் கருணா அம்மான் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை காலத்தில் தானே வன்னிப்பகுதியின் கட்டளைத்தளபதியாக நியமிக்கப்பட்டேன் என்று கூறி வருகிறார். ஆனால் அவர் தீபனுடன் இணைந்தே இந்தப் பொறுப்பை வகித்தார் என்பதும் இவர் தொடர்பாடல் மற்றும் ஒருங்கிணைப்பு வேலைகளை கவனித்தபோது ஒட்டுமொத்த பொறுப்பாளராக இருந்தவர் தீபன் என்பதையும் குறிப்பிடத்தவறிவிட்டார்.

1998ல் ஜெயசிக்குரு கைவிடப்பட முக்கிய காரணமாக இருந்தது, சத்ஜெய நடவடிக்கையின் மூலம் படையினர் கைப்பற்றி வைத்திருந்த கிளிநொச்சியை ஓயாத அலைகள்‍ 2ன் மூலம் புலிகள் மீளக்கைப்பற்றிக்கொண்டதே. இத்தாக்குதலிலும் தீபனின் பங்களிப்பு மிகக்காத்திரமானதாகும்.



1999ல் புலிகள் ஓயாத அலைகள் 3ஐ ஆரம்பித்து படையினர் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கையின் மூலம் 18 மாதங்கள் கஷ்டப்பட்டு பிடித்து வைத்திருந்த பகுதிகளை வெறும் மூன்றே வாரங்களில் மீளக்கைப்பற்றிக்கொண்டனர்.

ஓயாத அலைகள் 3ன் முத்தாய்ப்பாக அமைந்தது ஆனையிறவு முகாம் கைப்பற்றலாகும். 1991 ல் ஆகாய கடல் வெளிச் சமரில் பெற்ற பின்னடைவும் படிப்பினைகளும் பின்னாளில் உலகமே வியக்கும் வண்ணம் இடம்பெற்ற குடாரப்புத் தரையிறக்கத்துக்கு வழி சமைத்தது எனலாம்.

இத்திட்டத்தை தலைவர் சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜுக்கு விளக்கியபோது சற்றுத்தயங்கினாராம் பால்ராஜ். பின்னர் தீபன் செய்ய வேண்டிய கடமைகளை விளக்கியபின்பு தீபன் மீதிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை காரணமாக களத்தில் இறங்கினாராம் பால்ராஜ்.
குடாரப்புத் தரையிறக்கம் இடம்பெற்றபின் செம்பியன்பற்றிலிருந்து வெற்றிலைக்கேணி கட்டைக்காடு வரை நிலை கொண்டிருந்த படையினரை விரட்டி அடித்தும் ஆனையிறவு முகாமை பின் பக்கமாக தாக்கியும் ஆனையிறவு முகாம் கைப்பற்றலில் முக்கிய பங்காற்றினார் தீபன்.

2000 ஏப்ரல் 24 ல் இடம்பெற்ற ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கிலான படையினரின் தீச்சுவாலை(அக்னிகீல) நடவடிக்கையை சின்னாபின்னமாக்கியது தொட்டு 2009 ஜனவரி வரை 55ம் மற்றும் 53ம் படையனியின் ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எத்தனையோ முயற்சிகளை தவிடு பொடியாக்கியவர் வட போர்முனைக் கட்டளைத்தளபதி தீபன்.


அதே போன்று கிளிநொச்சியை சுற்றி 18km நீளமான 'L' வடிவிலான மண் அணைக்கட்டு அமைத்து கிளிநொச்சியின் வீழ்ச்சியை பல மாதங்கள்(2009 ஜனவரி 1 வரை) தள்ளிப்போட்டவர் தீபன்.

கடைசியாக புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் ஏப்ரல் 1ம் திகதி பல படையணித்தளபதிகளுடன் சேர்ந்து படையினருக்கெதிராக பாரிய முறியடிப்புச் சமர் ஒன்றைத் திட்டமிட்டார் தீபன். ஆனால் காலன் வேறு விதமாக திட்டமிட்டான் போலும். ஏப்ரல் 1ம் திகதி அன்றும் 2ம் திகதி அன்றும் தீபனுக்கு நெஞ்சிலே காயம் பட்டது.ஆனாலும் தொடர்ந்து போராடிய தீபன் எதிரியின் நயவஞ்சகமான நச்சுக்குண்டுத்தாக்குதலில் வீரகாவியமானார்.

25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் ஏப்ரல் மாதம் 4ம் திகதி புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது.

சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜ் என்றால் எந்தவித சந்தேகங்களும் இன்றி சமர்க்களங்களின் துணை நாயகன் இந்த தீபன் அம்மான் தான். பால்ராஜ் எனும் பாசறையிலே வளர்த்தெடுக்க‌ப்பட்ட இந்த கண்டாவளை கண்டெடுத்த கண்மனி, பால்ராஜ் மே 2008ல் மறைந்தபோது அழுதபடியே சொன்ன வார்த்தைகள் இவை "என்னை அருகிலே வைத்திருந்து தளபதியாக வளர்த்தெடுத்த தளபதி, அவர் என் போர் ஆசான்."


தமிழனை தலை நிமிர வைத்த இந்த இரண்டு வீரர்களும் இன்று நம்மிடையே இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர்களின் நினைவுகள் எம்மனங்களில் நீங்காதிருக்கும் என்பதும்.

-சாணக்கியன்-


பிரிகேடியர் கடாபி/ ஆதவன்

சாதாரண போராளியாக இயக்கத்தில் தனது பணிகளைத் தொடங்கிய இத்தளபதி, தனக்கான தகைமைகளை வளர்த்துக்கொண்டு ஓர் உயரிய இராணுவத் தளபதியாக எப்படி உருவானார்? அல்லது எப்படி உருவாக்கப்பட்டார்? தலைவரின் நேரடிக் கண்காணிப்பின் கீழேயே அவரது போராட்டப் பணிகள் ஆரம்பகாலம் தொடக்கம் இருந்ததுவே அதற்கான காரணமாகவிருக்கக் கூடும்.

வாகனக் கண்ணாடியில் பார்த்தே வானில் பறக்கும் பறவைகளைக் குறிபார்த்துச்சுட்டுவிடும் திறமை அவருக்கு இருந்ததாக நான் நண்பர்கள் மூலம் அறிந்திருந்தேன். உண்மையோ பொய்யோ, ஆனால் நிச்சயம் அவர் அதற்கு முயற்சி செய்திருப்பார்.

‘முன்னேறிப் பாய்தல்’ என்ற பெயரில் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைக்கெதிராக புலிகள் நடத்திய ‘புலிப்பாய்ச்சல்’ நடவடிக்கையைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் படைக்கட்டுமானத்தில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. அதுவரை இம்ரான்-பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்த மூத்த தளபதி சொர்ணம் அவர்கள் கூட்டுப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

அப்போது இம்ரான்-பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாக கடாபி அண்ணை நியமிக்கப்பட்டார். 1995 ஆம் ஆண்டு யூலை மாதத்திலிருந்து 2002 தொடக்கம் வரை – அதாவது விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசபடைகளுக்குமிடையில் யுத்தநிறுத்தம் ஏற்பட்டது வரை – கடாபி என அழைக்கப்படும் ஆதவன் அண்ணை தான் இம்ரான்-பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாகப் பணியாற்றினார். உண்மையில் இம்ரான்-பாண்டியன் படையணியென்பது பல சிறப்பு அணிகளின் கூட்டமைப்பாகவே இருந்தது. கடாபி அண்ணா பல சிறப்பு அணிகளை அப்படையணியின் கீழ் உருவாக்கி விடுதலைப் பயணத்தில் பல்வேறு சாதனைகளை ஏற்படுத்தியிருந்தார்.

கரும்புலிகள் அணி, லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி, மயூரன் பதுங்கிச்சுடும் அணி, செம்பியன் வேவு அணி, கேணல் சங்கர் ஆழ ஊடுருவித் தாக்கும் அணி, லெப்.கேணல் ராதா வான்காப்பு அணி, விடுதலைப் புலிகளின் கவசப் படையணி போன்ற சிறப்புப் படையணிகளையும் படையப்பயிற்சிக் கல்லூரிகள் போன்ற படைக்கட்டுமானங்களையும் தலைவரின் எண்ணங்களுக்கு ஏற்ப உருவாக்கி, வளர்த்து வழிநடத்தியதில் கடாபி அண்ணையின் தலைமைத்துவப் பண்பின் சிறப்புக்களைக் காணக்கூடியதாகவிருந்தது.

இப்பணிகளுக்கு மேலதிகமாக தலைவரின் பாதுகாப்பு சார்ந்த பணிகளையும் நேரடியாகக் கண்காணித்துவந்த கடாபி அண்ணை இருபத்தி நான்கு மணிநேரமும் விடுதலைப் பணிக்காகவே ஓயாது இயங்கிக் கொண்டிருந்தார்.

ஒரு பயிற்சிப் பணியாகவிருந்தாலும் சரி, அல்லது ஒரு வேவுப் பணியாகவிருந்தாலும் சரி, அல்லது ஒரு தாக்குதல் பணியாகவிருந்தாலும் சரி, நேரம் எடுத்து திட்டமிடலுக்கே, கூடிய நேரத்தை ஒதுக்கி, ஒவ்வொரு பணியையும் நிறைவேற்றும் பாங்கு கடாபி அண்ணையின் குறிப்பிடவேண்டிய விடயமாகும்.

பயிற்சித்திட்டமிடல் பற்றிக் குறிப்பிடவேண்டும் என்றால் ஒரு காலத்தில் குறிப்பிட்ட பயிற்சிக்கு மூன்று மாதங்கள் என திட்டமிடப்பட்டிருக்கும். ஆனால் எதிரியின் தாக்குதல் நடவடிக்கைகள் அதிகரிக்கும்போது இப்பயிற்சிக்காலத்தைக் குறுக்கவேண்டிவரும். அப்போதுகூட குறுகிய காலப் பயிற்சிதிட்டமிடல் ஒன்றை தயார் செய்துவிட்டே பயிற்சிகள் வழங்கப்படவேண்டும் என்பதில் கவனமாகவிருப்பார்.

அதேபோல தாக்குதல் நடவடிக்கை ஒன்றை பூர்த்தி செய்தாலும், அத்தாக்குதலின் வெற்றி தோல்வி என்பதைவிட அத்தாக்குதல் தொடர்பான விபரங்களை ஆவணப்படுத்துமாறே தாக்குதலணி பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள். அத்தாக்குதல் வெற்றியடைந்ததற்கான காரணங்கள் அல்லது தோல்வியடைந்ததற்கான காரணங்கள், எதிர்காலத்தில் என்ன விடயங்கள் மேம்படுத்தப்படலாம் என்பன போன்ற விபரங்களை உள்ளடக்கியதாக அவ்ஆவணங்கள் தயாரிக்கப்படும்.

இவ்வாறு பெறப்படும் ஆவணங்கள் பயிற்சி ஆசிரியர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். அதற்கேற்ற திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் பயிற்சிகளில் செய்யப்படும். இவ்வாறு இறுக்கமான காலகட்டங்களின்போதும் மரபு வழி இராணுவங்களுக்கு ஒப்பான திட்டமிடல்களையும் செயற்பாடுகளையும் பேணிவருவதில் கவனம் எடுத்துவந்தவர்தான் கடாபி அண்ணை.

பலாலி விமானத்தளம் மீதான தாக்குதல் நடவடிக்கை ஒன்றைப் பற்றிய அறிக்கை தயாரிக்கப்பட வேண்டியிருந்தது. அந்தத் தாக்குதலில் பங்குகொண்டவர்களின் அறிக்கைகள், ஒலிப்பதிவு செய்யப்பட்ட தொலைத்தொடர்பு உரையாடல்கள் என்பவற்றை கொண்டு விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த அறிக்கையின் ஒரு பகுதி இவ்வாறு இருந்தது. ”அ என்பவர் லோ ஆயுதத்தால் சிறிலங்கா இராணுவத்தினர் வந்துகொண்டிருந்த கவசவாகனத்தின் மீது தாக்குதல் நடத்த அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது”. அதனைத் திருத்தம் செய்த கடாபி அண்ணை சொன்னார். ”அ என்பவர் லோ ஆயுதத்தால் சிறிலங்கா இராணுவத்தினர் வந்துகொண்டிருந்த கவசவாகனத்தின் மீது தாக்குதல் நடத்த அது கவசவாகனத்தில் பட்டு அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது” என்று தெளிவாக எழுதப்படவேண்டும் என்று சொன்னார். இப்படியான துல்லியமான தரவுகள் இணைக்கப்படுவதே விசாரணைகள் முழுமைபெற உதவுமென்பது அவரின் இறுக்கமான நிலைப்பாடாகவிருந்தது.

மேற்குறிப்பிட்ட சம்பவம் ஒரு சிறிய விடயம்தான். ஆனால் அந்த சிறிய விடயத்திற்குள் புதைந்திருக்கும் ஆழமான இராணுவசார் முக்கியத்துவம் என்பது சாதாரண பொதுமகனுக்குப் புரியக்கூடியதன்று. ஆனால் அவற்றின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளமுடியும். இவ்வாறு ஒவ்வொரு விடயத்திலும் முக்கியத்துவம் கொடுத்து அவற்றை நிறைவுசெய்வதில் கவனமாகவிருப்பார்.

கடாபி அண்ணையைப் பொறுத்தவரையில் தாக்குதல்களோடு சம்பந்தப்பட்ட தாக்குதலணிகளை மட்டுமன்றி பயிற்சிகள், விசாரணைகள், புலனாய்வு போன்ற நிர்வாக ரீதியிலான அணிகளையும் நிர்வகிக்கவேண்டிய பொறுப்பிலேதான் இருந்தார். ஒரு சாதாரண மரபுவழி இராணுவத்தில் உள்ள போர்வீரர்களுக்கு சண்டைக்கான மனநிலையைப் பேணுவதற்கான அறிவூட்டல்கள் செய்யவேண்டியிருக்கும். ஆனால் போராளிகளைப் பொறுத்தவரையில் அதற்கான அவசியம் இல்லை. அதேவேளையில் நிர்வாக ரீதியிலான அணிகளிலுள்ள போராளிகள் குறிப்பிட்ட சில காலங்களுக்குப் பின்னர் தாங்களும் சண்டைக்குச் செல்லவேண்டும் எனக் கேட்டு கடிதம் அனுப்புவார்கள் அல்லது நேரில் சந்தித்துக் கேட்பார்கள்.

நிர்வாக வேலைத்திட்டங்களிலுள்ள போராளிகளை, குறிப்பிட்ட சில வேலைத்திட்டங்களின் முக்கியத்துவம் கருதி, அவர்களை உடனடியான இன்னொருவரைக் கொண்டு மாற்றீடு செய்வது என்பது கடினமாகவிருக்கும். அவர்களுக்கு பல்வேறு உதாரணங்களை எடுத்துகாட்டி, சண்டையைப் போலவே மற்றைய பணிகளும் முக்கியமானதென பொறுமையாக அறிவுறுத்தி, தொடர்ந்தும் அவர்களை அப்பணியின் முக்கியத்துவம் கருதி வேலையில் மீண்டும் அமர்த்திவிடுவார். இவ்வாறு வெவ்வேறு பணிகளிலுள்ள போராளிகளை, ஒரே படையணியின் கீழ் நிர்வகித்து தனது திறமையின் மூலம் வழிநடத்திவந்தார் என்றே சொல்லவேண்டும்.


இவரது தாக்குதல் நடவடிக்கைகளை பொறுத்தவரை சிறப்பு இராணுவ நடவடிக்கைகளிலேதான் இவர் நேரடியாக பங்குபற்றியிருப்பார் என்றே எண்ணுகின்றேன்.

குறிப்பாக 1995 ஆம் ஆண்டில் பலாலி விமானதளத்திற்கு அருகே இரண்டு அவ்ரோ விமானங்களை சுட்டுவீழ்த்தியிருந்தார். கடாபி அண்ணையின் குறிபார்த்துசுடும் திறமையை தலைவர் அவர்கள் ஏற்கனவே இனங்கண்டிருந்ததால், அதற்கான பணி, தலைவர் அவர்களால் இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. விமான எதிர்ப்பு ஏவுகணை மூலம் அவ்விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய இராணுவ காலப்பகுதியில் தலைவரின் பாதுகாப்பு அணி வீரனாக இருந்த கடாபி அண்ணை, படிப்படியாக பல்வேறு கடமைகளை தலைவரின் நேரடி கண்காணிப்பின் கீழ் செய்துவந்தார். தமிழீழ தாயகத்திலிருந்த இராணுவதளங்கள் மீதான பெரும்பாலான கரும்புலி நடவடிக்கைகள் அனைத்தும் இவரது வழிநடத்தலின் கீழேயே நடாத்தப்பட்டது. அத்துடன் ஆழ ஊடுருவி சென்று நடத்தும் பல தாக்குதல் நடவடிக்கைகளும், இவரது வழிகாட்டலில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பல்வேறு விடுதலைப்பணிகளை முன்னெடுத்துவந்த பிரிகேடியர் கடாபி அவர்கள் ஈழப்போரின் நான்காம் கட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆனந்தபுரம் பகுதியில் மார்ச் மாதத்தின் இறுதிபகுதியில் பெரும் இராணுவ நடவடிக்கை ஒன்றை எடுக்கவேண்டிய ஆயத்தப்பணிகளில் மற்றைய தளபதிகளுடன் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். எதிர்பாராத விதத்தில் எதிரிகளின் இராணுவ வலு பல மறைமுக சக்திகளின் ஒத்துழைப்போடு அதிகரித்த நிலையில், பெருமளவிலான இறுதிக்கட்ட முறியடிப்புத் தாக்குதல் ஒன்றைச் செய்வதற்கு அணிகள் தயாராகவிருந்தன. ஆனால் இவ்வாறான படைநடவடிக்கைக்கான ஆயத்தப்படுத்தலை அறிந்துகொண்ட எதிரிகள், விடுதலைப்புலிகள் தங்கியிருந்த ஆனந்தபுரம் பகுதி மீது, சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட வெடிபொருட்களைப் பயன்படுத்தி முற்றுகை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இறுதிவரை உறுதியோடு போரிட்ட கடாபி அண்ணை ஆனந்தபுரக் களத்தில் படுகாயமடைந்தார். அவரைக் காப்பாற்றி வெளியே கொண்டுவருவதற்காக முயற்சிகள் நடந்தபோதும், களத்தின் இறுக்கமான நிலையை உணர்ந்து, அக்களத்திலேயே சயனைற் உட்கொண்டு, தன்னோடு இணைந்து நின்ற பிரிகேடியர் தீபன் அண்ணை பிரிகேடியர் விதுசா அக்கா பிரிகேடியர் துர்க்கா அக்கா, பிரிகேடியர் மணிவண்ணன் ஆகியோருடன், இன்னும் பல வீரர்களுடன் ஆனந்தபுரம் மண்ணில் வித்தாகிபோனார்.

கரும்புலி லெப்.கேணல் பூட்டோ வீரவணக்கநாள் (11.08.2006)

இந்திய இராணுவமும் ஒட்டுக்குழுக்களும்சேர்ந்து தேசபக்தர்களை வேட்டையாடிக்கொண்டிருந்த காலம். மன்னார் மாவட்டத்தின் பாலக்குழிப் பிரதேசத்தில் யூலியனின் தந்தை இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். பாடசாலைக்குள் புகுந்த இராணுவத்தினர் யூலியனைக் காட்டித்தரும்படி துப்பாக்கி முனையில் அச்சுறுத்துகின்றனர். அன்று பாடசாலை செல்லாத யூலியன் தப்பித்துக்கொள்கிறான். உடனடியாக முஸ்லிம் குடும்ப நண்பர் ஒருவரின் உதவியுடன் மறைமுகமாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். அங்கிருக்கும் நகைக்கடையொன்றில் தற்காலிகமாகப் பணிக்கமர்த்தப்படுகின்றான். முதல்நாள் கடைக்குச் செல்கிறான். அங்கிருக்கும் கதிரையொன்றில் அமர்ந்திருக்கின்றான். அங்குவந்த முதலாளி
“கடைக்கு வேலைக்கு வந்தனி எப்படிக் கதிரையில் அமர்ந்திருக்கலாம்?”
என ஏசுகின்றார்.

“நான் எனது ஆசிரியர்களுக்கு மட்டும்தான் எழுந்து மரியாதை கொடுக்கிறனான்”
என கூறியவன் எவருடைய உதவியுமின்றி மீண்டும் தாயிடம் வந்து சேருகின்றான்.
“அம்மா இப்படி அடிமையாகச் சிறுமைப்படுவதிலும் பார்க்க நான் இயக்கத்திற்குப் போகப்போறன்”
என அனுமதி கேட்கின்றான். அன்னை மொனமாக இருக்கின்றாள். அங்கிருந்த உறவினர்கள் அழுகின்றார்கள்.


“நீங்கள் அழுதுகொண்டு இருக்கையில் நான் இயக்கத்திற்குப் போகமாட்டன். ஆனால் விரைவில் போயிருவன்” என்றவன் ஒருநாள் இயக்கத்தில் இணைந்துவிட்டான். உயிராபத்துக்களை உதாசினம் செய்து, போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மிகவும் ஆதரவான வீட்டிலிருந்து, இவன் இயக்கத்தில் இணைந்தது, முகாம் பொறுப்பாளரைச் சங்கடத்திற்கு உள்ளாக்கியது.
“நீ வீட்ட திரும்பிப் போ”
என கூறுகின்றார்.
“இல்ல நான் அம்மாவிட்ட சொல்லிப்போட்டுத்தான் வந்தனான்.”
என பதிலளிக்கின்றான். இதனை உறுதிப்படுத்த பொறுப்பாளர் தாயைச் சந்திக்கின்றார். மகனின் கூற்றை உண்மையாக்க விரும்பியவள்
“ஓம் என்னட்ட சொல்லிப்போட்டுத்தான் வெளிக்கிட்டவன்” எனக் கூறுகின்றாள்.

முழுமையான போராளியாக மணலாற்றுக் காட்டினுள் இவனது போராட்ட வாழ்க்கை பூட்டோ எனும் பெயருடன் தொடங்கியது.


காட்டு வாழ்க்கை, கடினப் பயிற்சிகள் கடந்து வேவுப்புலியாகப் பரிணமிக்கின்றான். காடுகளையும் எதிரிமுகாம்களையும், காவலரண்களையும் கால்களால் நடந்து அளந்து கணிக்கின்றான். ஒரு நாள் ஏழு பேர் கொண்ட வேவு அணியை வழிநடத்தியவாறு, னப்பாதுகாப்பு வலயத்தின் சுற்றயல்பகுதியை கண்காணித்துக் கொண்டு வருகின்றான். ஒரு இடத்தில் சூழலுக்குப் பொருத்தமற்ற முறையில் புற்கள் மடிந்திருப்பதை அவதானிக்கின்றான். எதிரி தமது பகுதிக்குள் புகுந்துவிட்டதாக கூறுகின்றான். மற்றவர்கள் அதனை மறுதலிக்கின்றனர்.

இவனோ அப்பகுதியில் அண்மையில் தான் புதைத்து வைத்த மிதிவெடியொன்றைத் தோண்டி எடுக்கின்றான். எதிரி மீண்டும் அப்பாதையைக் கடப்பானாயின் எங்கு பாதம் வைப்பான் என்பதைக் கணிக்கின்றான். அவ்விடத்தில் மிதிவெடியை வைத்து உருமறைத்து விடுகின்றான். தொடர்ந்து நகர்கின்றார்கள். சிறிது நேரத்தில் வெடிச்சத்தம் ஒன்று கேட்கின்றது. ஏனையவர்கள் காட்டு விலங்கு ஏதும் மிதிவெடியில் சிக்கியிருக்கும் என கருத்துத் தெரிவிக்கின்றனர். அதனை மறுதலித்தவன் அவர்களையும் அழைத்துக்கொண்டு அவ்விடம் திரும்புகின்றான்.

அங்கு இரத்தம் சொட்டியபடியே இராணுவப் பாதணியுடன் துண்டிக்கப்பட்ட கால் ஒன்று கிடக்கின்றது. பின்னர் வந்த நம்பகமான தகவல் மூலத்திலிருந்து தெரியவந்தது. இவர்களுடைய காட்டுமுகாமைச் சுற்றிவளைத்து தாக்கியழிப்பதற்காகத் தங்களது வேவு தகவல்களை இறுதியாக உறுதிசெய்ய வந்த இராணுவ அதிகாரி ஒருவர்தான் மிதிவெடியில் சிக்கியது என்பது. இவனது சமயோசிதச் செயற்பாட்டால் பல போராளிகளின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டது. இவ்வாறான பல பதிவிலுள்ள, பதிவில் இல்லாத நிகழ்வுகளின் ஊடாக இவன் ஒரு இராணுவ விற்பன்னனாக வருவதற்கான அறிகுறிகள் தென்படத்தொடங்கின. மணலாறு மாவட்டத்தில் நடாத்தப்பட்ட பல்வேறு முகாம் தாக்குதல்கள், பதுங்கித் தாக்குதல்கள் என்பனவற்றிற்கு வேவு எடுத்தும், அணிகளை வழிநடத்தியும் போராட்டத்திற்கான தன் பங்களிப்பை மேம்படுத்திக்கொண்டான். இக்கால கட்டத்தில் ஒரு சண்டையில் தனது இடதுகைப் பெருவிரலையும் இழந்திருந்தான்.

இயல்பாகவே இவனிடம் இருந்த சித்திரம் வரையும் ஆற்றலால் இவன் வரைபடப்பகுதிக்குள் உள்ளீர்க்கப்பட்டான். வேவுத்தகவல்களை வரைபடங்களாக்கி துல்லியமான விபரங்களைக் கொடுத்து பிரதம தளபதிகளின் தாக்குதல் திட்டமிடல்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தான். இயற்கையாகவே இவனிடம் இனிமையாகப் பாடும் திறனும், கவிதை யார்க்கும் வல்லமையும் கைகூடியிருந்தது. வனமுகாம்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்குகொண்டு கலையாற்றல்களை வெளிப்படுத்தி போராளிகளை மகிழ்விக்கவும் செய்தான்.

இயக்கத்தில் கலையரசன் எனும் பெயரையும் பெற்றான். சமகாலத்தில் போராயுதத் தளபாடங்களையும், நவீன இராணுவ உபகரணங்களையும் தன்னுடன் பழக்கப்படுத்தினான். அவற்றின் உச்ச பயன்பாட்டைப் பெறும்வகையில் தன்னை தகவமைத்துக் கொண்டான். தொடர்ந்து பூநகரி கொக்குத்தொடுவாய் இராணுவ முகாம்களின் வேவுகளை எடுத்து அவற்றின் மீதான தாக்குதல்களை உறுதிப்படுத்தினான். இப்பொழுது இவன் பல அணிகளை வழிநடத்தும் அணித்தலைமைப் பொறுப்பை வகிக்கத் தொடங்கியிருந்தான்.

சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை தொடர யாழ்நகரம் கைவிடப்பட, இவன் உள்நின்ற போராளிகளுடன் கலந்திருந்தான். இவனது போராவலைத் தீர்ப்பதற்கு நல்லசந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தது. ஒருமுறை நடவடிக்கையின் நிமிர்த்தம் பண்ணைக் கடலினூடு நீந்திக்கொண்டிருந்தான். அப்பொழுது அழற்சியை ஏற்படுத்தக்கூடிய, நச்சுக் கடற்தாவரம் ஒன்றினால் தாக்கப்பட்டிருந்தான். உடல் முழுவதும் தடித்து மூச்சு விடுவதையும் சிரமம் ஆக்கியது. ஒருவாறு சிரமப்பட்டு கரையொதுங்கியவன் ஒருவாரத்திற்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் களம் சென்றான்.

முல்லைத்தீவுச் சமர் தொடங்கிவிட்டது.
“பூட்டோ… பூட்டோ!”
என தொலைத் தொடர்பு சாதனத்தில் தளபதி பால்ராஜ் அழைப்பது கேட்கின்றது. ஈழத் தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் திருப்புமுனைத் தாக்குதல் அது. நாங்கள் வென்றே ஆகவேண்டும் சர்வதேசத்திற்கான தமிழீழத்தின் கடற்பாதை திறக்கப்பட்டே ஆகவேண்டும். முகாம் துடைத்தழிப்பை பூரணப்படுத்தப்பட வேண்டும். அதற்காக வேவில் வரைபடத்துறையில், தாக்குதல் அனுபவங்களில், நெருக்கடி நேரங்களில் சரியான முடிவெடுக்கும் வல்லமையைப் பலமுறை நிரூபித்திருந்த பூட்டோ களநிலை அவதானிப்பாளராகவும், டாங்கிக்கான ஒருங்கிணைப்பாளராகவும் களத்தினுள் இறக்கப்பட்டிருந்தான்.

இவனது செயற்பாட்டால் பகைமுகாம் வீழ்த்தும் முயற்சி துரிதப்படுத்தப்பட்டது. பெரும்பாலான முகாம் பகுதிகள் வீழ்ந்துவிட்டன. ஒரு கட்டடத்தினுள் பல இராணுவத்தினர் ஒளிந்திருந்து தாக்குதலைத் தொடுத்துக்கொண்டிருந்தனர். அவர்களைச் செயல் முடக்கம் செய்யவேண்டும். பூட்டோ டாங்கியைத் தாக்குதலுக்கு ஆயத்தம் செய்து அதன் மூலம் சில சூடுகளை வழங்க ஆணையிட்டான். பகைவன் பதுங்கியிருந்த கட்டடம் அப்படியே தகர்ந்து இறங்கியது. பெரும்பாலான இராணுவத்தினர் கொல்லப்பட்டு விட்டனர்.

தொடர்ந்து தாக்குதலை நடாத்தி வெற்றியை உறுதிப்படுத்தும்படி களமுனைத்தளபதி கட்டளையிட்டார். அவ்வாறு செய்ய முற்படுகையில் அவனது உள்ளுணர்வு அவனை எச்சரித்தது. மீண்டும் சூழலை அளவெடுக்கின்றான். மின்னல் என பொறி தட்டியது. டாங்கிக்குப் பக்கவாட்டாக இருக்கும் மண்ணரணில் இடைவெளி தென்பட்டது. எக்காரணம் கொண்டும் டாங்கி இழக்கப்பட முடியாத இயக்கத்தின் இராணுவச் சொத்து. டாங்கியை வேகமாகப் பின்னகர்த்தி பாதுகாப்பிடம் செல்ல உத்தரவிட்டான். டாங்கி சடுதியாகப் பின்னகரவும் குறித்த மண்ணரன் இடை வெளியூடு ஆர்பிஜி கணை ஒன்று எகிறி வந்து இலக்குத் தவறித் தாண்டிச் செல்லவும் சரியாக இருந்தது. கணநேர முடிவில் இயக்கத்தின் இராணுவப் பலங்களில் ஒன்றைப்பாதுகாத்து தொடர்ந்த பல வெற்றிகளுக்கு அடிப்படைக் காரணமாகின்றான்.

ஓயாத அலை 1 வெற்றியில் தமிழீழம் திளைத்திருந்தது. தமிழர்கள் தலைநிமிர்ந்து நடக்கத் தொடங்கினர். சிங்களம் தோல்விக்குச் சப்பைக்கட்டுக் கட்டிக்கொண்டிருந்தது. அவ்வேளை முல்லைத்தீவு முகாமில் எடுக்கப்பட்ட பொருட்களின் தவறான பிரயோகம் சம்பந்தமாக பூட்டோ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டான்.

அவனை அறிந்திருந்த அனைவருக்குமே விளங்கியிருந்தது. விசாரணை முடிவு அவனைக் குற்றமற்றவன் என நிரூபிக்கும் என. ஆனால் அதுவல்ல இங்கு முக்கியம், அர்பணிப்பும் செயற்திறனும் உள்ள அப்போராளிக்கு இச்செயல் மனவுடைவை ஏற்படுத்தலாம். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாகவே சம்பவங்கள் நடந்தேறின. விசாரணை முடிவு அவனைக் குற்றமற்றவன் என்றது. ஷதொடர்ந்து என்னசெய்யப் போகிறீர்கள்? விரும்பினால் தண்டனை இல்லாமல் வீட்ட போகலாம் என பொறுப்பாளர் தெரிவித்தார். மெலிதாகச் சிரித்தான். ‘நான் தொடர்ந்து இயக்கத்தில் இருக்கிறன்’ எனக்கூறினான்.

அப்பொழுது பொறுப்பாளர் அப்பசரி வரிப்புலி சீருடையைப் போடுங்கோ அண்ணை உங்களைச் சந்திக்க வரட்டாம். ‘நான் தவறு செய்யமாட்டன் என்பதைத் தலைவர் நம்பினார். இதுபோதும் சாகும்வரை இயக்கத்தில் இருந்து செயற்படுவதற்கு’ என தன்னுள் எண்ணியவன் தலைவரைச் சந்தித்தபின் தொடர்ந்து களப்பணியாற்றுகின்றான். பலமாதங்களுக்கு முன்னர் கரும்புலி அணியில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்துக் கடிதம் அனுப்பியிருந்தான். அதற்கான அனுமதி கிடைத்திருந்தது. ஆபத்துக்களை கடந்து செய்யப்படும் தனது கடின உழைப்பில் மனத்திருப்தி கிடைக்காதவன் கரும்புலியாகச் செயற்படுவதில் அதனை அடையலாம் என நம்பினான்.

தொடர்ந்து கரும்புலிகளுக்கான உடல் உள உறுதிகளை உறுதிப்படுத்தும், தாங்குதிறனைப் பரிட்சிக்கும் பயிற்சிகளைப் பெற்றுத் தன்னைக் கரும்புலி அணித்தலைவர்களுள் ஒருவனாக்கிக்கொள்கிறான். இப்பொழுது கரும்புலியாகவும், வேவுவீரனாகவும் தனது அனுபவங்களை ஒருங்கிணைத்துச் செயற்படுகின்றான். வரையறைக்குட்பட்ட முறையில் முடிவெடுக்கும் அதிகாரத்துடன் எதிரி முகாம்களினுள் ஊடுருவி இலக்குத்தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான். முல்லைத்தீவு வெற்றியைப்போல், பூரண வெற்றியைத் தரக்கூடிய புறச்சூழலுடன் அமைந்திருப்பது பூநகரி இராணுவத்தளம். ஏற்கனவே அதனுடன் இவனுக்கிருந்த பரீட்சயம் காரணமாக அதனை வேவு எடுக்கப்புறப்படுகின்றான். அனுபவம் வாய்ந்த வேவுப்புலிக்கு இராணுவமுகாமொன்றின் காவலரணுக்கு அண்மையாகச் சென்று அதனுள் எட்டிப்பார்ப்பதென்பது திகில் நிறைந்த விருப்பிற்குரிய செயற்பாடு ஆகும்.

தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தி ஒரு காவலரணுக்கு உள்ளே எட்டிப் பார்க்கின்றான். இராணுவ நடமாட்டத்தைக் காணவில்லை. அடுத்த காலரணினுள்ளும் சென்று பார்க்கின்றான். அதுவும் அவ்வாறே காணப்படுகின்றது. சிறிதுநேரத்திற்கு முன்னர்வரை இராணுவத்தினர் இருந்ததற்கான தடயங்கள் காணப்பட்டன. இவனுக்கு ஏதோ சந்தேகம் ஏற்பட்டது. மெல்ல முகாமின் உட்பகுதிக்குள் செல்கின்றான். அம்முகாமின் வெதுப்பகத்தில் நெருப்புத்தணல் காணப்படுகின்றது. ‘பாண்களும்’ அவ்வாறே கிடக்கின்றன. ஆள் நடமாட்டம் தான் இல்லை. பூரணமாக விளங்கிவிட்டது.

அங்கிருந்தவர்களுக்கான முன்னறிவிப்பு இன்றியே அம்முகாம் பின்வாங்கப்பட்டு விட்டது என்பது. இரவோடு இரவாக பலவாயிரம் இராணுவம், கடற்படையினர் இருந்த முகாம் வெறுமையாகிவிட்டது. இது எங்களுக்குத் தெரியாமல் இருந்து விட்டது? என தன்னுள் எண்ணியவன் தொடர்பெடுத்து தனது முகாம் பொறுப்பாளருக்கு நிலைமையை அறிவிக்கின்றான். மேலும் உறுதிப்படுத்தும்படி அவர் கேட்கதான் உறுதிப்படுத்தியவற்றைத் தெரிவித்தான். முகாம் பின்வாங்கும் முடிவெடுத்த முலோபாய முடிவுகள் எடுக்கும் எதிரித்தளபதிக்கு பாராட்டுக்களை தெரிவித்தபடி வெளிவருகின்றான்.

‘ஜெயசிக்குறு’ இராணுவ நடவடிக்கை மூர்க்கமுடன் தொடர்கின்றது. அதனைத் தடம்புரளச் செய்யும் தந்திரோபாய நடவடிக்கையாகவும் போராட்டத்தின் அடுத்தகட்டப் பாய்ச்சலாகவும் கிளிநொச்சி இராணுவ முகாம் வீழ்த்தப்பட வேண்டும். இந்நடவடிக்கையின் வெற்றியை உறுதிப்படுத்தவும், வேகப்படுத்தவும் என கரும்புலிகள் போரணியொன்று ஆனையிறவு இராணுவத்தளத்தினுள் ஊடுருவியது. இவர்களின் இலக்காக ஆனையிறவு தளத்தினுள் குழப்பத்தினை ஏற்படுத்துவதன் மூலம் கிளிநொச்சி இராணுவத்தினருக்கான விநியோகத்தைத் தடுப்பது, கட்டளைகளைக் குழப்புவது என்பன அமைந்திருந்தது.

கொமாண்டோ பாணியிலான உட்தாக்குதல் ஆரம்பித்துவிட்டது. பூட்டோவினால் எதிரி முகாமின் மையத்திலிருந்த தொலைத் தொடர்புப் பகுதி செயலிழக்கச் செய்யப்பட்டது. இவனது அணித்தலைவர்கள் வீரச்சாவடைய இவனும் இடது கையில் காயப்பட்டு என்பு முறிவிற்குள்ளாகினான். இதனால் சார்ச்சர் பட்டியை இழுத்துக் கொழுவித் தன்னைத்தானே தகர்த்து அழிக்கும் முயற்சி சாத்தியமற்றுப் போனது. எனவே தப்பிக்கும் முடிவெடுக்கின்றான். உள்ளே காயமடைந்திருந்த ஏனைய வீரர்களையும் வெளிக்கொண்டுவர இவனது தலைமைத்துவம் கை கொடுக்கின்றது. கிளிநொச்சியைக் கைப்பற்றும் அத்தாக்குதல் அப்போது வெற்றியடையாமல் போனது. எனினும் பெரும்பாலான கரும்புலிகள் வெற்றிகரமாக தமது இலக்கை நிறைவுசெய்து தளம் திரும்பியிருந்தனர். கை என்பு முறிவுக்காயம் மாறுவதற்காக சில காலம் மருத்துவமனையிலும் முகாமிலும் ஓய்வெடுத்தான்.

அக்காலப் பகுதியில் தன்னுடன் பணியாற்றி வீரச்சாவடைந்த கரும்புலிகள் பற்றி கவிதைகளையும் இசைப் பாடல்களையும் எழுதி வெளியிட்டிருந்தான். புலிகளின் குரல் வானொலியில் பல கவியரங்குகளில் இவன் குரல் ஒலித்திருந்தது. மீண்டும் பயிற்சிகள் எடுத்து அடுத்த தாக்குதலுக்கு தயாராகினான்.

மீண்டுமொரு முறை கிளிநொச்சி இராணுவத்தளம் தாக்கியழிக்கப்படும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு ஆதரவாக இம்முறையும் ஆனையிறவினுள் ஊடுருவியிருந்த கரும்புலிகள் அணியில் பூட்டோ காணப்பட்டான். அப்பொழுது பூட்டோவிற்கு பாம்பு கடித்து விட்டது. நஞ்சு இரத்தத்தில் கலக்க மரணம் இவனை நோக்கிவந்தது. எனினும் பகை முகாமினுள் பற்றையொன்றினுள் வைத்து விசமுறிப்பு மருந்து (ASV) ஏற்றப்பட்டது. மீண்டுமொருமுறை சாவிலிருந்து தப்பித்துக் கொள்ள தமிழீழம் ஒரு பெறுமதியான கரும்புலியை மீளப்பெற்றுக்கொண்டது. அத்திட்டம் வெற்றிபெற கிளிநொச்சி நகரம் விடுவிக்கப்பட, ஓ.அ.II வெற்றி உறுதிப்படுத்தப்படுகின்றது.

மீண்டும் கடின தொடர்பயிற்சிகளை மேற்கொள்கின்றான். அக்காலத்தில் அவசியம் தேவைப்பட்ட ஒரு வெற்றியைப் பெறுவதற்காக
தலைவரின் ஆசிபெற்று நகரும் கரும்புலியணியில், இலக்கின் மீதான தாக்குதல் தொடுக்கும் பொறுப்பை ஏற்று இணைந்துகொள்கின்றான். இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு அதிஉயர் பாதுகாப்புடன் பேணப்படும் மணவாளன்பட்டை எனும் இடத்தில் தரையிறங்கும் உலங்குவானூர்தியைத் தாக்கி அழிக்க வேண்டும். பல்வேறு சிரமங்களைத் தாண்டி குறித்த இடம்சென்று பகைவர்களுக்குள் ஓடிச்சென்று அவர்களுக்கு மத்தியில் நின்று அவர்களின் கண் முன்னால் தரையிறங்க முற்பட்ட உலங்கு வானூர்தியை வானில் வைத்தே ‘லோ’ உந்துகணையால் தாக்கியழித்து பயத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்து நிற்கும் எதிரிகளின் மத்தியில் இவனும் ஏனைய வீரர்களும் தப்பிவந்த செயலானது கரும்புலித் தாக்குதல் வரலாற்றில் புதிய அத்தியாயமாகச் சேர்க்கப்பட்டது.

இடைக்காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் இராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை வேவு எடுக்கப் பணிக்கப்பட்டான். அங்கு மக்களோடு மக்களாகவும் கரந்துறைந்திருக்கும் ‘கெரில்லா’ வீரனாகவும் செயற்பட்டு பல பெறுமதியான வேவுத் தகவல்களைச் சேகரித்திருந்தான். களங்களினுள் செல்லும்போது முன்னும் களம் விட்டகலும்போது இறுதியாகவும் வெளிவருவது இவனது இயல்பான பண்பு. இவன் தலைமையில் சேகரிக்கப்பட்ட தகவல்களுடன் வன்னித்தளம் திரும்புமாறு பணிக்கப்பட்டான்.

இவர்களுக்கென ஒரு சாதாரண மீன்பிடிப் படகு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதில் இவனும் அறிவுக்குமரனும் ஏற முற்படுகையில் சற்றுநிதானித்தவன் அத்திட்டத்தைக் கைவிடுகின்றான். இவரும் ஒன்றாகப் போய் ஏதாவது நடந்தால் இவ்வளவு நாளும் கடினப்பட்டு சேகரித்த தகவல்கள் செல்லாக்காசு ஆகிவிடும். ஆதலால் அறிவுக்குமரனை முதலில் போகச்சொல்கின்றான். படகில் ஏறியவனிடம் இரண்டு கைக்குண்டுகளைக் கொடுத்துவிடுகிறான். அந்த துர்ப்பாக்கிய நிகழ்வு நடந்தே விடுகின்றது. எதிரிப் படகுகள் அறிவுக்குமரனின் படகை வழிமறித்தன பகைவன் சோதனையிட முயற்சிக்கையில் அறிவுக்குமரன் குண்டுகளை வெடிக்கவைத்து தன்னையும் படகையும் அழித்துக்கொண்டான். பூட்டோ எடுத்த முடிவால் வேவுத்தகவல்கள் பத்திரமாக வன்னித்தளம் வந்து சேர்ந்தது.

அவர்களின் கோட்பாட்டின்படி பூட்டோவின் தீர்மானமானது முற்றிலும் சரியானது எனினும் உணர்வு ரீதியாக பூட்டோவை இது பாதிக்கவே செய்தது. அறிவுக்குமரனுக்குப் பதிலாகத் தான் வந்திருக்கலாமோ என அடிக்கடி கூறிக்கொள்வான்.

‘கரும்புலிகளின்’ வளர்ச்சிப் போக்கில் இவனது பங்களிப்பின் காரணமாக கரும்புலிகள் சம்பந்தமான விதிமுறைகளை எழுதுவதிலும் அதனைப் பரீட்சிப்பதிலும் இயக்கம் இவனை ஈடுபடுத்தலானது. இவன் தனது நடைமுறைச் செயற்பாடுகளினூடாக கோட்பாடுகளை உருவாக்கினான். கரும்புலிகளுக்கான சத்தியப் பிரமாணம், பயிற்சிகள், ஒத்திகைகள், விதிமுறைகள் அடங்கிய மரபு சார் யாப்பை உருவாக்கப் பெரும் பங்களிப்பைச் செய்தான். இவனது தொடர் அனுபவமும் செயற்பாடும் காரணமாக கரும்புலிகளுக்கான இலக்கங்கள் ஒதுக்கப்படும்போது இவனுக்கு க.1 ஒதுக்கப்பட்டது. அன்று முதல் இவன் ‘நம்பர் வண்’ எனும் சங்கேத பாசையில் அழைக்கப்படலானான்.

பல்வேறு தரத்திலான போராளிகளுடனும் வயது வேறுபாடுடைய பொதுமக்களுடனும் இவன் பழகும் முறை வித்தியாசமானது.
அந்தந்த வயதுக்காரர்களுடன் அவர்களின் குணாம்சங்களுடன் பழகினான். தனது அதிக ஓய்வு நேரங்களை சிறு குழந்தைகளுடனேயே செலவழித்தான். அவர்களுக்குச் சித்திரம் வரையப் பழக்குவதிலிருந்து பரீட்சைகளில் சித்தியடைய என்ன செய்யவேண்டும் என்பது வரை நடைமுறைச் சாத்தியமான வகையில் சொல்லிக்கொடுப்பான். எந்த நேரமும் இந்த நாட்டிற்காக வெடிக்கக் கூடிய கரும்புலி ஒருவனே தங்களுடன் பழகுகின்றான் என்பது அவர்களுக்குத் தெரிந்தே இருந்தது. எனினும் அதனை இவன் ஒருபோதும் ஒத்துணர்வைப் பெறுவதற்காகப் பயன்படுத்தியதே இல்லை.

ஓயாத அலைகள் IV வெற்றி பெறுவது அசாத்தியமானது. ஒரு வேவுப்புலி வீரனோ ஒரு கரும்புலி வீரனோ பகை தொடர் காவலரண்களைக் கடந்து உள்நுழைவது முடியாமல் போனது. உள் நிலைமைகளை அவதானித்து உட்புறமாகத் தாக்குதல் தொடுத்தால் மட்டுமே எதிரி குழப்பமடைவான். பலரால் இயலாமல் போகையில் மீண்டும் பூட்டோ தெரிவானான். கரும்புலிகளால் ஒரு முன்முயற்சி இயலாமல் போனது எனும் வார்த்தையை கேட்கவே அவன் விரும்பவில்லை. பொதிசெய்யப்பட்ட சிறு ஆயுதங்களுடனும், உணவுப்பொருட்களுடனும் கடலினுள் இறங்கினான்.

கரையோரமாக நீண்ட தூரம் நீந்திச்சென்றான். கடற்கரை பூராகவும் இராணுவமும், கடலில்கடற்படையும் அதியுசார் நிலையில் நின்றது. கடலினுள் பகைப் படகுகள் ரோந்து செய்தவண்ணம் இருந்தன. கரையேறுவதோ கடலில் ஆழம் செல்வதோ சாத்தியமற்றதானது. மீண்டும் தளம் திரும்புவதை அவன் கற்பனைகூடச் செய்யவில்லை. செய் அல்லது செத்துமடி என்பதுவே இவனது தாரக மந்திரமானது. சாதகமான சூழலுக்காகக் கடலில் மிதந்தபடியே காத்திருக்கலானான். பாரங்களைக் குறைப்பதற்காக உணவுப் பொருட்களையும் ஆயுதங்களையும் கழற்றி விடலானான்.

தொலைத்தொடர்பு சாதனமும் ‘G.P.S ம் குப்பியும் மட்டுமே அவனிடம் மிஞ்சியிருந்தது. இரண்டு நாட்களாக கடல் நீரில் மிதக்கலானான். பசியும், தாகமும், கடல் நீரின் உப்புச் செறிவும் அவனைச் சித்திரவதை செய்தது. தண்ணீரில் மிதந்தபடி தண்ணீர் இன்றித் தாகத்தால் தவித்தான். அவனையும் மீறி வெளிவந்த கண்ணீரைத் தண்ணீராகச் சுவைத்தான். தாயையும் தலைவனையும் நினைத்து நினைத்து தாங்குதிறனை வளர்த்து, யுகங்களாகும் கணங்களைக் கழித்தான்.

பூட்டோ தடயமின்றி வீரச்சாவடைந்து விட்டானோ எனப் பெரும்பாலானோர் கருதத்தொடங்கினர். ஒருவாறு எதிரி முகாமிற்குள் புகுந்துகொண்டான். புற்களில் நனைந்திருந்த பனி நீரை நாக்கால் நக்கி நாக்கிற்கு தண்ணீர் காட்டிக்கொண்டான். உட்சென்றவன் தொடர்பெடுத்து தான் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தினான். அவன் கொடுத்த ஆள்கூற்றுத்தளங்கள் மீது எங்கள் ஆட்லறிகள் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின. பத்திற்கு மேற்பட்ட ஆட்லறிகளும் பல பல்குழல் பீரங்கிகளும், ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான எறிகணைக்களஞ்சியங்களும் அழித்தொழிக்கப்பட்டன. உணவின்றி, ஆயுதமின்றி, பூஞ்சணம்பிடித்த பூசணிக்காயைத் துண்டுதுண்டாகச் சாப்பிட்டவாறு, உயிரையும் இயங்கு சக்தியையும் தக்கவைத்தவாறு பலநாள் பணி தொடர்ந்தான். தனியான இவன் பகைத் தளத்தினுள் கரும்புயலாகச் சுழன்றான். பெரும் படையணி புகுந்ததாக செயலாற்றி நாசம் ஏற்படுத்தினான்.

தொலைத் தொடர்பை இடை மறித்ததில் பூட்டோ தனியாகத்தான் செயற்படுகின்றான் என்பதை பகைவன் அறிந்துகொண்டான். இவனைப் பிடிப்பதற்கு பலநூறு இராணுவத்தினரையும் பல உந்துருளி அணிகளையும் களத்தில் இறக்கி களைத்துப் போனான் எதிரி. இறுதியாக இவனை மீட்டுவர இன்னொரு கரும்புலியணி உள்நுழைக்கப்பட்டது. அப்பிரதேசம் இவனுக்குத் தண்ணிபட்ட பாடாக இருந்ததால் அவர்களையும் அழைத்துக்கொண்டு இருபத்தியாறாம் நாள் இவன் வெளியில் வந்தான். மெலிந்து, நோய்வாய்ப்பட்டு சிறிதளவு திரவ ஊடகங்களைக் கூட உட்கொள்ள முடியாத அளவிற்கு உதடுகளும் நாக்கும் வெடித்து, எலும்பும் தோலுமாக அவன் வெளிவந்த காட்சி காண்பவர் கண்களைக் கசிய வைத்து.

தொடர்ந்து நிமோனியாக் காய்ச்சலுக்கு உள்ளானான். சிலவாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டவன் மீண்டும் பணிக்கு ஆயத்தமாகினான். அக்காலப் பகுதியில் இவன் முள்ளியவளைப் பகுதியில் தங்கியிருப்பதை அறிந்து இவனது தாய் மகனைச் சந்திப்பதற்காக மன்னாரில் இருந்து பேருந்தில் வந்திறங்கினார். அங்கு தென்பட்ட பெண் போராளிகளிடம் ஷபூட்டோ தங்கியிருக்கும் மருத்துவமுகாம் எதுவென கேட்க,
“யாரு கரும்புலி பூட்டோவா?”
என அவர்கள் கேட்டு முகாமிற்கு வழிகாட்டி விட்டனர். தாயும் மகனும் சந்தித்த அந்தக் கணங்கள் அவர்களுக்கே உரித்தானவை. பலவருடங்களாக மகன் கரும்புலி என்பது தாயிற்குத் தெரியும். தாய்க்குத் தெரியும் என்பது மகனிற்கும் தெரியும். ஆயினும் இருவரும் ஒருபோதும் அதுபற்றிக் கதைத்தது இல்லை. மகன் தான்பட்ட கடினங்களைக் கவிதைகளாக எழுதியிருந்தான். அவற்றை வாசித்த அன்னையின் கண்கள் நீர் சொரிந்ததை அருகிருந்தவர்கள் பார்த்தார்கள்.

அடுத்த பணிக்காக இவன் தயாராகிக்கொண்டிருக்கையில் தலைவரிடம் இருந்து தகவல் வருகின்றது, உலங்குவானூர்தி தாக்குதல் சம்பவத்தைப் படமாக எடுக்கும்படி பணித்திருப்பதாகவும் அதில் அவன் செய்த பாத்திரத்தை இவனையே நடிக்கும்படியும். விடுதலைப்புலிகள் சொல்லுக்கு முந்திச்செயலை வைத்திருப்பவர்கள். செய்தவற்றையும் சொல்லாமல் விடுபவர்கள். இக்குணாம்சத்தினால் வரலாறு திரிந்துவிடக்கூடாது என்பதற்காக தாக்குதல் செய்தவனையே அப்பாத்திரமாக நடிக்கச்சொன்னார்கள்.

வன்னிமண் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டிருந்த காலம். திரைப்படம் எடுப்பதற்கான போதிய வளங்கள் இல்லை. ஆயுத தளபாடங்களையும், துணைப்பாத்திரங்களுக்குத் தேவையான ஆளணிகளையும் இவனே ஒழுங்குபடுத்தி படப்பிடிப்பை விரைவாக்கினான். படப்பிடிப்பின் நிமித்தம் பல்வேறு தரப்பினர்களுடனும் பழகவேண்டி ஏற்பட்டது.

படப்பிடிப்பு நிறைவேறும் நிலையில் மீண்டுமொரு சிறு தவறு ஏற்பட்டது. உள்ளூர் முகவர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பூட்டோ விளக்கம் கோரலுக்கு உள்ளாக்கப்பட்டான். பலர் எதிர்பார்த்ததற்கு மாறாக தேச நன்மைக்காக உருவாக்கப்பட்ட பொறி முறைக்கு ஒத்துழைப்பதையும் தனது கடமைகளில் ஒன்றென வெளிப்படுத்தினான். இவன் நடித்த திரைப்படம் “புயல் புகுந்த பூக்கள்”என வரலாற்றுப் பதிவானது. இக்காலப் பகுதியில் வெளிச்சம் பவள இதழில் இவனது உள் நடவடிக்கைகள் பற்றிய ஒரு சம்பவத்தை புயலவன் எனும் பெயரில் எழுதியிருந்தான்.

தொடர்ந்து தேசத்திற்கான இவன் பணி தியாகத்தின் உச்சம் நோக்கி வேக மெடுத்தது. மறைமுகக் கரும்புலியாகச் செயற்படத் தொடங்கினான். அரசியல் தெளிவும், இலட்சியப் பற்றும், செயல்திறனும், நிதானமும் உள்ள போராளியாக இவன் ஒளிவீசினான். இவனது பன்முகத்திறமை மறைமுகக் கரும் புலிகளை பலமடங்காகப் பலம்பெறச் செய்தது. இவனதுசிலவருடச் செயற்பாடுகள் வெளித்தெரிய முடியாதவையாகின. ஆனால் தமிழினம் அதனை அனுபவித்துக்கொண்டிருக்கின்றது. சுதந்திர தமிழீழத்தின் பலமான அத்திவாரத்தினுள் இவனது உழைப்பு கலந்திருக்கின்றது.

மாவிலாறைச் சாட்டாக வைத்து எதிரி யுத்தத்தைத் தொடங்கினான். முகமாலையைத் தாண்டி ஆனையிறவு நோக்கி எதிரி முன்னேறத் திட்டமிட்டிருக்கிறான். சம்பூர் மீது பெரும் இராணுவ அழுத்தத்தைப் பிரயோகிக்கின்றான். இராணுவத்தை திசைதிருப்பவும் குழப்பவும் அவசரமாக நடவடிக்கையில் இறங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பலமுறை தலைவனுக்கு தடைநீக்கியாகச் செயற்பட்ட பூட்டோ இம்முறையும் முதல் தெரிவானான். தலைவருடனும், தளபதிகளுடனும் தொடர் சந்திப்புக்களை மேற்கொண்டான்.

ஓகஸ்ட் ஆரம்ப நாட்களில் ஒரு நாள் இரவு இரண்டு மணியளவில் தலைவரிடம் இறுதி விடை பெற்றுக்கொண்டான். மறைமுகக் கரும்புலி மீண்டும் தரைக் கரும்புலியாக யாழ்ப்பாணத்திற்குள் பிரவேசித்தான். பாரிய இராணுவத் திருப்புமுனைச் சாதனைகள் எதிர்பார்க்கப்பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் சில நாட்களில் செய்திவந்தது. “நம்பர் வண்” தொடர்பு இல்லை என. இம்முறையும் தப்பிவருவான் என அவனைத் தெரிந்த அனைவரும் நம்பியிருந்தனர். ஆனால் பூட்டோ வீரச்சாவு உறுதியான செய்தியுடன் 2006ஆம் ஆண்டு மாவீரர்தினம் கொண்டாடப்பட்டது..............

ஒரு வேவுப் புலி நிபுணனை, வரைபடக் கலைஞனை, ஒரு கரும்புலிக் கவிஞனை, பாடலாசிரியனை, எழுத்தாளனை, நடிகனை, உச்சவினைத்திறனுடைய அப்பழுக்கற்ற செயல்வீரனை, போராளிகளுக்கான ஒரு உதாரண புருசனை, பட்டறிவால் உருவான போரியல் ஞானியை, எல்லாவற்றுக்கும் மேலாக தேசத்தையும், தலைவனையும் நேசித்த ஒரு “நம்பர் வண்” ஐ தமிழீழம் பௌதீக ரீதியாக இழந்துவிட்டது. எனினும் தலைமுறைகள் கடந்து கடத்தப்படும் அவனது செயல் வீச்சுக்களின் விளைவாக சுதந்திர தமிழீழம் விடுதலை பெற்று, வளம்பெற்று தலைநிமிர்ந்து எங்கள் பெயர் சொல்லி வாழும்.

குறிப்பு :- இவனது செயற்பாடுகளில் சிலவற்றை மட்டும் இப்பகுதி கோடிகாட்டுகின்றது. காலம் கைகொடுக்கையில் இவன் வீரகாவியமாக விரிவான்.

கரும்புலி லெப்.கேணல் பூட்டோ வீரவணக்கநாள்

இந்திய இராணுவமும் ஒட்டுக்குழுக்களும்சேர்ந்து தேசபக்தர்களை வேட்டையாடிக்கொண்டிருந்த காலம். மன்னார் மாவட்டத்தின் பாலக்குழிப் பிரதேசத்தில் யூலியனின் தந்தை இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். பாடசாலைக்குள் புகுந்த இராணுவத்தினர் யூலியனைக் காட்டித்தரும்படி துப்பாக்கி முனையில் அச்சுறுத்துகின்றனர். அன்று பாடசாலை செல்லாத யூலியன் தப்பித்துக்கொள்கிறான்.

உடனடியாக முஸ்லிம் குடும்ப நண்பர் ஒருவரின் உதவியுடன் மறைமுகமாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். அங்கிருக்கும் நகைக்கடையொன்றில் தற்காலிகமாகப் பணிக்கமர்த்தப்படுகின்றான். முதல்நாள் கடைக்குச் செல்கிறான். அங்கிருக்கும் கதிரையொன்றில் அமர்ந்திருக்கின்றான்.

அங்குவந்த முதலாளி "கடைக்கு வேலைக்கு வந்தனி எப்படிக் கதிரையில் அமர்ந்திருக்கலாம்?" என ஏசுகின்றார். "நான் எனது ஆசிரியர்களுக்கு மட்டும்தான் எழுந்து மரியாதை கொடுக்கிறனான்" என கூறியவன் எவருடைய உதவியுமின்றி மீண்டும் தாயிடம் வந்து சேருகின்றான். "அம்மா இப்படி அடிமையாகச் சிறுமைப்படுவதிலும் பார்க்க நான் இயக்கத்திற்குப் போகப்போறன்" என அனுமதி கேட்கின்றான். அன்னை மொனமாக இருக்கின்றாள். அங்கிருந்த உறவினர்கள் அழுகின்றார்கள்.

"நீங்கள் அழுதுகொண்டு இருக்கையில் நான் இயக்கத்திற்குப் போகமாட்டன். ஆனால் விரைவில் போயிருவன்" என்றவன் ஒருநாள் இயக்கத்தில் இணைந்துவிட்டான். உயிராபத்துக்களை உதாசினம் செய்து, போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மிகவும் ஆதரவான வீட்டிலிருந்து, இவன் இயக்கத்தில் இணைந்தது, முகாம் பொறுப்பாளரைச் சங்கடத்திற்கு உள்ளாக்கியது. "நீ வீட்ட திரும்பிப் போ" என கூறுகின்றார். "இல்ல நான் அம்மாவிட்ட சொல்லிப்போட்டுத்தான் வந்தனான்." என பதிலளிக்கின்றான்.

இதனை உறுதிப்படுத்த பொறுப்பாளர் தாயைச் சந்திக்கின்றார். மகனின் கூற்றை உண்மையாக்க விரும்பியவள் "ஓம் என்னட்ட சொல்லிப்போட்டுத்தான் வெளிக்கிட்டவன்" எனக் கூறுகின்றாள். முழுமையான போராளியாக மணலாற்றுக் காட்டினுள் இவனது போராட்ட வாழ்க்கை ஷபூட்டோ எனும் பெயருடன் தொடங்கியது. காட்டு வாழ்க்கை, கடினப் பயிற்சிகள் கடந்து வேவுப்புலியாகப் பரிணமிக்கின்றான். காடுகளையும் எதிரிமுகாம்களையும், காவலரண்களையும் கால்களால் நடந்து அளந்து கணிக்கின்றான். ஒரு நாள் ஏழு பேர் கொண்ட வேவு அணியை வழிநடத்தியவாறு, னப்பாதுகாப்பு வலயத்தின் சுற்றயல்பகுதியை கண்காணித்துக் கொண்டு வருகின்றான்.

ஒரு இடத்தில் சூழலுக்குப் பொருத்தமற்ற முறையில் புற்கள் மடிந்திருப்பதை அவதானிக்கின்றான். எதிரி தமது பகுதிக்குள் புகுந்துவிட்டதாக கூறுகின்றான். மற்றவர்கள் அதனை மறுதலிக்கின்றனர். இவனோ அப்பகுதியில் அண்மையில் தான் புதைத்து வைத்த மிதிவெடியொன்றைத் தோண்டி எடுக்கின்றான். எதிரி மீண்டும் அப்பாதையைக் கடப்பானாயின் எங்கு பாதம் வைப்பான் என்பதைக் கணிக்கின்றான். அவ்விடத்தில் மிதிவெடியை வைத்து உருமறைத்து விடுகின்றான். தொடர்ந்து நகர்கின்றார்கள்.

சிறிது நேரத்தில் வெடிச்சத்தம் ஒன்று கேட்கின்றது. ஏனையவர்கள் காட்டு விலங்கு ஏதும் மிதிவெடியில் சிக்கியிருக்கும் என கருத்துத் தெரிவிக்கின்றனர். அதனை மறுதலித்தவன் அவர்களையும் அழைத்துக்கொண்டு அவ்விடம் திரும்புகின்றான். அங்கு இரத்தம் சொட்டியபடியே இராணுவப் பாதணியுடன் துண்டிக்கப்பட்ட கால் ஒன்று கிடக்கின்றது. பின்னர் வந்த நம்பகமான தகவல் மூலத்திலிருந்து தெரியவந்தது. இவர்களுடைய காட்டுமுகாமைச் சுற்றிவளைத்து தாக்கியழிப்பதற்காகத் தங்களது வேவு தகவல்களை இறுதியாக உறுதிசெய்ய வந்த இராணுவ அதிகாரி ஒருவர்தான் மிதிவெடியில் சிக்கியது என்பது. இவனது சமயோசிதச் செயற்பாட்டால் பல போராளிகளின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டது.

இவ்வாறான பல பதிவிலுள்ள, பதிவில் இல்லாத நிகழ்வுகளின் ஊடாக இவன் ஒரு இராணுவ விற்பன்னனாக வருவதற்கான அறிகுறிகள் தென்படத்தொடங்கின. மணலாறு மாவட்டத்தில் நடாத்தப்பட்ட பல்வேறு முகாம் தாக்குதல்கள், பதுங்கித் தாக்குதல்கள் என்பனவற்றிற்கு வேவு எடுத்தும், அணிகளை வழிநடத்தியும் போராட்டத்திற்கான தன் பங்களிப்பை மேம்படுத்திக்கொண்டான். இக்கால கட்டத்தில் ஒரு சண்டையில் தனது இடதுகைப் பெருவிரலையும் இழந்திருந்தான்.

கரும்புலி லெப்.கேணல் பூட்டோ

கனகரட்ணம் ஸ்டான்லி யூலியன்

இயல்பாகவே இவனிடம் இருந்த சித்திரம் வரையும் ஆற்றலால் இவன் வரைபடப்பகுதிக்குள் உள்ளீர்க்கப்பட்டான். வேவுத்தகவல்களை வரைபடங்களாக்கி துல்லியமான விபரங்களைக் கொடுத்து பிரதம தளபதிகளின் தாக்குதல் திட்டமிடல்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தான். இயற்கையாகவே இவனிடம் இனிமையாகப் பாடும் திறனும், கவிதை யார்க்கும் வல்லமையும் கைகூடியிருந்தது. வனமுகாம்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்குகொண்டு கலையாற்றல்களை வெளிப்படுத்தி போராளிகளை மகிழ்விக்கவும் செய்தான். இயக்கத்தில் கலையரசன் எனும் பெயரையும் பெற்றான்.

சமகாலத்தில் போராயுதத் தளபாடங்களையும், நவீன இராணுவ உபகரணங்களையும் தன்னுடன் பழக்கப்படுத்தினான். அவற்றின் உச்ச பயன்பாட்டைப் பெறும்வகையில் தன்னை தகவமைத்துக் கொண்டான். தொடர்ந்து பூநகரி கொக்குத்தொடுவாய் இராணுவ முகாம்களின் வேவுகளை எடுத்து அவற்றின் மீதான தாக்குதல்களை உறுதிப்படுத்தினான். இப்பொழுது இவன் பல அணிகளை வழிநடத்தும் அணித்தலைமைப் பொறுப்பை வகிக்கத் தொடங்கியிருந்தான்.

சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை தொடர யாழ்நகரம் கைவிடப்பட, இவன் உள்நின்ற போராளிகளுடன் கலந்திருந்தான். இவனது போராவலைத் தீர்ப்பதற்கு நல்லசந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தது. ஒருமுறை நடவடிக்கையின் நிமிர்த்தம் பண்ணைக் கடலினூடு நீந்திக்கொண்டிருந்தான். அப்பொழுது அழற்சியை ஏற்படுத்தக்கூடிய, நச்சுக் கடற்தாவரம் ஒன்றினால் தாக்கப்பட்டிருந்தான். உடல் முழுவதும் தடித்து மூச்சு விடுவதையும் சிரமம் ஆக்கியது. ஒருவாறு சிரமப்பட்டு கரையொதுங்கியவன் ஒருவாரத்திற்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் களம் சென்றான்.

முல்லைத்தீவுச் சமர் தொடங்கிவிட்டது. "பூட்டோ... பூட்டோ!" என தொலைத் தொடர்பு சாதனத்தில் தளபதி பால்ராஜ் அழைப்பது கேட்கின்றது. ஈழத் தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் திருப்புமுனைத் தாக்குதல் அது. நாங்கள் வென்றே ஆகவேண்டும் சர்வதேசத்திற்கான தமிழீழத்தின் கடற்பாதை திறக்கப்பட்டே ஆகவேண்டும். முகாம் துடைத்தழிப்பை பூரணப்படுத்தப்பட வேண்டும். அதற்காக வேவில் வரைபடத்துறையில், தாக்குதல் அனுபவங்களில், நெருக்கடி நேரங்களில் சரியான முடிவெடுக்கும் வல்லமையைப் பலமுறை நிரூபித்திருந்த பூட்டோ களநிலை அவதானிப்பாளராகவும், டாங்கிக்கான ஒருங்கிணைப்பாளராகவும் களத்தினுள் இறக்கப்பட்டிருந்தான்.

இவனது செயற்பாட்டால் பகைமுகாம் வீழ்த்தும் முயற்சி துரிதப்படுத்தப்பட்டது. பெரும்பாலான முகாம் பகுதிகள் வீழ்ந்துவிட்டன. ஒரு கட்டடத்தினுள் பல இராணுவத்தினர் ஒளிந்திருந்து தாக்குதலைத் தொடுத்துக்கொண்டிருந்தனர். அவர்களைச் செயல் முடக்கம் செய்யவேண்டும். பூட்டோ டாங்கியைத் தாக்குதலுக்கு ஆயத்தம் செய்து அதன் மூலம் சில சூடுகளை வழங்க ஆணையிட்டான். பகைவன் பதுங்கியிருந்த கட்டடம் அப்படியே தகர்ந்து இறங்கியது. பெரும்பாலான இராணுவத்தினர் கொல்லப்பட்டு விட்டனர்.

தொடர்ந்து தாக்குதலை நடாத்தி வெற்றியை உறுதிப்படுத்தும்படி களமுனைத்தளபதி கட்டளையிட்டார். அவ்வாறு செய்ய முற்படுகையில் அவனது உள்ளுணர்வு அவனை எச்சரித்தது. மீண்டும் சூழலை அளவெடுக்கின்றான். மின்னல் என பொறி தட்டியது. டாங்கிக்குப் பக்கவாட்டாக இருக்கும் மண்ணரணில் இடைவெளி தென்பட்டது. எக்காரணம் கொண்டும் டாங்கி இழக்கப்பட முடியாத இயக்கத்தின் இராணுவச் சொத்து. டாங்கியை வேகமாகப் பின்னகர்த்தி பாதுகாப்பிடம் செல்ல உத்தரவிட்டான்.

டாங்கி சடுதியாகப் பின்னகரவும் குறித்த மண்ணரன் இடை வெளியூடு ஆர்பிஜி கணை ஒன்று எகிறி வந்து இலக்குத் தவறித் தாண்டிச் செல்லவும் சரியாக இருந்தது. கணநேர முடிவில் இயக்கத்தின் இராணுவப் பலங்களில் ஒன்றைப்பாதுகாத்து தொடர்ந்த பல வெற்றிகளுக்கு அடிப்படைக் காரணமாகின்றான். ஓயாத அலை 1 வெற்றியில் தமிழீழம் திளைத்திருந்தது. தமிழர்கள் தலைநிமிர்ந்து நடக்கத் தொடங்கினர்.

சிங்களம் தோல்விக்குச் சப்பைக்கட்டுக் கட்டிக்கொண்டிருந்தது. அவ்வேளை முல்லைத்தீவு முகாமில் எடுக்கப்பட்ட பொருட்களின் தவறான பிரயோகம் சம்பந்தமாக பூட்டோ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டான். அவனை அறிந்திருந்த அனைவருக்குமே விளங்கியிருந்தது. விசாரணை முடிவு அவனைக் குற்றமற்றவன் என நிரூபிக்கும் என. ஆனால் அதுவல்ல இங்கு முக்கியம், அர்பணிப்பும் செயற்திறனும் உள்ள அப்போராளிக்கு இச்செயல் மனவுடைவை ஏற்படுத்தலாம்.

ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாகவே சம்பவங்கள் நடந்தேறின. விசாரணை முடிவு அவனைக் குற்றமற்றவன் என்றது. ஷதொடர்ந்து என்னசெய்யப் போகிறீர்கள்? விரும்பினால் தண்டனை இல்லாமல் வீட்ட போகலாம் என பொறுப்பாளர் தெரிவித்தார். மெலிதாகச் சிரித்தான். ‘நான் தொடர்ந்து இயக்கத்தில் இருக்கிறன்' எனக்கூறினான். அப்பொழுது பொறுப்பாளர் அப்பசரி வரிப்புலி சீருடையைப் போடுங்கோ அண்ணை உங்களைச் சந்திக்க வரட்டாம்.

‘நான் தவறு செய்யமாட்டன் என்பதைத் தலைவர் நம்பினார். இதுபோதும் சாகும்வரை இயக்கத்தில் இருந்து செயற்படுவதற்கு' என தன்னுள் எண்ணியவன் தலைவரைச் சந்தித்தபின் தொடர்ந்து களப்பணியாற்றுகின்றான். பலமாதங்களுக்கு முன்னர் கரும்புலி அணியில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்துக் கடிதம் அனுப்பியிருந்தான். அதற்கான அனுமதி கிடைத்திருந்தது. ஆபத்துக்களை கடந்து செய்யப்படும் தனது கடின உழைப்பில் மனத்திருப்தி கிடைக்காதவன் கரும்புலியாகச் செயற்படுவதில் அதனை அடையலாம் என நம்பினான். தொடர்ந்து கரும்புலிகளுக்கான உடல் உள உறுதிகளை உறுதிப்படுத்தும், தாங்குதிறனைப் பரிட்சிக்கும் பயிற்சிகளைப் பெற்றுத் தன்னைக் கரும்புலி அணித்தலைவர்களுள் ஒருவனாக்கிக்கொள்கிறான். இப்பொழுது கரும்புலியாகவும், வேவுவீரனாகவும் தனது அனுபவங்களை ஒருங்கிணைத்துச் செயற்படுகின்றான்.

வரையறைக்குட்பட்ட முறையில் முடிவெடுக்கும் அதிகாரத்துடன் எதிரி முகாம்களினுள் ஊடுருவி இலக்குத்தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான். முல்லைத்தீவு வெற்றியைப்போல், பூரண வெற்றியைத் தரக்கூடிய புறச்சூழலுடன் அமைந்திருப்பது பூநகரி இராணுவத்தளம். ஏற்கனவே அதனுடன் இவனுக்கிருந்த பரீட்சயம் காரணமாக அதனை வேவு எடுக்கப்புறப்படுகின்றான். அனுபவம் வாய்ந்த வேவுப்புலிக்கு இராணுவமுகாமொன்றின் காவலரணுக்கு அண்மையாகச் சென்று அதனுள் எட்டிப்பார்ப்பதென்பது திகில் நிறைந்த விருப்பிற்குரிய செயற்பாடு ஆகும். தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தி ஒரு காவலரணுக்கு உள்ளே எட்டிப் பார்க்கின்றான். இராணுவ நடமாட்டத்தைக் காணவில்லை. அடுத்த காலரணினுள்ளும் சென்று பார்க்கின்றான்.

அதுவும் அவ்வாறே காணப்படுகின்றது. சிறிதுநேரத்திற்கு முன்னர்வரை இராணுவத்தினர் இருந்ததற்கான தடயங்கள் காணப்பட்டன. இவனுக்கு ஏதோ சந்தேகம் ஏற்பட்டது. மெல்ல முகாமின் உட்பகுதிக்குள் செல்கின்றான். அம்முகாமின் வெதுப்பகத்தில் நெருப்புத்தணல் காணப்படுகின்றது. ‘பாண்களும்' அவ்வாறே கிடக்கின்றன. ஆள் நடமாட்டம் தான் இல்லை. பூரணமாக விளங்கிவிட்டது. அங்கிருந்தவர்களுக்கான முன்னறிவிப்பு இன்றியே அம்முகாம் பின்வாங்கப்பட்டு விட்டது என்பது.

இரவோடு இரவாக பலவாயிரம் இராணுவம், கடற்படையினர் இருந்த முகாம் வெறுமையாகிவிட்டது. இது எங்களுக்குத் தெரியாமல் இருந்து விட்டது? என தன்னுள் எண்ணியவன் தொடர்பெடுத்து தனது முகாம் பொறுப்பாளருக்கு நிலைமையை அறிவிக்கின்றான். மேலும் உறுதிப்படுத்தும்படி அவர் கேட்கதான் உறுதிப்படுத்தியவற்றைத் தெரிவித்தான். முகாம் பின்வாங்கும் முடிவெடுத்த முலோபாய முடிவுகள் எடுக்கும் எதிரித்தளபதிக்கு பாராட்டுக்களை தெரிவித்தபடி வெளிவருகின்றான். ‘ஜெயசிக்குறு' இராணுவ நடவடிக்கை மூர்க்கமுடன் தொடர்கின்றது.

அதனைத் தடம்புரளச் செய்யும் தந்திரோபாய நடவடிக்கையாகவும் போராட்டத்தின் அடுத்தகட்டப் பாய்ச்சலாகவும் கிளிநொச்சி இராணுவ முகாம் வீழ்த்தப்பட வேண்டும். இந்நடவடிக்கையின் வெற்றியை உறுதிப்படுத்தவும், வேகப்படுத்தவும் என கரும்புலிகள் போரணியொன்று ஆனையிறவு இராணுவத்தளத்தினுள் ஊடுருவியது. இவர்களின் இலக்காக ஆனையிறவு தளத்தினுள் குழப்பத்தினை ஏற்படுத்துவதன் மூலம் கிளிநொச்சி இராணுவத்தினருக்கான விநியோகத்தைத் தடுப்பது, கட்டளைகளைக் குழப்புவது என்பன அமைந்திருந்தது. கொமாண்டோ பாணியிலான உட்தாக்குதல் ஆரம்பித்துவிட்டது. பூட்டோவினால் எதிரி முகாமின் மையத்திலிருந்த தொலைத் தொடர்புப் பகுதி செயலிழக்கச் செய்யப்பட்டது. இவனது அணித்தலைவர்கள் வீரச்சாவடைய இவனும் இடது கையில் காயப்பட்டு என்பு முறிவிற்குள்ளாகினான்.

இதனால் சார்ச்சர் பட்டியை இழுத்துக் கொழுவித் தன்னைத்தானே தகர்த்து அழிக்கும் முயற்சி சாத்தியமற்றுப் போனது. எனவே தப்பிக்கும் முடிவெடுக்கின்றான். உள்ளே காயமடைந்திருந்த ஏனைய வீரர்களையும் வெளிக்கொண்டுவர இவனது தலைமைத்துவம் கை கொடுக்கின்றது. கிளிநொச்சியைக் கைப்பற்றும் அத்தாக்குதல் அப்போது வெற்றியடையாமல் போனது. எனினும் பெரும்பாலான கரும்புலிகள் வெற்றிகரமாக தமது இலக்கை நிறைவுசெய்து தளம் திரும்பியிருந்தனர். கை என்பு முறிவுக்காயம் மாறுவதற்காக சில காலம் மருத்துவமனையிலும் முகாமிலும் ஓய்வெடுத்தான்.

அக்காலப் பகுதியில் தன்னுடன் பணியாற்றி வீரச்சாவடைந்த கரும்புலிகள் பற்றி கவிதைகளையும் இசைப் பாடல்களையும் எழுதி வெளியிட்டிருந்தான். புலிகளின் குரல் வானொலியில் பல கவியரங்குகளில் இவன் குரல் ஒலித்திருந்தது. மீண்டும் பயிற்சிகள் எடுத்து அடுத்த தாக்குதலுக்கு தயாராகினான். மீண்டுமொரு முறை கிளிநொச்சி இராணுவத்தளம் தாக்கியழிக்கப்படும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு ஆதரவாக இம்முறையும் ஆனையிறவினுள் ஊடுருவியிருந்த கரும்புலிகள் அணியில் பூட்டோ காணப்பட்டான். அப்பொழுது பூட்டோவிற்கு பாம்பு கடித்து விட்டது.

நஞ்சு இரத்தத்தில் கலக்க மரணம் இவனை நோக்கிவந்தது. எனினும் பகை முகாமினுள் பற்றையொன்றினுள் வைத்து விசமுறிப்பு மருந்து (ASV) ஏற்றப்பட்டது. மீண்டுமொருமுறை சாவிலிருந்து தப்பித்துக் கொள்ள தமிழீழம் ஒரு பெறுமதியான கரும்புலியை மீளப்பெற்றுக்கொண்டது. அத்திட்டம் வெற்றிபெற கிளிநொச்சி நகரம் விடுவிக்கப்பட, ஓ.அ.II வெற்றி உறுதிப்படுத்தப்படுகின்றது. மீண்டும் கடின தொடர்பயிற்சிகளை மேற்கொள்கின்றான். அக்காலத்தில் அவசியம் தேவைப்பட்ட ஒரு வெற்றியைப் பெறுவதற்காக தலைவரின் ஆசிபெற்று நகரும் கரும்புலியணியில், இலக்கின் மீதான தாக்குதல் தொடுக்கும் பொறுப்பை ஏற்று இணைந்துகொள்கின்றான். இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு அதிஉயர் பாதுகாப்புடன் பேணப்படும் மணவாளன்பட்டை எனும் இடத்தில் தரையிறங்கும் உலங்குவானூர்தியைத் தாக்கி அழிக்க வேண்டும்.

பல்வேறு சிரமங்களைத் தாண்டி குறித்த இடம்சென்று பகைவர்களுக்குள் ஓடிச்சென்று அவர்களுக்கு மத்தியில் நின்று அவர்களின் கண் முன்னால் தரையிறங்க முற்பட்ட உலங்கு வானூர்தியை வானில் வைத்தே ‘லோ' உந்துகணையால் தாக்கியழித்து பயத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்து நிற்கும் எதிரிகளின் மத்தியில் இவனும் ஏனைய வீரர்களும் தப்பிவந்த செயலானது கரும்புலித் தாக்குதல் வரலாற்றில் புதிய அத்தியாயமாகச் சேர்க்கப்பட்டது. இடைக்காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் இராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை வேவு எடுக்கப் பணிக்கப்பட்டான். அங்கு மக்களோடு மக்களாகவும் கரந்துறைந்திருக்கும் ‘கெரில்லா' வீரனாகவும் செயற்பட்டு பல பெறுமதியான வேவுத் தகவல்களைச் சேகரித்திருந்தான்.

களங்களினுள் செல்லும்போது முன்னும் களம் விட்டகலும்போது இறுதியாகவும் வெளிவருவது இவனது இயல்பான பண்பு. இவன் தலைமையில் சேகரிக்கப்பட்ட தகவல்களுடன் வன்னித்தளம் திரும்புமாறு பணிக்கப்பட்டான். இவர்களுக்கென ஒரு சாதாரண மீன்பிடிப் படகு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதில் இவனும் அறிவுக்குமரனும் ஏற முற்படுகையில் சற்றுநிதானித்தவன் அத்திட்டத்தைக் கைவிடுகின்றான். இவரும் ஒன்றாகப் போய் ஏதாவது நடந்தால் இவ்வளவு நாளும் கடினப்பட்டு சேகரித்த தகவல்கள் செல்லாக்காசு ஆகிவிடும். ஆதலால் அறிவுக்குமரனை முதலில் போகச்சொல்கின்றான். படகில் ஏறியவனிடம் இரண்டு கைக்குண்டுகளைக் கொடுத்துவிடுகிறான். அந்த துர்ப்பாக்கிய நிகழ்வு நடந்தே விடுகின்றது. எதிரிப் படகுகள் அறிவுக்குமரனின் படகை வழிமறித்தன பகைவன் சோதனையிட முயற்சிக்கையில் அறிவுக்குமரன் குண்டுகளை வெடிக்கவைத்து தன்னையும் படகையும் அழித்துக்கொண்டான்.

பூட்டோ எடுத்த முடிவால் வேவுத்தகவல்கள் பத்திரமாக வன்னித்தளம் வந்து சேர்ந்தது. அவர்களின் கோட்பாட்டின்படி பூட்டோவின் தீர்மானமானது முற்றிலும் சரியானது எனினும் உணர்வு ரீதியாக பூட்டோவை இது பாதிக்கவே செய்தது. அறிவுக்குமரனுக்குப் பதிலாகத் தான் வந்திருக்கலாமோ என அடிக்கடி கூறிக்கொள்வான். ‘கரும்புலிகளின்' வளர்ச்சிப் போக்கில் இவனது பங்களிப்பின் காரணமாக கரும்புலிகள் சம்பந்தமான விதிமுறைகளை எழுதுவதிலும் அதனைப் பரீட்சிப்பதிலும் இயக்கம் இவனை ஈடுபடுத்தலானது. இவன் தனது நடைமுறைச் செயற்பாடுகளினூடாக கோட்பாடுகளை உருவாக்கினான்.

கரும்புலிகளுக்கான சத்தியப் பிரமாணம், பயிற்சிகள், ஒத்திகைகள், விதிமுறைகள் அடங்கிய மரபு சார் யாப்பை உருவாக்கப் பெரும் பங்களிப்பைச் செய்தான். இவனது தொடர் அனுபவமும் செயற்பாடும் காரணமாக கரும்புலிகளுக்கான இலக்கங்கள் ஒதுக்கப்படும்போது இவனுக்கு க.1 ஒதுக்கப்பட்டது. அன்று முதல் இவன் ‘நம்பர் வண்' எனும் சங்கேத பாசையில் அழைக்கப்படலானான். பல்வேறு தரத்திலான போராளிகளுடனும் வயது வேறுபாடுடைய பொதுமக்களுடனும் இவன் பழகும் முறை வித்தியாசமானது. அந்தந்த வயதுக்காரர்களுடன் அவர்களின் குணாம்சங்களுடன் பழகினான்.

தனது அதிக ஓய்வு நேரங்களை சிறு குழந்தைகளுடனேயே செலவழித்தான். அவர்களுக்குச் சித்திரம் வரையப் பழக்குவதிலிருந்து பரீட்சைகளில் சித்தியடைய என்ன செய்யவேண்டும் என்பது வரை நடைமுறைச் சாத்தியமான வகையில் சொல்லிக்கொடுப்பான். எந்த நேரமும் இந்த நாட்டிற்காக வெடிக்கக் கூடிய கரும்புலி ஒருவனே தங்களுடன் பழகுகின்றான் என்பது அவர்களுக்குத் தெரிந்தே இருந்தது. எனினும் அதனை இவன் ஒருபோதும் ஒத்துணர்வைப் பெறுவதற்காகப் பயன்படுத்தியதே இல்லை. ஓயாத அலைகள் IV வெற்றி பெறுவது அசாத்தியமானது. ஒரு வேவுப்புலி வீரனோ ஒரு கரும்புலி வீரனோ பகை தொடர் காவலரண்களைக் கடந்து உள்நுழைவது முடியாமல் போனது. உள் நிலைமைகளை அவதானித்து உட்புறமாகத் தாக்குதல் தொடுத்தால் மட்டுமே எதிரி குழப்பமடைவான். பலரால் இயலாமல் போகையில் மீண்டும் பூட்டோ தெரிவானான்.

கரும்புலிகளால் ஒரு முன்முயற்சி இயலாமல் போனது எனும் வார்த்தையை கேட்கவே அவன் விரும்பவில்லை. பொதிசெய்யப்பட்ட சிறு ஆயுதங்களுடனும், உணவுப்பொருட்களுடனும் கடலினுள் இறங்கினான். கரையோரமாக நீண்ட தூரம் நீந்திச்சென்றான். கடற்கரை பூராகவும் இராணுவமும், கடலில்கடற்படையும் அதியுசார் நிலையில் நின்றது. கடலினுள் பகைப் படகுகள் ரோந்து செய்தவண்ணம் இருந்தன. கரையேறுவதோ கடலில் ஆழம் செல்வதோ சாத்தியமற்றதானது. மீண்டும் தளம் திரும்புவதை அவன் கற்பனைகூடச் செய்யவில்லை. செய் அல்லது செத்துமடி என்பதுவே இவனது தாரக மந்திரமானது. சாதகமான சூழலுக்காகக் கடலில் மிதந்தபடியே காத்திருக்கலானான். பாரங்களைக் குறைப்பதற்காக உணவுப் பொருட்களையும் ஆயுதங்களையும் கழற்றி விடலானான்.

தொலைத்தொடர்பு சாதனமும் ‘G.P.S ம் குப்பியும் மட்டுமே அவனிடம் மிஞ்சியிருந்தது. இரண்டு நாட்களாக கடல் நீரில் மிதக்கலானான். பசியும், தாகமும், கடல் நீரின் உப்புச் செறிவும் அவனைச் சித்திரவதை செய்தது. தண்ணீரில் மிதந்தபடி தண்ணீர் இன்றித் தாகத்தால் தவித்தான். அவனையும் மீறி வெளிவந்த கண்ணீரைத் தண்ணீராகச் சுவைத்தான். தாயையும் தலைவனையும் நினைத்து நினைத்து தாங்குதிறனை வளர்த்து, யுகங்களாகும் கணங்களைக் கழித்தான். பூட்டோ தடயமின்றி வீரச்சாவடைந்து விட்டானோ எனப் பெரும்பாலானோர் கருதத்தொடங்கினர். ஒருவாறு எதிரி முகாமிற்குள் புகுந்துகொண்டான். புற்களில் நனைந்திருந்த பனி நீரை நாக்கால் நக்கி நாக்கிற்கு தண்ணீர் காட்டிக்கொண்டான். உட்சென்றவன் தொடர்பெடுத்து தான் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தினான்.

அவன் கொடுத்த ஆள்கூற்றுத்தளங்கள் மீது எங்கள் ஆட்லறிகள் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின. பத்திற்கு மேற்பட்ட ஆட்லறிகளும் பல பல்குழல் பீரங்கிகளும், ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான எறிகணைக்களஞ்சியங்களும் அழித்தொழிக்கப்பட்டன. உணவின்றி, ஆயுதமின்றி, பூஞ்சணம்பிடித்த பூசணிக்காயைத் துண்டுதுண்டாகச் சாப்பிட்டவாறு, உயிரையும் இயங்கு சக்தியையும் தக்கவைத்தவாறு பலநாள் பணி தொடர்ந்தான். தனியான இவன் பகைத் தளத்தினுள் கரும்புயலாகச் சுழன்றான். பெரும் படையணி புகுந்ததாக செயலாற்றி நாசம் ஏற்படுத்தினான். தொலைத் தொடர்பை இடை மறித்ததில் பூட்டோ தனியாகத்தான் செயற்படுகின்றான் என்பதை பகைவன் அறிந்துகொண்டான். இவனைப் பிடிப்பதற்கு பலநூறு இராணுவத்தினரையும் பல உந்துருளி அணிகளையும் களத்தில் இறக்கி களைத்துப் போனான் எதிரி. இறுதியாக இவனை மீட்டுவர இன்னொரு கரும்புலியணி உள்நுழைக்கப்பட்டது. அப்பிரதேசம் இவனுக்குத் தண்ணிபட்ட பாடாக இருந்ததால் அவர்களையும் அழைத்துக்கொண்டு இருபத்தியாறாம் நாள் இவன் வெளியில் வந்தான்.

மெலிந்து, நோய்வாய்ப்பட்டு சிறிதளவு திரவ ஊடகங்களைக் கூட உட்கொள்ள முடியாத அளவிற்கு உதடுகளும் நாக்கும் வெடித்து, எலும்பும் தோலுமாக அவன் வெளிவந்த காட்சி காண்பவர் கண்களைக் கசிய வைத்து. தொடர்ந்து நிமோனியாக் காய்ச்சலுக்கு உள்ளானான். சிலவாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டவன் மீண்டும் பணிக்கு ஆயத்தமாகினான். அக்காலப் பகுதியில் இவன் முள்ளியவளைப் பகுதியில் தங்கியிருப்பதை அறிந்து இவனது தாய் மகனைச் சந்திப்பதற்காக மன்னாரில் இருந்து பேருந்தில் வந்திறங்கினார். அங்கு தென்பட்ட பெண் போராளிகளிடம் ஷபூட்டோ தங்கியிருக்கும் மருத்துவமுகாம் எதுவென கேட்க, "யாரு கரும்புலி பூட்டோவா?" என அவர்கள் கேட்டு முகாமிற்கு வழிகாட்டி விட்டனர். தாயும் மகனும் சந்தித்த அந்தக் கணங்கள் அவர்களுக்கே உரித்தானவை. பலவருடங்களாக மகன் கரும்புலி என்பது தாயிற்குத் தெரியும். தாய்க்குத் தெரியும் என்பது மகனிற்கும் தெரியும்.

ஆயினும் இருவரும் ஒருபோதும் அதுபற்றிக் கதைத்தது இல்லை. மகன் தான்பட்ட கடினங்களைக் கவிதைகளாக எழுதியிருந்தான். அவற்றை வாசித்த அன்னையின் கண்கள் நீர் சொரிந்ததை அருகிருந்தவர்கள் பார்த்தார்கள். அடுத்த பணிக்காக இவன் தயாராகிக்கொண்டிருக்கையில் தலைவரிடம் இருந்து தகவல் வருகின்றது, உலங்குவானூர்தி தாக்குதல் சம்பவத்தைப் படமாக எடுக்கும்படி பணித்திருப்பதாகவும் அதில் அவன் செய்த பாத்திரத்தை இவனையே நடிக்கும்படியும். விடுதலைப்புலிகள் சொல்லுக்கு முந்திச்செயலை வைத்திருப்பவர்கள். செய்தவற்றையும் சொல்லாமல் விடுபவர்கள். இக்குணாம்சத்தினால் வரலாறு திரிந்துவிடக்கூடாது என்பதற்காக தாக்குதல் செய்தவனையே அப்பாத்திரமாக நடிக்கச்சொன்னார்கள். வன்னிமண் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டிருந்த காலம். திரைப்படம் எடுப்பதற்கான போதிய வளங்கள் இல்லை.

ஆயுத தளபாடங்களையும், துணைப்பாத்திரங்களுக்குத் தேவையான ஆளணிகளையும் இவனே ஒழுங்குபடுத்தி படப்பிடிப்பை விரைவாக்கினான். படப்பிடிப்பின் நிமித்தம் பல்வேறு தரப்பினர்களுடனும் பழகவேண்டி ஏற்பட்டது. படப்பிடிப்பு நிறைவேறும் நிலையில் மீண்டுமொரு சிறு தவறு ஏற்பட்டது. உள்ளூர் முகவர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பூட்டோ விளக்கம் கோரலுக்கு உள்ளாக்கப்பட்டான். பலர் எதிர்பார்த்ததற்கு மாறாக தேச நன்மைக்காக உருவாக்கப்பட்ட பொறி முறைக்கு ஒத்துழைப்பதையும் தனது கடமைகளில் ஒன்றென வெளிப்படுத்தினான். இவன் நடித்த திரைப்படம் "புயல் புகுந்த பூக்கள்"என வரலாற்றுப் பதிவானது. இக்காலப் பகுதியில் வெளிச்சம் பவள இதழில் இவனது உள் நடவடிக்கைகள் பற்றிய ஒரு சம்பவத்தை புயலவன் எனும் பெயரில் எழுதியிருந்தான். தொடர்ந்து தேசத்திற்கான இவன் பணி தியாகத்தின் உச்சம் நோக்கி வேக மெடுத்தது. மறைமுகக் கரும்புலியாகச் செயற்படத் தொடங்கினான்.

அரசியல் தெளிவும், இலட்சியப் பற்றும், செயல்திறனும், நிதானமும் உள்ள போராளியாக இவன் ஒளிவீசினான். இவனது பன்முகத்திறமை மறைமுகக் கரும் புலிகளை பலமடங்காகப் பலம்பெறச் செய்தது. இவனதுசிலவருடச் செயற்பாடுகள் வெளித்தெரிய முடியாதவையாகின. ஆனால் தமிழினம் அதனை அனுபவித்துக்கொண்டிருக்கின்றது. சுதந்திர தமிழீழத்தின் பலமான அத்திவாரத்தினுள் இவனது உழைப்பு கலந்திருக்கின்றது. மாவிலாறைச் சாட்டாக வைத்து எதிரி யுத்தத்தைத் தொடங்கினான். முகமாலையைத் தாண்டி ஆனையிறவு நோக்கி எதிரி முன்னேறத் திட்டமிட்டிருக்கிறான். சம்பூர் மீது பெரும் இராணுவ அழுத்தத்தைப் பிரயோகிக்கின்றான். இராணுவத்தை திசைதிருப்பவும் குழப்பவும் அவசரமாக நடவடிக்கையில் இறங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பலமுறை தலைவனுக்கு தடைநீக்கியாகச் செயற்பட்ட பூட்டோ இம்முறையும் முதல் தெரிவானான். தலைவருடனும், தளபதிகளுடனும் தொடர் சந்திப்புக்களை மேற்கொண்டான்.

ஓகஸ்ட் ஆரம்ப நாட்களில் ஒரு நாள் இரவு இரண்டு மணியளவில் தலைவரிடம் இறுதி விடை பெற்றுக்கொண்டான். மறைமுகக் கரும்புலி மீண்டும் தரைக் கரும்புலியாக யாழ்ப்பாணத்திற்குள் பிரவேசித்தான். பாரிய இராணுவத் திருப்புமுனைச் சாதனைகள் எதிர்பார்க்கப்பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் சில நாட்களில் செய்திவந்தது. "நம்பர் வண்" தொடர்பு இல்லை என. இம்முறையும் தப்பிவருவான் என அவனைத் தெரிந்த அனைவரும் நம்பியிருந்தனர். ஆனால் பூட்டோ வீரச்சாவு உறுதியான செய்தியுடன் 2006ஆம் ஆண்டு மாவீரர்தினம் கொண்டாடப்பட்டது.

ஒரு வேவுப் புலி நிபுணனை, வரைபடக் கலைஞனை, ஒரு கரும்புலிக் கவிஞனை, பாடலாசிரியனை, எழுத்தாளனை, நடிகனை, உச்சவினைத்திறனுடைய அப்பழுக்கற்ற செயல்வீரனை, போராளிகளுக்கான ஒரு உதாரண புருசனை, பட்டறிவால் உருவான போரியல் ஞானியை, எல்லாவற்றுக்கும் மேலாக தேசத்தையும், தலைவனையும் நேசித்த ஒரு "நம்பர் வண்" ஐ தமிழீழம் பௌதீக ரீதியாக இழந்துவிட்டது. எனினும் தலைமுறைகள் கடந்து கடத்தப்படும் அவனது செயல் வீச்சுக்களின் விளைவாக சுதந்திர தமிழீழம் விடுதலை பெற்று, வளம்பெற்று தலைநிமிர்ந்து எங்கள் பெயர் சொல்லி வாழும். குறிப்பு :- இவனது செயற்பாடுகளில் சிலவற்றை மட்டும் இப்பகுதி கோடிகாட்டுகின்றது. காலம் கைகொடுக்கையில் இவன் வீரகாவியமாக விரிவான்.

கரும்புலி லெப்.கேணல் பூட்டோ நடித்த ‘புயல் புகுந்த பூக்கள்' என்ற முழுநீளத் திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் ‘பூட்டோ' என்ற பேரிலேயே வரும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அது மணவாளன்பட்ட முறிப்பில் கரும்புலியணியால் உலங்குவானூர்தியொன்று தாக்கியழிக்கப்பட்ட சம்பவத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. அத்தாக்குதலில் பங்குபற்றிய ஐந்து கரும்புலி வீரர்களில் நால்வர் வெவ்வேறு சம்பவங்களில் வீரச்சாவடைய எஞ்சியிருந்த ஒரேயொரு வீரன் இந்த பூட்டோ மட்டுமே. தற்போது அவரும் வீரச்சாவடைந்து விட்டார். பூட்டோ ‘கலையரசன்' என்ற பேரில் கவிதைகள் எழுதினார். சில பாடல்களும் எழுதியிருக்கிறார். சக கரும்புலி வீரன் மேஜர் நிலவனுக்காக இவர் எழுதிய பாடலான ‘உணர்வின் வரிகள் வரையும் கோடு' என்ற பாடல் அவற்றுள் முக்கியமானது.